From naga ganesan@... Sat Dec 29 14:51:56 2001
Return-Path:
Received: (qmail 83160 invoked from network); 29 Dec 2001 22:51:55 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 22:51:55 -0000
Received: from unknown (HELO n33.groups.yahoo.com) (216.115.96.83) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 22:51:56 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [216.115.96.168] by n33.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 22:51:56 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 22:51:53 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 15:38:55 -0000
Received: (qmail 52757 invoked from network); 29 Dec 2001 15:38:55 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 15:38:55 -0000
Received: from unknown (HELO n21.groups.yahoo.com) (216.115.96.71) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 15:38:56 -0000
Received: from [216.115.96.134] by n21.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 15:30:25 -0000
Date: Sat, 29 Dec 2001 15:38:52 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Kama worship in Tamil country
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5396
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.223.26.148
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14326


--- In tamil-ulagam@y..., "Ramani Naidu" wrote:
> மார்கழி நாள் மூன்று - நாச்சியார் திருமொழி தொடர்
> 18.12.2001
>
> கட்டுரை மூன்று
> நாச்சியார் திருமொழி கட்டமைப்பு
>
> சங்கப் பாடல்களில் காமன் வழிபாடு பேசப்படுவதில்லை. சிலப்பதிகாரத்தில்
>இiந்திரன் வழிபாடு பேசப்படுகிறது. ஆனால் காமன் வழிபாட்டு முறைகள்
>பற்றிய குறிப்புகள் இiல்லை.

அன்பின் பேரா. ரமணி நாயுடு அவர்களுக்கு,

தமிழில் காமன் வழிபாடு பற்றி விரிவாக முதலில்
பேசும் நூல் கொங்குவேளிர் செய்த பெருங்கதை தான்.

பெருங்கதையின் மூன்றாம் காண்டம் மகத
காண்டம் ஆகும். இiதில் ஐந்தாம் படலம்
"பதுமாபதி போந்தது". இiந்த ஆசிரியப்பாவில்
115 அடிகளில் கொங்குவேள் காமன் கோட்டத்தையும்
காமன் விழாவையும் காமன் வழிபாட்டையும் விவரிக்கிறார்.
கொங்குவேள் காலத்துக்குப் பிற்பட்டவள் ஆண்டாள்
நாச்சியார். அகவற்பாவால் இiயன்ற பெருங்கதைக்கும்
சங்க இலக்கியங்களுக்கும் உள்ள ஒற்றுமையை
முனைவர் ரா. விஜயலட்சுமி (திராவிடச் ஒப்புமைச்
சொல்லகராதி ஆசிரியர் தாமஸ் 'பர்ரோவின்
ஆய்வு மாணவி. 20 ஆண்டுக்கு மேலாக
உலகத் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் பணி). நூலாக
மிக விரித்து எழுதியுள்ளார்.

[பெருங்கதையின் இiரண்டு முழுச்சுவடிகள் வே. ரா. தெய்வசிகாமணியாருக்குக்
கிடைத்தது. ஒன்று கரையானாலும், மற்றொன்று ஈழ நாட்டார்
அச்சுப்போடுகிறேன் என்று வாங்கிச் சென்றும் அழிபட்டது
கொடுமை. உவேசா வே. ரா. தெய்வசிகாமணியாருக்கு
"உனக்குத் தான் கிடைக்கும் பெருங்கதை.
கிடைத்தால் கொண்டுவரவும்" என்று எழுதிய கடிதத்தைப்
பற்றி கல்வெட்டறிஞர் செ. இiராசு அடிக்கடி சொல்வார்.]

கொங்குவேளிர் இiயற்றிய
பெருங்கதை
(உ. வே. சா. நூலகம், சென்னை, 1968)

மூன்றாவது
மகத காண்டம்

5. பதுமாபதி போந்தது

புதுமலர்க் கோதை புனையிருங் கூந்தற்
பதுமா பதியெனும் பைந்தொடிக் கோமகள்

(முரசறைதல்)

கன்னி யாயந் துன்னுபு சூழ
மதிற்புறங் கவைஇiய புதுப்பூங் காவின்
மகர வெல்கொடி மகிழ்கணைக் காமற்கு - அடி: 30
நகரங் கொண்ட நாளணி விழவினுள்
எழுநா டோறுங் கழுமிய காதலொடு
வழிபா டாற்றிய போதரு மின்றென
அழிகவுள் வேழத் தணியெருத் தேற்றிய
இடியுமிழ் முரசினி ருங்கண் டாக்கி

[.......]

காஞ்சுகி மாக்கள் சேர்ந்துபுடை காப்பக் - அடி: 110
கண்டோர் விழையுந் தண்டாக் காதலொ
டருந்தவ முண்மை யறிமி நீரெனப்
பெருஞ்சாற் றுறூஉம் பெற்றியள் போலப்
பைந்தொடி மகளிர் நெஞ்சுநிறை யன்பொடு
வண்ண மலருஞ் சுண்ணமுந் தூவ
அநங்கத் தானத் தணிமலர்க் காவிற்
புலம்படை வாயில் புக்கனள் பொலிந்தென்.

