From nswaminathan@... Fri Dec 28 22:00:35 2001
Return-Path:
Received: (qmail 26812 invoked from network); 29 Dec 2001 06:00:35 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 06:00:35 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 06:00:35 -0000
X-eGroups-Return: nswaminathan@...
Received: from [216.115.96.134] by n3.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 06:00:35 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 06:00:32 -0000
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 05:11:31 -0000
Received: (qmail 85874 invoked from network); 29 Dec 2001 05:11:31 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 05:11:31 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 05:11:32 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id fBT5AHh10969 for ; Fri, 28 Dec 2001 21:10:17 -0800 (PST)
Message-ID: <002601c19026$c8a07340$a1bd1b42@...>
To:
Subject: Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
Date: Fri, 28 Dec 2001 21:07:53 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Group-Post: member; u=65016889
X-Yahoo-Message-Num: 14321

புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் வித்தியாசமான பின்னணியில்
சொல்ல வேண்டிய அனுபவங்கள் நிறையவேஉள்ளன. இதில் கதையோடு
பின்னிய சரித்திரமும் இருக்கும். முதல் ஓரிண்டு தலைமுறைகளில் சொல்லப்
படாவிட்டால் கதையும் சரித்திரமும் காணாமலும் போய்விடக்கூடும்.

எழுதப்பட்ட பழைய கதைகளை மறுபதிப்புசெய்வதும் நல்லது.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
===============

-----Original Message-----
From: jaybee
To: agathiyar@yahoogroups.com
Date: Friday, December 28, 2001 4:06 PM
Subject: Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5



அன்புள்ள இராமுருகன்,

At 09:50 AM 12/28/01 -0800, you wrote:
>அற்புதமான உரைநடை. சரசரவென்று வாசகனைக் கையைப் பிடித்து அழைத்துக்
>கொண்டு போகும் சரளமும் லாவகமும் கூடி வந்ததற்கு, சொல்லும் விஷயத்தில்
>நேரடி அனுபவமும் லயிப்பும் முக்கியக் காரணங்கள். இந்த நேர்த்தி வெறும்
>எழுத்துக் கலை இல்லை. ஒரு ரசானுபவத்தின் உன்னதமான வெளிப்பாடு.
>
>ராமசாமிக் கிழவனாரின் சித்தரிப்பு, ஆர்.கே.லக்ஷ்மணோ, கோபுலுவோ
>வரைந்த கோட்டுச் சித்திரம் போல், மிகக் குறைந்த சொற்களில் அந்தப்
>பாட்டையாவைத் தத்ரூபமாகக் கண்முன் கொண்டு நிறுத்துகிறது.


அடேயப்பா! வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி!

>
>இந்தக் கட்டுரைகள் விரைவில் நூல் வடிவம் பெற வேண்டும். தமிழில் இது
>போன்ற பதிவுகள் ஆகக் குறைவே.


உண்மைதான்.
இந்தச் சம்பவங்களுக்கு நிலைக்களனாக விளங்கிய மலேசியா,
சிங்கப்பூரிலேயேகூட இவை அதிகம் வெளிவந்ததில்லை. அறுபதாண்டுகள்.
ஒரு ஷஷ்டியப்த பூர்த்தி. ஐந்து மாமாங்கங்கள். மூன்று தலைமுறைகள்.
இப்படியெல்லாம் ஒருகாலத்தில் நடந்தது என்பதுகூட
பெரும்பான்மையோருக்குத் தெரியாது.

