From ramaninaidu@... Sat Dec 29 14:52:06 2001
Return-Path:
Received: (qmail 57585 invoked from network); 29 Dec 2001 22:52:07 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 22:52:07 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 22:52:06 -0000
X-eGroups-Return: ramaninaidu@...
Received: from [216.115.96.151] by n8.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 22:52:06 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 22:51:59 -0000
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 16:53:25 -0000
Received: (qmail 48665 invoked from network); 29 Dec 2001 16:53:24 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 16:53:24 -0000
Received: from unknown (HELO smtp017.mail.yahoo.com) (216.136.174.114) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 16:53:24 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.188) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 29 Dec 2001 16:53:21 -0000
Message-ID: <018301c19089$a3f75820$bceac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" ,
Subject: thiruppavai 15 tamil
Date: Sat, 29 Dec 2001 22:02:48 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14327

திருப்பாவை - நாள் பதினைந்து - பாடல் பதினைந்து

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்றழையேன் மீன் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதராய் உனக்கென்ன வேறுடையை
எல்லோரும் போந்தாரோ போந்தார் போல் எண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயானைப் பாடேலேரெம்பாவாய்.

திருப்பாவையின் பதினைந்தாம் பாடல் தோழியர்க்கும் பாவைக்கும் இடையே நடந்த உரையாடலை நாடகமாக்கித்
தருகிறது. பாடலின் கடைசியில் பாவையும் தோழியரோடு வந்து சேர்ந்து கொள்ள பாவை நோன்பு
தொடர்கிறது.

முந்தைய பாடலின் தொனி இந்தப் பாடலிலும் முதல் வரியில் தொனிக்கிறது. எல்லே இளங்கிளியே
என்றழைத்து அவளைத் தம்மோடு சேர அழைக்கிறார்கள். இன்னமும் தூங்குகிறாயோ? என்ற கேள்வி இன்னமும்
தூங்குகிறாளோ? என்ற ஐயத்தின் வெளிப்பாடாகக் கூட அமைகிறது எனலாம். ஆமாம் அவள் இன்னமும்
உண்மையிலேயே தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாள் என்று தமக்குள் சொல்லிக் கொள்வதாக அமைகிறது என்று
கொள்ளலாம்.

என்றாலும் முதல் முறையாக உள்ளே இருந்து மறுமொழி கேட்கிறது. தோழியர் நிம்மதிப் பெருமூச்சு
விட்டிருக்கத்தான் வேண்டும். ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பினால் யாருக்கும் எரிச்சல் வரத்தான் செய்யும்.
எனவேதான் சில்லென்றழைக்காதீர்கள் என்கிறாள்.

தோழியர் அவளைச் சீண்ட ஆரம்பிக்கிறார்கள். எங்களுக்குத் தெரியும் உன் வார்த்தைகளை நீ எப்படிக்
காப்பாற்றுகிறாய் என்பது. என்கிறார்கள். பதில் சுணக்கமின்றி வருகிறது. உங்களையும்தான் எனக்குத்
தெரியும். உங்கள் வாய்ச் சாலகமும் தெரியும், என்கிறாள். என்றாலும் தான் தூங்கித்தான் போய்விட்டோம்
என்பது அவளுக்குத் தெரிகிறது. அதனால்தான் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்களேன் என்பதைப் போல
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக என்கிறாள். தோழியர் சீண்டலைத் தொடர்கிறார்கள். அது என்ன
உன்னை மட்டும் சிறப்பாகக் கொள்வது? மற்றவரைப் போலவே நீயும் உடன் வந்து எங்களோடு சேர வேண்டும்,
என்கிறார்கள். தோழியர் எல்லோரும் வந்து சேர்ந்துவிட்டாரோ என்ற கேள்விக்கு நாங்கள் என்ன
பதிலளிப்பது? நீயே வந்து பார்த்துக் கொள் என்கிறார்கள்.இதற்குள் உள்ளே இருந்தவள் எழுந்து வந்து பிறரோடு
சேர்ந்து கொள்ள பாவை ஊர்வலம் தொடர்கிறது. குவளயா பீடம் என்ற யானையை வதம் செய்த கிருஷ்ணன்
புகழைப் பாடிப் போகிறார்கள்.

இந்தப் பாடலில் முக்கியமானதொரு வைஷ்ணவ லட்சணம் சிறப்புப் பெறுகிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக
வைஷ்ணவர் ஒருவரை மற்றவர் குறை சொல்லும் போது குறை சொல்கிறவர் அதை அப்போதே மன்னிப்பதை குறை
காணப்பட்டவர் உணர்ந்து மதிக்கிறார்.

தமிழ் பக்தி இலக்கியம் தன் நாடகத் தன்மைக்குச் சங்க இலக்கியங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. வாழ்வின்
சின்னஞ்சிறு கணங்களை உயிர்த் துடிப்போடு கூடிய படங்களாக்கித் தருவது சங்க இலக்கியங்கள்.
கலித்தொகையில் நாடகக் காட்சிகளாகவும் பிற பல சங்க இலக்கியங்களில்
னிமொழியாகவும் இக்காட்சிகள் வரையப்படுகின்றன.
சிற்றில் நற்றூண் பற்றி
நின் மகன் யாண்டுளன் கொல்லோ
என வினவுதியாயின்
என் மகன் யாண்டுளனாயினும் அறியேன்
ஓரும் புலி சேர்ந்து போகிய கல்லளை போலத்
தோன்றிய வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.
என்ற பாடலைப் பாருங்களேன்.

