From ramaninaidu@... Sat Dec 29 14:52:23 2001
Return-Path:
Received: (qmail 57849 invoked from network); 29 Dec 2001 22:52:24 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 22:52:24 -0000
Received: from unknown (HELO n33.groups.yahoo.com) (216.115.96.83) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 22:52:23 -0000
X-eGroups-Return: ramaninaidu@...
Received: from [216.115.96.154] by n33.groups.yahoo.com with NNFMP; 29 Dec 2001 22:52:23 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 Dec 2001 22:52:19 -0000
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 29 Dec 2001 16:54:34 -0000
Received: (qmail 54053 invoked from network); 29 Dec 2001 16:54:34 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 29 Dec 2001 16:54:34 -0000
Received: from unknown (HELO smtp017.mail.yahoo.com) (216.136.174.114) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 29 Dec 2001 16:54:35 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.188) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 29 Dec 2001 16:53:57 -0000
Message-ID: <018501c19089$b9371a40$bceac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" ,
Subject: thiruvempavai 15 tamil
Date: Sat, 29 Dec 2001 22:04:40 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14329

திருவெம்பாவை - நாள் பதினைந்து - பாடல் பதினைந்து

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரோருகால் வாய்ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையர்க்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வார்உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர்உருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

உருத்தெரியாத காலத்தே உட்புகுந்து உளம் மன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொள்ளப்பட்டு
தெய்வப் பித்தேறிய ஒரு தலைவியின் நிலையை நம்மாழ்வார் புலப்படுத்துகிறார். பராங்குச நாயகியாகிய
அவ்வாழ்வாரின் உயிரனுபவமே அது.

அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கும்
அகலவே நீள்நோக்குக் கொள்ளும்
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
வெவ்வுயிர்க் கொள்ளும் மெய் சோரும்
பெயர்த்துக் கண்ணா என்று பேசும்
பெருமாளே வா என்று கூவும்
மயற்பெருங்காதல் என் பேதைக்கு
என்செய்கேன் வல்வினையேனே

தெய்வக் காதல் ஏற்றிய பித்தால் பரவசமாகிய நிலையினைக் கண்டு நற்றாய் புலம்புவது இது. இதே போலப்
பரவசமாகி உலகத்தார் கண்ணுக்குப் பெரும்பிச்சியாகக் காட்சியளிக்கும் ஒரு பெண்ணைப் பாவை நோன்புக்
கன்னியர் காண்கின்றனர்.
இந்தக் கன்னியரும் பெருந்தகையானால் பிச்சேற்றிக் கருணை வெள்ளத்து அழுத்தி உலகவரால் பித்தர் இவர் என
ஆக்கப் பெற்றவர்கள். மாதொரு பாகனார் மலர்த்தாள் மறப்பிலார் ஆதலின் தெய்வக் காதல் பித்தேறிப்
பரவசமான பெண்ணைப் பார்த்து எள்ளி ஒதுக்கவில்லை. இந்தப் பெருநிலை யார்க்கு வாய்க்கும் என்று
விம்மிதத்தோடு அவளைப் பார்த்து அவள்போல ஆட்கொள்ளப்படும் நிறமும் ஆட்கொள்ளும் வித்தகர் திறமும் எண்ணி
எண்ணிக் கசிகிறார்கள்.
சித்தமெனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த வித்தகனார் வியைடலால் பசுபாசம் அறப் பெற்றுப்
பதி ஞானமுற்றுப் பரவசமான அந்தப் பெண்ணின் நிலையினை நுட்ப விவரந்தந்து விளக்குவது திருவெம்பாவையில்
பதினைந்தாம் திருப்பாடல். பொய்கையில் நீராடப் போகும் மகளிர் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு சமயம் எம்பெருமான் எம்பெருமான் என்கிறாள். நம்பெருமான் சீரெடுத்துச் சொன்னவண்ணமாக வேறு
நினைவும் நிகழ்வும் இன்றி வாய் ஓயாமல் பெருமான் புகழே சொல்லிய வண்ணமிருக்கிறாள். காதலாகிக்
கசிந்து சித்தத்தில் களிப்பு மீதூறக் கண்ணீர் மல்குகிறது. அகக் கனிவின் புறப்பாடான கண்ணீர் தாரை
தாரையாக வடிகிறது. கண்ணில் ஈரம் காயவே இல்லை. கருத்திலும் ஈரம் கசிவதால் உள்ளமும் ஈர நாகரிகம்
கொண்டதாகத்தானே இருக்கும். பாருலக உணர்வு வந்தாலும் இந்த உலகமும் அவன் வீடுதானே என்ற நினைப்பிலே
வந்தனை செலுத்துகிறாள். சித்தத்தைச் சிவன் பாலே வைத்தவளாதலால் வேறு எத்தேவர் தேவரையும் பணிதலை
நினையாள். நம் பேரரையன் பால் இவ்வாறு பெரும்பித்துக் கொள்ளும் அவள் திறமே திறம், இவ்வாறு இவளை
ஆட்கொண்ட வித்தகர் திருவடியை பெண்களே நாமும் வாயாராப் பாடுவோமாக. அப்படிப் பாடினால் நம்மையும்
ஆட்கொண்டருளி இறைவன் இந்த அனுபவத்தைத் தராமலா போவான்?

