From naga ganesan@... Sat Dec 29 05:10:01 2001
Return-Path: Received: (qmail 95483 invoked from network); 29 Dec 2001 13:10:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 13:10:01 -0000
Received: from unknown (HELO n29.groups.yahoo.com) (216.115.96.79) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 13:10:01 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [216.115.96.170] by n29.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 13:10:00 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 13:09:56 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 13:04:15 -0000
Received: (qmail 90168 invoked from network); 29 Dec 2001 13:04:15 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 13:04:15 -0000
Received: from unknown (HELO n9.groups.yahoo.com) (216.115.96.59) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 13:04:15 -0000
Received: from [216.115.96.118] by n9.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 13:04:14 -0000
Date: Sat, 29 Dec 2001 13:04:13 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [tamil-ulagam] Foretelling Baby's sex
Message-ID: In-Reply-To: <3.0.3.32.20011229085858.01bd4670@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1716
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.181
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14324
--- In agathiyar@y..., Palaniappan A wrote:
> ஆண்/பெண் பிள்ளை, கூன்,குருடு போன்ற பிள்ளைகள் பிறக்கும் வழி, ஏன் பிறக்கின்றன
>என திருமூலரின் பாடல்கள் கூறுகின்றனவே.
திருஇமந்திரத்தில் கூன், குருடு ஏன் பிறக்கின்றன என்று சொல்லும்
பாக்களை நான் படித்ததில்லை. விளக்கினால் மிக்க நன்றி.
ஜெயங்கொண்டார் எழுதிய மடல் உலோகாயத நூல், உலோகாயதர்
பற்றிய பண்டைப் பழமொழி: "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்".
தாம் காணாத ஒன்றை அவர்கள் பிரமாணமாக ஏற்றுக் கொள்வதில்லை.
தற்கால விஞ்ஞானமும் அவ்வழியில்தானே முன்னேறியிருக்கிறது.
லோகாயதர் 4 பூதங்களையே உண்மை என்று கொள்வர்:
நிலம், நீர், நெருப்பு, காற்று. ஐந்தாவதாகச் சொல்லப்படும்
ஆகாசத்தை அவர்கள் ஒப்பார். மற்ற நான்கின் ஒரு கூறு
ஆகாசம் என்பர்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணம், உமிழ்நீர் சரியான விகிதத்தில்
கலந்தால் நாவில் தோன்றும் சிவப்பு போலவும்,
(இதை ஆதிசங்கரரும் சொல்கிறார் என்று கோல்ப்ரூக்
என்பவர் சுமார் 150 ஆண்டு முன்னால் எழுதியிருக்கிறார்,
எந்த நூல் என்று சமற்கிருத அறிஞரைக் கேட்டுக்கொண்டுள்ளேன்).
ஆத்திப் பூ, வெல்லம், பழைய சோறு, தண்ணீர் விட்டுக்
காய்ச்சினால் மது தானே உருவாவது போலவும்,
(இதனை மணிமேகலையும் பேசும்).
உடம்பில், மேல்சொன்ன நிலம், நீர், நெருப்பு, காற்று கலந்து
வரும் உணர்ச்சி தான் உயிர், அப்பூதங்களின் சரி சமனநிலை
திரிந்தால் உயிர் அழிகிறது என்றும் உலோகாயதர் கொள்கை.
இதனை செயங்கொண்டார் விளக்கியுள்ளார். மடலில் காண்க.
திருமந்திரம் சைவக் கடல். மூலர் கருத்துக்கள் iஇதனின்று
மாறிநிற்கும். அவற்றை நீங்களோ, இதனைப் படிப்போரோ
காட்டினால் மகிழ்ச்சி.