From jaybee@... Sat Dec 29 00:29:52 2001
Return-Path:
Received: (qmail 67649 invoked from network); 29 Dec 2001 08:29:52 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 08:29:52 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 08:29:52 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.110] by n5.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 08:29:51 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 08:29:51 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 08:28:02 -0000
Received: (qmail 762 invoked from network); 29 Dec 2001 08:28:02 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 08:28:02 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 08:28:01 -0000
Received: from user (sp-103-103.tm.net.my [210.186.103.103]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GP300A8OJIM38@...> for agathiyar@yahoogroups.com; Sat, 29 Dec 2001 16:28:01 +0800 (SGT)
Date: Sat, 29 Dec 2001 16:31:18 +0800
Subject: Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
In-reply-to: <20011229004453.32207.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20011229163118.0188640c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011229080802.0077963c@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14323

At 04:44 PM 12/28/01 -0800, you wrote:
>
>-
>> ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்' 'புயலில் ஒரு தோணி'
>> ஆகியவையும் இதே நிலக்களன், சம்பவங்களைக் கருப்பொருளாகக்கொண்ட
>> நாவல்கள். ப.சிங்காரத்தைப் பற்றியும் பிறகு சொல்கிறேன். அவர்,
>> பினாங்கிலும் மீடானிலும் எங்கள் வர்த்தக நிறுவனத்தில் இருந்தவர்தான்.
>>
>>
>
>அன்புள்ள ஜேய்பி-சான்,
>
>ப.சிங்காரத்தின் படைப்புக்கள் மறுபதிப்பாக வெளிவந்துள்ளன. அடுத்த வாரம்
>புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டும்.
>
>எம்.வி.வி, கு.அழகிரிசாமி, ராஜநாராயணன், சிதம்பரசுப்ரமணியன்
>வரிசையில் வைக்கத் தகுந்த நல்ல எழுத்தாளர் அவர் என்று தெரியும். என்
>நண்பர், தினமணி சிவகுமார் அவர் எழுத்தை சிலாகித்து நிறையப் பேசுவார்.
>அவரைப் பேட்டியும் எடுத்திருக்கிறார்.
>
>ப.சிங்காரம் பற்றி இன்னொரு இழையில் சொல்லுங்களேன்..
>
>அன்புடன்,
>இரா.முருகன்


இந்த இழையில்கூட இடம்பெறலாம்.
இதிலும் சம்பந்தமுள்ளவர்தாம்.

என்னுடைய தந்தையாரின் டயரியின் இரண்டு பக்கங்களை
ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன்.

http://www.geocities.com/visva.geo/sksdiary31.html

கூட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
ஆகவே விளக்குகிறேன்.

1941-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1, 2 தேதிகளில்
எழுதப்பட்ட பக்கங்கள்.

அதில் 1-ஆம் தேதியன்று 'அ' என்னும் அம்மாளுக்கு
Dr.Leizenberg என்னும் டாக்டரிடம் காட்டி ஊசி போட்டு மருந்து
வாங்கிக்கொடுத்த விபரம் காணப்படுகிறது. அந்த அம்மாளுக்கு
இரவு 4-00 மணிக்கு இடுப்புவலி வந்த விபரமும் காணப்படுகிறது.

அடுத்த பக்கத்தில் அந்த அம்மையாரைக் காலை 8-00 மணிக்கு
எலிசபெத் ஆஸ்பத்திரியில் சேர்த்ததும் 8-25க்கு ஆண்குழந்தை
பிறந்ததும், பூச்சியம்மாள் துணையாக இருந்தது, செகண்ட் கிளாசில்
நாள் வாடகை 10 ரூப்பியாவுக்குத் தங்கியிருந்ததுவும் இருக்கிறது.
(அந்தக்காலத்தில் இரண்டரை ரூபியாவுக்கு ஒரு பவுன் தங்கம்
வாங்கலாம்).
Stoll, Bok ஆகியோர் டச்சுக்கார டாக்டர்கள். லீஸென்பர்க்
ஜெர்மானியர்.
'அ' என்பவர் அழகுரெத்தினம் அம்மாள்.
ஆண்குழந்தைதான் ஜேய்பி.

ஜூலை 1-ஆம் தேதிப்பக்கத்தின் மேற்புறத்தில் late entry-யாக
ஒரு செய்தி காணப்படுகிறது.

"1-7-2602 ஆனி மாதம் 17 தேதி புதன்"

"இன்று நல்லதம்பி, சிங்காரம், சேதுராமன் மூவரும் சரக்குடன் தொங்கானில்
பினாங்குக்குப் போகிறார்கள். பயணம் பண்ண பிளவான் போய்வரப்பட்டது."

தொங்கான் Tongkang என்பது ஒரு வகையான பெரிய
தோணி. பிளவான் என்பது வட சுமாத்ராப் பகுதியின் முக்கிய
துறைமுகம். மேடானிருந்து வடக்கே இருக்கிறது. மேடான்தான்
சுமாத்ராவின் தலைநகரம். இந்தோனேசியாவின் இரண்டாவது
முக்கிய நகரம். பிளவானிலிருந்து வடகிழக்கே Straits of Malaccaவுக்கு
அப்பால் பினாங்கு இருக்கிறது.

அக்காலத்தில் சரக்குகளை மேற்கூறிய தொங்கான்களில்
ஏற்றித்தான் அனுப்புவது வழக்கம்.

நாவலாசிரியர் சிங்காரமும் மற்ற இருவரும் தொங்கானில்
சென்றபோது, மலாக்கா ஜலசந்தியின் நடுவில் அவர்களின் தொங்கான்
புயலில் சிக்கிக்கொண்டது.

அந்த அனுபவம்தான் 'புயலில் ஒரு தோணி' நாவலின்
தலைப்பாக உருவாகியது. அந்த நிகழ்ச்சியும் அந்த நாவலில்
வருகிறது. சிங்காரம் அந்த இடத்தை மிகவும் graphical-ஆக
விவரித்திருப்பார்.

அன்புடன்

ஜெயபாரதி

====================