From jaybee@... Sun Dec 30 03:08:37 2001
Return-Path: Received: (qmail 22813 invoked from network); 30 Dec 2001 11:08:36 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 11:08:36 -0000
Received: from unknown (HELO n5.groups.yahoo.com) (216.115.96.55) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 11:08:36 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.131] by n5.groups.yahoo.com with NNFMP; 30 Dec 2001 11:08:36 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 30 Dec 2001 11:08:34 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 30 Dec 2001 11:06:41 -0000
Received: (qmail 21421 invoked from network); 30 Dec 2001 11:06:41 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 11:06:41 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 11:06:41 -0000
Received: from user (sp-103-108.tm.net.my [210.186.103.108]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GP50037GLJ1SD@...> for agathiyar@yahoogroups.com; Sun, 30 Dec 2001 19:06:40 +0800 (SGT)
Date: Sun, 30 Dec 2001 19:10:03 +0800
Subject: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
In-reply-to: <20011230010358.10045.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20011230191003.0114683c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011229163118.0188640c@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14336
At 05:03 PM 12/29/01 -0800, you wrote:
> அடுத்தவர் டயரியைப் படிப்பது தப்பு தான். இருந்தாலும் உங்கள் தந்தையார்
>டயரி சுவாரசியமானது. கூட்டு எழுத்து தான் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது -
>என் வீட்டில் தாத்தா கூட்டு எழுத்தில் பழைய ஹோ அன் கோ டயரியில்
>எழுதிய 1930-35 குறிப்புக்கள் இருந்தன - கஷ்டப்பட்டு அங்கே இங்கே
>படித்ததில் அவர் கல்கத்தா போய் வந்தது தெரிந்தது - அதற்கு மேல் எழுத்துக்
>கூட்டப் பொறுமை இல்லாமல் அவற்றை எங்கேயோ போட்டு விட்டேன்-இதுவும்
>தப்புதான்!
>
>நிற்க. டயரியில் சில உபரி சுவாரசியங்கள் ..
>
>மகாத்மா காந்தியின் பொன்மொழி - 1941-ல் காந்தி, சுரேந்திரநாத்
>பானர்ஜி வாசகங்களை அச்சடிக்க அசாத்தியத் துணிச்சல் வேண்டி இருந்திருக்குமே
>- இது நிச்சயம் ஹோ அண்ட் கோ டயரியாக இருக்க முடியாது..
இல்லை. அது காங்கிரஸ் டயரி. அவர் ஒரு தீவிர தேசியவாதியாகவும்
சுயமரியாதைக் காரராகவும் விளங்கினார்.
>
>இந்தியாவில் பதிப்பிக்கப் பட்ட டயரியாக இருந்திருக்க வேண்டும்.
ஆம். இந்திய தேசிய விடுதலை இயக்கங்களின் சார்பான
டயரிகளையே பயன்படுத்தினார்.
முதலில் 'ஊழியன் டயரி'களைப் பயன்படுத்தினார்.
அந்த டயரிகள் சற்றுப்பெரியவை. செட்டிநாட்டினருக்கென்ற ஒரு
விசேடப் பதிப்புப் போட்டிருந்தார்கள்.அதில் கொழும்பு, மீடான்,
சிங்கப்பூர், சைகோன், பினாங்கு, சிங்கப்பூர் ஆகிய இடங்களின்
வட்டி விகிதங்களையும் quick-reckoning tables-ஸையும்கூட
போட்டிருந்தார்கள். இன்னும் நிறைய அரிய விஷயங்களை அதில்
காணலாம்.
பின்னர் காங்கிரஸ் டயரியைப் பயன்படுத்தினார்.
1941வரைக்கும் அதில்தான் எழுதிவந்தார்.
இந்தியாவிலிருந்து கப்பல் போக்குவரத்து நின்றபின்னர்
அந்த டயரியும் கிடைக்காமற்போய்விட்டது.
>தனிப்பட்ட முறையில் வரவழைத்திருப்பாரோ..