மலேசியாவில் சிலர் எழுதியிருக்கிறார்கள்.
ரங்கசாமி என்ற மூத்த எழுத்தாளர், 'நினைவுச்சின்னம்' என்ற
தலைப்பில் மரண ரயில்வேயைப் பற்றி நாவல் எழுதியுள்ளார். ஷண்முகம்
என்பவரும் எழுதியிருக்கிறார்.
ரங்கசாமி 'புதியதோர் உலகம்' என்னும் நாவலும் எழுதியுள்ளார்.
புத்தகமாக வெளிவந்திருக்கிறது. ஜப்பானியர் ஆதிக்கத்தில் ரப்பர் எஸ்ட்டேட்டில்
நடந்த சம்பவங்கள். இரண்டுமே அருமையான நாவல்கள்.
'நேதாஜியின் தென்கிழக்காசிய விடுதலைப்போர்' என்ற
தலைப்பில் என் அண்ணன் பிள்ளைத்தமிழ்க்கவிஞர்,
புலவர் அன்பானந்தத்தின் மாமனார் கு.மு. வீராசாமி பிள்ளை எழுதி,
அது புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்' 'புயலில் ஒரு தோணி'
ஆகியவையும் இதே நிலக்களன், சம்பவங்களைக் கருப்பொருளாகக்கொண்ட
நாவல்கள். ப.சிங்காரத்தைப் பற்றியும் பிறகு சொல்கிறேன். அவர்,
பினாங்கிலும் மீடானிலும் எங்கள் வர்த்தக நிறுவனத்தில் இருந்தவர்தான்.
இன்னும் சில கட்டுரைகள் இருக்கின்றன.
ஒரு விஷயம் என்னவென்றால், இவற்றைப் பற்றி
எழுதியுள்ளவர்களில் ஒரு கணிசமான எண்ணிக்கையினர் எங்களுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள்.

மலேசிய கலை, இலக்கிய, அறிவியல் உலகை இப்போது
மூடியிருக்கும் இருட்டடிப்பு, lobbying, கோஷ்டியிசம், ஆக்கிரமிப்பு
ஆகியவை ஒழிந்தால்தான் ஒரு நல்ல விடிவு காலம் ஏற்படமுடியும்.
இப்போது சில வெளிநாட்டு lobbyக்களும் சேர்ந்துகொண்டு
நிலைமையை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த லட்சணத்தில் வாழ்ந்தாருக்கு மாரடித்தல் வேறு.


>
>கேரள மாநிலத்திலிருந்து ஜப்பானில்குடியேறி அங்கே உணவு விடுதி
>நடத்திப் புகழ் பெற்ற 'நாயர் சான்' உலகப் போர்க்கால அனுபவங்களைப்
>புத்தகமாக எழுதியிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.


ஆம். ஜப்பானில் குடியேறி ஜப்பானியப் பெண்ணை மணந்து
கொண்டு ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்திவந்தவர் அவர்.
பெரிய புத்தகம்தான். தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.
அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து மேல்விபரங்கள் எழுதிகிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி

>
>நாயர் சான் புத்தகத்தை விட ஜேய்பி-சான் புத்தகம் பல மடங்கு சிறப்பாக
>இருக்கும்.
>
>அன்புடன்,
>இரா.முருகன்
>
>பின்குறிப்பு : முத்தாய்ப்பு வைத்து முடிக்கும் அந்த இரண்டு வரிகளை ரொம்பவும்
>ரசித்தேன்.
>
>
>--- jaybee wrote:
>> At 09:50 PM 12/7/01 +0800, you wrote:
>> >
>> 'வயிற்றைக் கழுவிக்கொள்ள' என்று சொன்னேனல்லவா?
>> உண்மையான வார்த்தை. நிறையக் கள்ளை ஊற்றி வயிற்றைக் கழுவிக்
>> கொண்டிருப்பார். அவர் சாதாரணமாக இரு குரல்களில் பேசுவார். அதில்
>> ஒன்று எம் ஆர் ராதா போலிருக்கும். மாற்றி மாற்றிப்பேசுவார். கள்
>> அதிகமாக
>> உட்சென்றிருந்தால் குரலின் கரகரப்பு அதிகமாகியிருக்கும்.
>>
>>
>> அப்பால பாத்தாக்கா.... இப்ப நம்ம வூட்டுக்கு மூணாங்கடய
>> வெலக்கி அப்பிடியே வாங்கி, அங்க இப்ப இருக்குற கோப்பிக் கடய
>> வச்சுக்கிட்டானுங்க.
>> அப்ப ஏமாந்ததுதாங்க. இப்ப கக்கூசு கழுவிக்கிட்டு$3&%......"
>>
>> எல்லாவற்றிற்கும் ஒரு சுழி வேண்டுமல்லவா?
>> இணையத்திலும்தான்.
>>
>




---------------------------------------------------------------------------------
For archives click
http://groups.yahoo.com/group/agathiyar/messages
---------------------------------------------------------------------------------






Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/