-----------------------------------------

அபிதான சிந்தாமணி, ப. 409

"காமன் கோட்டம் - மன்மதனுடைய கோயில்
இiராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு
சோலையில் இiவ்வாலயம் இருந்தது.
இiதில் தலைவன் தலைவிகள் இiருத்தற்குரிய
மணவறை முதலியன இiருந்தன. இiராசகிரியத்தில்
இiத்தெய்வத்திற்கு விழவு நடந்ததென்றும்
அதன் காலவரை ஏழுநாளென்றும் நகரத்தார்
இiத்தெய்வத்தைத் தரிசித்தற்கு இiங்கே
வருவதுண்டென்றுத் தெரிகிறது. கண்டோர்க்கு
இiன்பமளிக்கும் தோட்ட முதலியன இiக்
கோட்டத்தைச் சூழ்ந்திருந்தன. உதயணன்
பதுமாவதியை முதலிற் கண்டு களித்தது
இiக்கோட்டத்தின் வாயிலிலேதான். தம்முடைய
எண்ணம் பலிக்க வேண்டுமென்று தலைவன்
தலைவிகள் தனித்தனி இiதிலிருந்து
தானஞ் செய்வதுண்டு (பெருங்கதை)"

---------------------------------------






-------------------------------------------

சங்க இiலக்கிய நூல் உரைப்பதிப்புகளில்
சிறந்தது இi. வை. அனந்தராமையரின்
கலித்தொகை உரை. அப்பப்பா எத்தனை
எத்தனை மேற்கோள்கள்!! பழந்தமிழ்
அன்பர்கள் இiப்புத்தகம் கட்டாயம்
படிக்கவேணும். தமிழ்ப் பல்கலைக் கழகம்
மறுஅச்சுச் செய்துள்ளது (1984).
விற்காமல் தேங்கிக் கிடந்தது முன்னர்.

அனந்தராமையர் உரையிலிருந்து
சந்திரா எழுதிய சுட்டி:
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/7513

---------------------------------------------

சிலப்பதிகாரத்தில் காமன் வழிபாடு பற்றிய
குறிப்பு இiல்லை என்கிறீர்கள். ஆனால்,
இiருக்கிறது.

சிலப்பதிகாரம்
-------------------

6. கடலாடு காதை

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்ளவிழ் பூம்பொழிற் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயருமோர் விஞ்சை வீரன்

விஞ்சைவீரன் = வித்யாதரன்.

-------------------------------------------------

கலித்தொகை வடநாட்டு மரபுகள்
தமிழ்நாட்டில் புழங்கிய பின்னர் உருவானது.
சங்க நூல்களுள் பிந்தையது. முன்னூல்களில்
சிவனே மிகக் குறைச்சல், இல்லையென்றே
சொல்லலாம். எல்லாம் திருமால் தான்.
(திரு < ஸ்ரீ). சிவன் அதிகம் விளங்கும்
சங்க நூல் கலித்தொகையே. கலித்தொகைக்
காமன் குறிப்புகள் அதன் காலம் பிற்பட்டது
என்று காட்டிநிற்கும். சிலம்பு, பெருங்கதை,
ஆண்டாள் போல.

தற்போது சங்க நூல் காலத்தை ஆராய்ந்து
வரும். பேரா. ஹெர்மன் தியக்கன் கருத்து
வையாபுரி பிள்ளையினது போல இருக்கிறது.
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind0112&L=indology&S=&P=3372

காமம் என்ற சொல்லே திராவிடச் சொல்
என்பர். காமன் வழிபாடு பண்டைத் திராவிடருடையது
என்று பேரா. அஸ்கோ பார்போலா ஒரு
கட்டுரையைத் தம் நூலுள் (சிந்து முத்திரைகளின்
திறவு "Deciphering the Indus script").
எழுதியுள்ளார்.

தமிழில் சுமார் ஒரு 600 பிள்ளைத்தமிழ் நூலுண்டு.
அவற்றில் ஆண்டாள் பிள்ளைத்தமிழில் தான்
காம நோன்புப் பருவம் பத்து பாடல்களாகப்
பாடப்பட்டுள்ளது.

காமன் கதைப் பாடல் ஆர்க்காடு மாவட்டங்களில்
இன்றும் தெருக்கூத்தாகவும் நோன்பாகவும்
நிகழ்கிறது. இராஜகோபால் என்பவர் ஆய்வுப்பட்ட
நூலைப் பார்த்ததாக ஞாபகம். புஸ்தகவிபரம்
தேடி எடுத்துத் தரவிருக்கிறேன்.


அன்புடன்,
நா. கணேசன்