From mmanivannan@... Sun Dec 30 23:58:53 2001
Return-Path:
Received: (qmail 8824 invoked from network); 31 Dec 2001 07:58:51 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 07:58:51 -0000
Received: from unknown (HELO n35.groups.yahoo.com) (216.115.96.85) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 07:58:52 -0000
X-eGroups-Return: mmanivannan@...
Received: from [216.115.96.135] by n35.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 07:58:52 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 31 Dec 2001 07:58:51 -0000
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 31 Dec 2001 07:55:29 -0000
Received: (qmail 25549 invoked from network); 31 Dec 2001 07:55:29 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 07:55:29 -0000
Received: from unknown (HELO hawk.prod.itd.earthlink.net) (207.217.120.22) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 07:55:29 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by hawk.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16KxI6-0005bQ-00; Sun, 30 Dec 2001 23:55:28 -0800
Message-ID: <002a01c191d0$d73b5720$0200a8c0@...>
To: ,
Cc:
References: <3.0.6.32.20011231071303.007de2e0@...>
Subject: Panchali Sabatham - Kavithai Natakam - ArangERRam
Date: Sun, 30 Dec 2001 23:57:44 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan"
Reply-To: "Mani M. Manivannan"
X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 14359

சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும்

பொங்கல் விழா - முத்தமிழ் விழா

சனவரி 12, 2002, 4.00 PM to 8.00 PM

சான் ஓசே சிடி காலேஜ் ஆடிட்டோரியம்

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டிச் சனவரி 12ஆம் நாள் முத்தமிழ் விழா கொண்டாடவிருக்கிறது.

அந்த முத்தமிழ் விழாவிலே, பாரதி நாடக மன்றம் வழங்கும் "பாரதியின் பாஞ்சாலி சபதம்" கவிதை நாடகமாக அரங்கேறவிருக்கிறது.

பாஞ்சாலி சபதம் - மகாகவி பாரதியின் மகத்தான கவிதை நாடகம். பாரத நாட்டின் பெருமைமிகு காப்பியம் மகாபாரதம். அதில் ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதற்கு உயிரும் உணர்வும் ஊட்டி உலவ விட்டான் பாரதி.

உற்றார், அறவோர், அரசன் என்று அறத்தைக் காக்க வேண்டிய அனைவரும் கைவிட்டதும் நானே குருதி பூசிக் கூந்தல் முடிப்பேன் என்று சபதமிடும் பாஞ்சாலி கால தேசங்களைக் கடந்த உரிமைக்குரல்.

சூது, நயவஞ்சகம், ஏமாளித்தனம், சகோதர பாசம், சினம், அறச்சீற்றம், பக்தி என்று பல உணர்வுகளின் குழம்பாக, எரிமலைப் பிழம்பாக உருவெடுத்தது பாஞ்சாலி சபதம்.

ஆங்கில சேக்ஷ்பியர் நாடகங்களுக்கு இணையான பாரதியின் பாஞ்சாலி சபதத்தைநாடக வடிவாக்கியவர் கவிஞர் மதுரபாரதி.

வளைகுடாப் பகுதித் தமிழ்க் கலைஞர்கள்படைக்குமிந்த நாடகத்தைக் காணத் தவறாதீர்கள்.

தமிழர் திருநாளன்று, தமிழ் விருந்து களிக்க வாரீர்.

மற்ற விவரங்களுக்கு:

http://www.bayareatamilmanram.org/events/pongal/

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.

"இந்த ஆண்டில் இன்றேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"