இல்லை. பல டயரிகளை வரவழைத்து, தாம் சார்ந்திருந்த
இந்திய விடுதலைச் சங்கத்தினர்/ஆதரவாளர்களுக்குக் கிடைக்கச்
செய்திருக்கிறார்.
'ஜெயபாரதி', 'பாரதமாதா' போன்ற விடுதலை இயக்கப்
பத்திரிக்கைகளையும் வரவழைத்திருக்கிறார்.
1928-ஆம் ஆண்டிலிருந்து 'விடுதலை' பத்திரிக்கைக்கும்
சந்தாதார்களைச்சேர்த்து, அந்தப் பத்திரிக்கையையும் வரவழைத்துக்
கொடுத்திருக்கிறார்.
இந்திய சமூகத் தலைவர்களில் ஒருவராகவும், முன்னணி
வர்த்தகராகவும் இருந்ததாலும் பல செல்வாக்குப் படைத்த
டச்சுக்காரர்களின் நெருங்கிய நட்பு இருந்ததாலும் ஏதும் நேரவில்லை.
பிரிட்டிஷ் பேராதிக்க எதிர்ப்பை டச்சுக்காரர்கள் கண்டுகொள்ளவில்லை.
அவர்களை எதிர்க்காமல் இருந்தால் சரி.
அதெல்லாவற்றையும்விட அவர் ஓர் அசாத்தியத் துணிச்சல்காரர்.
தைரியசாலி.
அதற்கு அவருடைய 'கடவுளின் உண்மைத் தோற்றம்' ஒரு சிறந்த
எடுத்துக்காட்டு.
அந்த டயரியின் தோற்றத்தையும் உள்பக்கங்களையும் ஸ்கேன்
செய்து போட்டிருக்கிறேன்.
http://www.geocities.com/visva.geo/sksdiary9.html
காலிக்கோ பைண்டிங்; 3.5 X 5 X 0.75 inches.
Folder-இன் அமைப்புக்கொண்டது. Strap ஐக் கொண்டு டயரியை
மூடிக்கொள்ளலாம். Flap-இன் உட்பக்கத்தில் அழகிய சிறு பென்சில்
ஒன்று செருகப்பட்டிருக்கும்.
தேச பக்தர்களின் பொன்மொழிகளை ஒவ்வொரு நாள் தாளிலும்
பார்க்கலாம்.
அப்போது சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி, அணிந்துரை
எழுதியுள்ளார்.
விலை 6 அணா. 6/16 ரூபாய்.
ஆனால் அந்த டயரி 1941க்குப் பிறகு கிடைக்கவில்லை.
ஜப்பானியர் மலாயாவைப் பிடித்துவிட்டிருந்தார்கள். அடுத்து அவர்கள்
மீடானுக்குக் குறிவைத்திருந்தனர். ஆகவே கொத்தும்பா என்னும்
சிறு கிராமத்துக்குக் குடி பெயர்ந்துவிட்டோம். நல்ல காகிதங்கள்
கிடைக்காமற்போயின.
ஆகவே 1942-ஆம் ஆண்டு குறிப்புகளை ஒரு பழைய
ஏற்றுமதி பர்மிட்ட்டில் சிறிய எழுத்துக்களில் எழுதிக்கொண்டார்.
அதனை இங்கே பார்க்கலாம்.
>
>அப்புறம் அந்த நான்கு இலக்கத் தொலைபேசி எண்கள் - உலகம் ஒரு காலத்தில்
>சிறியதாகத் தான் இருந்திருக்கிறது..
>
>தேதிக்குப் பக்கத்தில் உ போடுவதின் (18உ) தாத்பர்யம் என்ன?
>
>அப்புறம் அந்தத் தேதி - 17.2602 வருடம் தாய்லாந்து வருடக் கணக்கில்
>வருவது போல் இருக்கே ..
>
>
>அன்புடன்,
>இரா.முரு
>
>__________________________________________________
>