From ramaninaidu@... Sun Dec 30 15:00:01 2001
Return-Path:
Received: (qmail 82466 invoked from network); 30 Dec 2001 23:00:02 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 23:00:02 -0000
Received: from unknown (HELO n26.groups.yahoo.com) (216.115.96.76) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 23:00:01 -0000
X-eGroups-Return: ramaninaidu@...
Received: from [216.115.96.24] by n26.groups.yahoo.com with NNFMP; 30 Dec 2001 22:51:48 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 30 Dec 2001 22:59:55 -0000
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 30 Dec 2001 16:02:03 -0000
Received: (qmail 79079 invoked from network); 30 Dec 2001 16:02:03 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 30 Dec 2001 16:02:03 -0000
Received: from unknown (HELO smtp018.mail.yahoo.com) (216.136.174.115) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 30 Dec 2001 16:02:02 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.57) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 30 Dec 2001 16:01:58 -0000
Message-ID: <002501c1914b$990faa80$eceac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" ,
Subject: thiruvempavai 16 tamil
Date: Sun, 30 Dec 2001 21:19:43 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14348

திருவெம்பாவை - நாள் பதினாறு - பாடல் பதினாறு

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ்சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை ஏலோர் எம்பாவாய்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நூல் எழுதிய திருவள்ளுவர் வான்சிறப்பு என மழைநலம் நாடித் தனி ஓர் அதிகாரமே
எழுதினார். மழையின் இன்றியமையாமையினை விளங்கிக் கொள்வதற்கு இதற்கு மேல் தனிவிளக்கம்
தேவையில்லை.

திருப்பாவையும் திருவெம்பாவையும் பக்தி நூல்கள். சமயத் துறையின் அணிகலன்கள். பரமன் புகழ் பேசிப்
பரவுதற்கே உரிய பாவை நூல்களும் மழைத் தேவையை மறக்கவில்லை. ஏன், உலகியல் மட்டுமன்றி ஆன்மிக
முயற்சியின் ஒரு நிலையாகிய பூசனைக்கும் அந்த மழை தேவை.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

நாம் மழையைப் பற்றிச் சொல்வதற்கும் ஆண்டாள் நாச்சியாரும் மணிவாசகப் பெருந்தகையும் அதைப் பற்றிச்
சொல்வதற்கும் வேறுபாடு உண்டு. நாம் நம் வீட்டுத் தானியக் களஞ்சியம் குறையாமல் இருக்க வேண்டுமே, மழை
பொய்க்காமல் அளவோடு பெய்ய வேண்டுமே என்று நினைப்போம். நம் அணுகுமுறை உலகியல் நெடி மிக்கது. ஆயின்
அடியவர் பெருமக்களுக்கு எல்லாமே இறையருள் விளைவுதான். ஆதலால் அவர்களின் அணுகுமுறை வேறாகத்தானே இருக்க
முடியும்.

பாவை நோன்புக் கன்னியர் உலக நல்வாழ்வை மறக்கவில்லை. மறுக்கவும் இல்லை. வாழ உலகினில் பெய்திடாய்
நாங்களும் என்பது நாச்சியார் நல்லுரை. ஊழி முதல்வனாம் திருமாலின் உருவம் போல கறுத்து அவன் திருக்கரத்து
ஏந்திய சக்கரம் போல மின்னி அவனுடைய பாஞ்சசன்னியம் போல இடிமுழக்கம் காட்டி அப்பெருமானின்
வில்லிலிருந்து பாயும் கணைகள் போல தாரை தாரையாகக் கொட்டுக மேகமே என வேண்டுகின்றனர்
திருப்பாவைக் கன்னியர்.

திருவெம்பாவைக் கன்னியரின் மழை வேண்டுகையும் அவ்வண்ணமே அமைகிறது.

அருளை நினைந்தால் அருட்பேற்றை நாடினால் அம்மையை நினைப்பது சைவ மரபு.

அருளது சத்தியாகும் அரன்றனக்கு அருளை யின்றித்
தெருள் சிவம் இல்லை

என்பது சிவஞான சித்தியார். உலகும் உயிரும் வாழ வாழ்க்கை வளமுற மழை வேண்டுகின்ற கன்னியர்க்கு
உமையம்மை நினைப்பே மேலோங்கி நிற்கிறது. அவர்கள்வேண்டுதலை உரைநடையாகக் கேட்போம்.

மழை முகிலே! கடலெல்லாம் சுருங்குமாறு நீரையெல்லாம் குடித்து எம்மையுடைய உமையைப் போலக் கறுகறுவென
நிறம் கொண்டு எம்மை ஆளுடைய அவள்தன் இடைபோல மின்னல் வீசி எம் பிராட்டியின் திருவடிச் சிலம்பு
போல ஒலி எழுப்பி அவளுக்கு வாய்த்த திருப்புருவ வில் போல மழைக் கணை சிந்துக. நின் மழைப் பொழிவு
எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? எங்கள் ஆளுடை நாயகியைப் பிரிதலறியாப் பெருமான் தன் அடியவர்க்காக
நினைந்து பொழியும் அருளைப் போல் சுரந்து பொழிய வேண்டும்.
இது அவர்தம் வேண்டுதல். பதினாறாம் பாடலின் கருத்துரை.

இறைவன் இறைவி வாயிலாகத் தன் அன்பர்க்கு அருள்சுரக்கும் பாங்கினை நந்தம்மை ஆளுடையாள்...
எங்கோமானாகிய சிவனின் அன்பர்க்கு முன்னி முன் சுரக்கும் என்ற தொடர்கள் விளக்குகின்றன.

பிராட்டி நம்மை ஆளுடையவள். எனவே ஆட்கொள்ளல் அவள் கடமையாகிறது. முன்னி முன் சுரக்கும் என்றது நமக்கு
எது வேண்டும் எப்போது வேண்டும் என்பதை அவளே எண்ணிப் பார்த்து நம் தேவையை நாம் உணருமுன்பே அருளுவது
அவள் இயல்பு என்ற கருத்தினை உட்கொண்டது. அருளினை மழை என்றது கைம்மாறு கருதாமல் பொழிவது. கைம்மாறு
செய்ய நினைத்தாலும் செய்ய முடியாது என்னும் நுட்பம் கருதி

கைம்மாறு வேண்டா கடப்பாட்டு மாரிமாட்டு
என் ஆற்றுங்கொல்லோ உலகு.

என்ற திருவள்ளுவர் வாக்கு நினைவு கூர்தற்கு உரியது. இறைவனின் கருணைப் பெருந்திறத்தை

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே

எனத் தெளிவுறுத்துவார் தாண்டகவேந்தர். அத்தகு கருணைப் பெருந்திறத்தை மழையை முன்னிறுத்தி விளக்கியது
திருவெம்பாவையின் பதினாறாம் பாடல்.


குறிப்பு

பதினைந்து மற்றும் பதினாறாம் திருவெம்பாவைப் பாடல்களுக்கான விளக்கம் என் மதிப்புக்குரிய மூத்த
ஆசிரியர் முனைவர் தமிழ்ச் செம்மல் ம.ரா.போ.குருசாமி அவர்களின் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com