From eramurug@... Sun Dec 30 03:08:20 2001
Return-Path: Received: (qmail 44541 invoked from network); 30 Dec 2001 11:08:20 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 11:08:20 -0000
Received: from unknown (HELO n3.groups.yahoo.com) (216.115.96.53) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 11:08:20 -0000
X-eGroups-Return: eramurug@...
Received: from [216.115.96.130] by n3.groups.yahoo.com with NNFMP; 30 Dec 2001 11:08:20 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 30 Dec 2001 11:08:21 -0000
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 30 Dec 2001 09:14:34 -0000
Received: (qmail 38810 invoked from network); 30 Dec 2001 09:14:34 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 09:14:34 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 09:14:34 -0000
Message-ID: <20011230091434.47628.qmail@...>
Received: from [210.214.128.142] by web14801.mail.yahoo.com via HTTP; Sun, 30 Dec 2001 01:14:34 PST
Date: Sun, 30 Dec 2001 01:14:34 -0800 (PST)
Subject: sangampuzha-yin malayALak kavithai 'ramaNan' - 4
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <018401c19089$acdf01e0$bceac7cb@ramani>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14335
மலையாள நெடுங்கவிதை 'ரமணன்' பற்றித் தொடர்கிறேன்.
மொத்தம் மூன்று பாகங்களாக ஆன கவிதை இது. குழுப் பாடகர்களின்
கானத்தோடு தொடங்குகிறார் சங்கம்புழ.
எவிடெ திரிஞ்சொண்ணு நோக்கியாலே
அந்த விடெல்லாம் பூத்த மரங்கள் மாத்ரம்;
ஒரு கொச்சு காற்றெங்ஙான் வன்னு போயால்
துருதுருப் பூமழயாயி பின்னே.
ஒரு நல்ல சித்ரம் வரச்ச போலெ
வரிவரி நில்குன்ன குன்னுகள்
மரகதப் பசுமை விரித்து மனதையும் கண்ணையும் ஒரு சேரக் கவரும் மலைநாட்டுக்
கிராமப் பின்னணி. மலையாளத்தில் மரகதம் மரதகமாகிறது.
திரும்பிப் பார்த்த இடத்தில் எல்லாம் பூச்சொரியும் மரங்கள். ஒரு சின்னக்
காற்று வந்து போக, துருதுருவென்று பூவாக உதிறும் தூறல். (இது மலையாளத்
தூறல் இல்லை - அங்கே அதற்கு வேறு பொருள்).
ஒரு நல்ல ஓவியம் போல் வரிவரியாக நிற்கும் குன்றுகள் - வித்தியாசமான
வரிகள்.
பார்த்து வரைவது மட்டுமில்லை ஓவியம். கலைஞனின் கற்பனையும் அங்கே கலக்க
வேண்டும். அப்படி நிஜமும் கற்பனையும் கலந்த ஓவியம் ஒரு படிமமாக
இலக்கியத்தில் நுழைகிற போது அது இயல்பும் கற்பனையும் கலந்த இலக்கியத்
தன்மையோடு இசைந்து போகிறது.
குழுப் பாடகர்களில் முதலாமவன் பாட, அடுத்தவன் தொடர, காடும்,
மலையுமாகக் காட்சி மெல்ல விரிகிறது.
சிவின் நிட்ஸ்விக் போன்றோ, சுப்ரதோ மித்ரா போன்றோ
(சத்யஜித்ராயின் 'பதேர் பஞ்சலி' ஒளிப்பதிவாளர்) தேர்ந்த ஒரு
ஒளிப்பதிவுக் கலைஞன் போல நிதானமாகக் காட்சியில் முழுகி முன்னே
எடுத்துப் போகும் சங்கம்புழ, பள்ளத்தாக்கில் மரச்சுவட்டில் உரையாடிக்
கொண்டிருக்கும் இரண்டு ஆட்டிடையர்களை அடுத்து 'குளோஸ்-அப்'பில்
காட்டுகிறார் - ரமணனும் அவன் நண்பன் மதனனும் தான் அவர்கள்.
வார்த்தைகளின் எளிமையைப் பாருங்கள். கவிதை வெற்றியடைய அது
கோபுரத்திலிருந்து மண் குடிலுக்கு இறங்கி வர வேண்டும். சங்கம்புழ அதைத்தான்
செய்கிறார்.
வரிக்கு வரி கடினமான (வழக்கிழந்த) வார்த்தைகளை இட்டு நிரப்பி, கீழே
அடிக்கோட்டில் சாதாரணமாகப் புழங்கும் வார்த்தையில் அர்த்தத்தைக்
கொடுப்பதில் என்ன இலக்கிய ரசானுபவம் கிட்டும்?
நீங்கள் வீட்டில் மூன்றாம் மாடியில் உங்கள் அன்பு மனைவியோடோ அருமைக்
கணவரோடோ அன்னியோன்யமாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று
கீழே இருந்து அழைப்பு மணிச் சத்தம். கீழே போய்ப் பார்த்துவிட்டு மேலே
வந்து பேச்சைத் தொடர்கிறீர்கள். திரும்பவும் கீழே இருந்து அழைப்பு மணி.
படியிறங்கிப் போக வேண்டிய கட்டாயம். முடித்து விட்டுத் திரும்ப மேலே வந்து
பேச்சைத் தொடர ஆரம்பித்தால் அடுத்த அழைப்பு....
இப்படி பட்டவையே அடிக்கடி புத்தகத்தின் கீழ்க் கோடிக்கு அர்த்தம் தேடி ஓட
வைக்கும் எழுத்துக்கள் என்பார் மலையாள இலக்கிய விமர்சகர் பேராசிரியர்
எம்.கிருஷ்ணன் நாயர். சரிதானே?
சங்கம்புழ கவிதையோடு கொஞ்சிக் கொண்டிருக்கலாம். அகராதியோ
அடிக்கோடு இட்டுப் பொருள் கொடுக்கவோ தேவை அதில் இல்லை.
மதனன் கேட்கிறான் -
ரமண, நீ என்னில் நின்னு ஆ ரஹஸ்யம்
இன்னும் மறச்சுப் பிடிக்கயாணோ?
ஒரு துள்ளி ரக்தத்தின் ரேகபோலும்
குரெ நாளாய் நின் முகத்தில்ல அல்லே?
நண்பா, இன்னும் என்னிடம் ஏதோ ரகசியத்தை மறைக்கிறாயே..உன் முகத்தில்
ஒரு துளி ரத்ததின் சுவடு கூட காணாமல் வெளிறிப் போய் இருக்கிறதே..
என்ன காரணம்?
அடுத்த மடலில் அது..
அன்புடன்,
இரா.முருகன்
__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com