இது பாடலின் திரண்ட கருத்து.

எந்த முயற்சியில் ஈடுபடுவோரும் பிற நாட்டம் அற்றுப் போகுமளவில் ஈடுபட்டால்தான் பெருவெற்றி
அடைகிறார்கள். இவன் சுத்த சினிமாப் பைத்தியம், இவன் பெண் பித்தன், இவனுக்குக் காசு வெறி என்று
குறிப்பிடுவது போலவே இது கடவுட் பைத்தியம் என்று குறிப்பிடுவதும் உண்டு. அடியவர்களை ஆட்கொள்ளுவதில்
வலிய ஆட்கொள்ளுவதில் அளவிறந்த கருணை உடைமையால் கடவுளையே பெரும் பித்தன் என்று குறிப்பிடுவது இநத்
நாட்டுப் பழக்கம். என்னையும் ஆளுடைப் பிச்சன், நாயேன் தனையாண்ட பேதாய் என்ற மணிவாசகர்
தொடர்கள் இறைவனின் கருணைப் பித்தை விளக்குகின்றன. தான் பித்தனாவதோடு ஆன்மாக்களையும் ஆட்கொண்டு
பித்தமாக்குவது பெருமான் இயல்பு என்பர். பித்தேற்றும் பெருமானின் பாணி எது என்பதை மணிவாசகர்
பிறிதோர் இடத்தில் எடுத்துரைத்திருக்கிறார்.

பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தனிவன் என என்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே.

பசுஞானம் ஒழித்துப் பதிஞானம் ஏற்றுவிக்கப் பத்திமை அருளுவது முதல் நிலை. போகப் போக அடியவர்களை
உலகம் பித்தன் என்று பேசச் செய்வது தொடர் நிலை. பின்னர்ச் சித்தமெனும் வலிய கயிற்றால் அருளாகிய
திருவடியிலே பிணித்துவிடுவது முடிநிலை. பாச உலகக் கட்டவிழ்த்துத் திருப்பாதக் கட்டிலே, கால் கட்டிலே
பிணிப்புண்டபின் ஆன்மாவுக்குத் தனியானதென ஒரு செயலும் கிடையாது. இதுவே பெரும்பித்தன் தன்னைச்
சார்ந்தோரையும் பித்தராக்கும் வழி. இவ்வழியில் பித்தேற்றி ஆட்கொள்ளப் பெற்ற ஆன்மக் கன்னியையே
பதினைந்தாம் பாடலில் காண்கிறோம்.



_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com