பாவைநோன்பின் முக்கியமானதொரு திருப்பத்தைத் திருப்பாவையின் பதினைந்தாம் பாடல் குறிக்கிறது.

முதல் பாடலில் பாவை நோன்பிருக்கப் பொதுவானதோர் அழைப்பு.
இரண்டாம் பாடலில் பாவை நோன்பிருப்போரின் குணங்களின் விவரிப்பு.
மூன்றாம் பாடலில் பாவை நோன்பின் பயன்கள்.
நான்காம் பாடலில் மழை எனும் பெயரில் இறைவன் கருணை கோரிப் பிரார்த்தனை.
ஐந்தாம் பாடலில் ஈடேற்றத்துக்கான உறுதி.
ஆறாம் பாடலுக்கு வரும்போது ஒருத்தியைத் தவிரப் பிறர் அனைவரும் பாவை நோன்பிருக்கக் கூடியாயிற்று.
ஆறாம் பாடல் முதல் பதினைந்தாம் பாடல் வரையில் இப்படிப் பார்ப்பது ஒரு நோக்கு. இந்தப் பாடல்களையே
வேறு விதமாகப் பார்ப்பதும் உண்டு. ஆறாம் பாடல் தொடங்கி ஒவ்வொருத்தியாகப் பாவை நோன்பில் கலந்து
கொள்ள அழைப்பதாகக் கொள்வதும் உண்டு.
பாவையரில் தலைவியும் வந்து சேர்ந்தபின் பாடப்படுபவை பதினைந்தாம் பாடல் தொடங்கிப் பின் வரும்
பாடல்கள். இதையே கடைசிப் பாவையும் வந்து சேர்ந்த பின் அனைவருமாகச் சேர்ந்து பாடுகிற பாடல்கள்
பதினைந்தாம் பாடல் தொடங்கி வரும் பாடல்கள் என்றும் காண்பதுண்டு. பதினாறாம் பாடலில் கோயில் சென்று
சேர்வது என்று இவ்வாறு பிற பாடல்களிலும் இறைவனைத் துயிலெழுப்புதல், இறைவனின் அவைக்குச் சென்று சேர்தல்
என்ற காட்சிகள் இப்பாடல்களின் பாடு பொருளாகின்றன. இப்படியாக பதினைந்தாம் பாடலில் குறிப்பிட்ட
திருப்பம் நடக்கிறது.

சம்பிரதாயமான விளக்கம் இப்பாடலின் நாயகியை திருமங்கை ஆழ்வாரோடு பொருத்திப் பார்க்கும். பத்துப்
பாடல்களில் திருமங்கை ஆழ்வார் நாராயணராகிய கடவுளையும் அவருடைய அவதாரங்களையும் பொருத்திப்
பார்க்கிறார். முதல் பாடலில் ராமனாக வைதேகியோடு காட்டில் நடந்த அடிகளே கடவுளரும் வணங்கும் அடிகள்
என்பார்.

மேலும் திருமங்கை ஆழ்வார் தம்மைத் தம் பாடல்களில் கிளியென்றே கூறிக் கொள்கிறார். கிளிபோல
மிழற்றி நடந்து, மென்கிளி போல மிக மிழற்று மென்பெடையே போன்ற அடிகளைப் பாருங்கள். எனவே
பதினைந்தாம் பாடலில் முதலடி அழைப்பது திருமங்கை ஆழ்வாரைத்தான் என்பர்.

தவிரவும் திருமங்கை ஆழ்வார் தம் பணி நம்மாழ்வார் கூறிப் போனதைத் திருப்பிக் கூறுவதுதான் என்று
கூறியிருக்கிறார். மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற என்கிறார். அப்படியும்
திருமங்கை ஆழ்வார் கிளிப்பிள்ளை ஆகிறார்.
ஆவறிவாய்ச் செய்தறிவார் அஞ்சன மாமலை போலே
காவல் யானை கொம்பொசித்த கண்ணனெனும்
போன்ற வரிகள் மூலம் வல்யானை கொன்றதைத் தமது பாடல்களில் திருமங்கை ஆழ்வார் பாடிப்
போயிருக்கிறார். மேலும் பகைவரை அழிக்காமல் நெறிப்படுத்திய கண்ணனை
குன்றமெடுத்து ஆநிரை காத்தவனை
குன்றெடுத்த தோளினானை
போன்ற வரிகளில் கொண்டாடுகிறார்.

மேற்படி விளக்கத்தைப் படிப்பவர் மனதில் ஒரு கேள்வி எழுவது இயற்கை. திருமங்கை ஆழ்வார் காலத்தால்
ஆண்டாளுக்குப் பின்னவர். எனவே ஆண்டாள் பாடலில் அவருக்குப் பின் தோன்றிய ஆழ்வாரைப் பற்றிய
குறிப்பு இருக்கிறது என்பது எவ்வகையில் பொருந்தும் என்பதே அந்தக் கேள்வி. சரியான கேள்விதான்.
என்றாலும் சம்பிரதாயமாக விளக்கம் தருகிறவர்கள் எதிர்நோக்கும் வகையில் அமைந்தது ஆண்டாளின்
திருப்பாவை என்று கூறுவார்கள்.




_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com