From ramasamis@... Sun Dec 30 14:58:29 2001
Return-Path:
Received: (qmail 75064 invoked from network); 30 Dec 2001 22:58:29 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 22:58:29 -0000
Received: from unknown (HELO n7.groups.yahoo.com) (216.115.96.57) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 22:58:29 -0000
X-eGroups-Return: ramasamis@...
Received: from [216.115.96.161] by n7.groups.yahoo.com with NNFMP; 30 Dec 2001 22:58:28 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 30 Dec 2001 22:58:24 -0000
X-Sender: ramasamis@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 30 Dec 2001 15:18:19 -0000
Received: (qmail 25062 invoked from network); 30 Dec 2001 15:18:19 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 15:18:19 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.237.215) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 15:18:19 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Sun, 30 Dec 2001 07:18:19 -0800
Received: from 24.190.41.151 by lw7fd.law7.hotmail.msn.com with HTTP; Sun, 30 Dec 2001 15:18:19 GMT
To: agathiyar@yahoogroups.com
Bcc:
Subject: urthuva thandavam-1
Date: Sun, 30 Dec 2001 09:18:19 -0600
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Message-ID:
X-OriginalArrivalTime: 30 Dec 2001 15:18:19.0631 (UTC) FILETIME=[368177F0:01C19145]
From: "Ramasami Subbaier"
X-Originating-IP: [24.190.41.151]
X-Yahoo-Group-Post: member; u=2188604
X-Yahoo-Profile: subbaierramasami
X-Yahoo-Message-Num: 14341


ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி எனது 'ஊர்த்துவ தாண்டவம்' எனும்
கவிதையின் ஒரு பகுதி


இமய மலையில் அடியர் பரவ அருளைப் பொழியும் சிகரமே
இயக்கம் அவைகள் தமது கதியில் இசையப் புரியும் தலைவனே
அமுது தமிழின் அசைகள் இசைய அழகு புனையும் புலவனே
அரபுப் புரவி எனவன் நரியை அடைய அருளும் புனிதனே
திமுதக் கடலின் அலையில் விடமும் மிடறில் பொலியும் விடையனே
திகழும் மதுரைப் பதியில் அடியின் வரியை உடைய உடலனே
சமய குரவர் தமிழில் இதயக் கனிவு பெருகும் கடவுளே
சபையில் வருக, நடன வகைகள் தருக மனமும் உருகவே!

*

மண்ணெடுத்தே ஓர்கை பண்டம் ஆக்க-அதை
வாங்கி உடன் ஓர்கை உயிர்தேக்க-ஆடி
மண்ணிலத்திலே வைத்தக் கையே காக்க-அதை
வாழவிட்டுப் பின்னொருகை போக்க
பண்ணெடுத்தோர் கை உடுக்கை போட-ஒரு
பக்கத்திலே தீக் கொழுந்து சாட-பிறை
பட்டொளிரும் கங்கைமனம் ஊட-இடப்
பாகத்திலே தேவி எழில் கூட
கண்ணெடுத்துத் தேவரெலாம் நோக்க-ஐயன்
கண்களிலே நல்லருளே பூக்க-சுடர்
கற்றைச் சடை பக்கம் எழுந்தார்க்க-அங்குக்
கந்தன் வந்து தந்தை முகம் பார்க்க
விண்டுரைக்க மாட்டாத ஆட்டம்-சிவன்
விதவிதமாய்த் தருவது கொண்டாட்டம்-அது
விண்ணவர்கள் கண்களுக்கோர் ஊட்டம்-அட
விரியுதுபார் நடனமழைப் பாட்டம்

*

நட்டநடு ராத்திரி இடுகாடு சுடுகாடு பேயாட பூதமாட
நடுவிலெரி பிணமாட தீயாட நாற்புறம் நரியாட கூகையாட
சுட்டெரியும் விறகாட பந்தங்கள் தூக்கியே சூழவும் கூளியாட
சுரும்பாடத் துரும்பாடக் கொள்ளிவாய்ப் பிசாசுகள் சுற்றியும் நின்றாடிட
வட்டமிடு புகையாட மண்டையோடுகளாட வானத்தில் மீன்களாட
வடிவற்ற முண்டங்கள் துண்டங்கள் அங்கங்கே வந்துவந்தே யாடிட
இட்டமுடன் சுடலையின் பொடியினைப் பூசியே எம்பிரான் நடமாடினான்
ஏராளமாகவே எடுத்ததை முடிக்கின்ற எம்பிரான் நடமாடினான்.

*
மண்டையோட்டு மாலைகளைக் கண்டமெலாம் போட்டுக் கொண்டு
மாகாளி ஆடிவரும் நேரம்-கண்ட
மாத்திரத்தில் யாவும் விழும் கோரம்-அவள்
வந்தவழி நின்றவழி சென்றவழி அத்தனையும்
மத்தெடுத்துத் தான் கடைந்த செம்மை-அவள்
` வட்டவிழி தீக்கனலின் வெம்மை-கொடும்
சண்டமாருதம் போலக் கண்டபடி துண்டமிட்டுச்
சக்தியவள் ஆடிவரும் கூத்து-அவள்
சட்டச்சட சட்டவெனத் தட்டிமுட்டிக் கொட்டிவர
சங்கரனும் தானெழுந்தான் பார்த்து-இடத்
தாளெடுத்து முன்குதித்தான் ஆர்த்து-அங்கே
கொண்டவனும் கொண்டவளும் கூத்தாடும் ஆட்டத்தில்
கொத்துக் கொத்தாய் அத்தனையும் ஆடும்-பனிக்
குன்றுகளும் தாமுருகி ஓடும்-அந்தக்
கொக்கரிப்புக் காய்ச்சலிலே குத்தாடும் பாய்ச்சலிலே
கொப்புளங்கள் ஆகிவிடும் மேடை-எங்கும்
கோபக் கனல் பெருகும் ஓடை-நீல
கண்டனவன் ஆட்டமெலாம் காளியவள் ஆடிவர
காலமதும் கண்டிடாத போட்டி-நடக்
கலையின் வகைகளெல்லாம் காட்டி-அங்குக்
காளியவள் தன்னுடைய ஆண்டியுடன் ஆடுகையில்
கச்சிதமாய் மாற்றிவிட்டாள் ஆட்டம்-அந்தக்
காளியம்மை கொள்ளவில்லை வாட்டம்

ramasami




_________________________________________________________________
Get your FREE download of MSN Explorer at http://explorer.msn.com/intl.asp.