From pala@... Sun Dec 30 14:58:02 2001
Return-Path:
Received: (qmail 66097 invoked from network); 30 Dec 2001 22:58:01 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 22:58:01 -0000
Received: from unknown (HELO n24.groups.yahoo.com) (216.115.96.74) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 22:58:01 -0000
X-eGroups-Return: pala@...
Received: from [216.115.96.167] by n24.groups.yahoo.com with NNFMP; 30 Dec 2001 22:58:01 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 30 Dec 2001 22:58:00 -0000
X-Sender: pala@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 30 Dec 2001 14:48:31 -0000
Received: (qmail 25963 invoked from network); 30 Dec 2001 14:48:30 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 14:48:30 -0000
Received: from unknown (HELO scythe.pacific.net.sg) (203.120.90.37) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 14:48:30 -0000
Received: from smtp2.pacific.net.sg (smtp2.pacific.net.sg [203.120.90.169]) by scythe.pacific.net.sg with ESMTP id fBUEmTt11371; Sun, 30 Dec 2001 22:48:29 +0800
Received: from user (mcns160.docsis63.singa.pore.net [202.156.63.160]) by smtp2.pacific.net.sg with SMTP id fBUEmSN08603; Sun, 30 Dec 2001 22:48:28 +0800
Message-Id: <3.0.3.32.20011230223706.008a6a80@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sun, 30 Dec 2001 22:37:06 +0800
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: [tamil-ulagam] Foretelling Baby's sex
In-Reply-To:
References: <3.0.3.32.20011229085858.01bd4670@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Palaniappan A
X-Yahoo-Group-Post: member; u=9040552
X-Yahoo-Profile: pala48sg
X-Yahoo-Message-Num: 14339

அன்பு கணேசனார்,

>> ஆண்/பெண் பிள்ளை, கூன்,குருடு போன்ற பிள்ளைகள் பிறக்கும் வழி, ஏன் பிறக்கின்றன
>>என
திருமூலரின் பாடல்கள் கூறுகின்றனவே.
>
> திருஇமந்திரத்தில் கூன், குருடு ஏன் பிறக்கின்றன என்று
சொல்லும்
> பாக்களை நான் படித்ததில்லை. விளக்கினால் மிக்க நன்றி.>

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம்
மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில்
சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில்
மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில்
என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து
இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக
இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும்
குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக
இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.

பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)

ஆண், பெண், அலியாவது ஏன்?
ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை
தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை
சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)

அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும்
திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.
கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும்
தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின்
சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

100 ஆண்டு வாழ்வது எப்படி?
நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும்
சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆணிரம் பிறைகள் காண முடியும்.
ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று பின்வரும் பாடலில்
கூறுகிறார்.

பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே
(-திருமந்திரம் 479)

பிறப்பு இறப்பு பற்றிய இன்னும் பல கேள்விகளுக்கும் திருமூலர் பதில் கூறுகிறார்.

அன்புடன்
பழனி
(நன்றி: சிங்கப்பூர் இந்து ஏப்ரல் 99)







> ஜெயங்கொண்டார் எழுதிய மடல் உலோகாயத நூல், உலோகாயதர்
> பற்றிய பண்டைப் பழமொழி:
"கண்டதே காட்சி, கொண்டதே கோலம்".
> தாம் காணாத ஒன்றை அவர்கள் பிரமாணமாக ஏற்றுக்
கொள்வதில்லை.
> தற்கால விஞ்ஞானமும் அவ்வழியில்தானே முன்னேறியிருக்கிறது.
>
> லோகாயதர் 4
பூதங்களையே உண்மை என்று கொள்வர்:
> நிலம், நீர், நெருப்பு, காற்று. ஐந்தாவதாகச் சொல்லப்படும்
>
ஆகாசத்தை அவர்கள் ஒப்பார். மற்ற நான்கின் ஒரு கூறு
> ஆகாசம் என்பர்.
>
> சிக்கிமுக்கிக் கல்லில்
உரசலால் நெருப்புத் தோன்றுவது போலேயும்,
>
> வெற்றிலை, பாக்கு, சுண்ணம், உமிழ்நீர்சரியான
விகிதத்தில்
> கலந்தால் நாவில் தோன்றும் சிவப்பு போலவும்,
> (இதை ஆதிசங்கரரும் சொல்கிறார்
என்று கோல்ப்ரூக்
> என்பவர் சுமார் 150 ஆண்டு முன்னால் எழுதியிருக்கிறார்,
> எந்த நூல் என்று
சமற்கிருத அறிஞரைக் கேட்டுக்கொண்டுள்ளேன்).
> ஆத்திப் பூ, வெல்லம், பழைய சோறு, தண்ணீர்
விட்டுக்
> காய்ச்சினால் மது தானே உருவாவது போலவும்,
> (இதனை மணிமேகலையும் பேசும்).
>
>
உடம்பில், மேல்சொன்ன நிலம், நீர், நெருப்பு, காற்று கலந்து
> வரும் உணர்ச்சி தான் உயிர்,
அப்பூதங்களின் சரி சமனநிலை
> திரிந்தால் உயிர் அழிகிறது என்றும்உலோகாயதர் கொள்கை.
>
இதனை செயங்கொண்டார் விளக்கியுள்ளார். மடலில் காண்க.
>
> திருமந்திரம் சைவக் கடல். மூலர்
கருத்துக்கள் iஇதனின்று
> மாறிநிற்கும். அவற்றை நீங்களோ, இதனைப் படிப்போரோ
> காட்டினால்
மகிழ்ச்சி.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>
>
>------------------------
>
>-----------
----------------------------------------------------------------------
>For
archives
click
>http://groups.yahoo.com/group/agathiyar/messages
>-------------------
--------------------------------------------------------------
>
>
>
>
>

>
>Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/
>
>