From jaybee@... Mon Dec 31 02:43:09 2001
Return-Path:
Received: (qmail 69150 invoked from network); 31 Dec 2001 10:43:08 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 10:43:08 -0000
Received: from unknown (HELO n32.groups.yahoo.com) (216.115.96.82) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 10:43:08 -0000
X-eGroups-Return: jaybee@...
Received: from [216.115.96.119] by n32.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 10:43:08 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 31 Dec 2001 10:43:05 -0000
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 31 Dec 2001 10:41:55 -0000
Received: (qmail 63920 invoked from network); 31 Dec 2001 10:41:55 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 10:41:55 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 10:41:53 -0000
Received: from user (sp-103-122.tm.net.my [210.186.103.122]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GP700CEGF1Q04@...> for agathiyar@yahoogroups.com; Mon, 31 Dec 2001 18:41:53 +0800 (SGT)
Date: Mon, 31 Dec 2001 18:45:21 +0800
Subject: Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
In-reply-to: <20011230005730.29073.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin"
Message-id: <3.0.3.32.20011231184521.01186d50@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011229163118.0188640c@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14362

At 04:57 PM 12/29/01 -0800, you wrote:
>கேட்க விட்டுப் போச்சு..
>
>அதென்ன தேதியை 1.7.2602 என்று எழுதியிருக்கு? தாய்லாந்து வருடக் கணக்கு
>போல இருக்கே?
>
>அன்புடன்
>இரா.முரு


ஜப்பானிய ஆண்டுக் கணக்கு. எல்லாவற்றிலும் இந்தக்
கணக்கையே திருத்திப்போட்டுக்கொள்ளும்படி ஆணையிட்டதால்
பழசு புதுசு எல்லாவற்றிலும் அதையே போடவேண்டியதாயிற்று.
மாதம் தேதிகளை மாற்றவில்லை.
AD - Anno Domini என்றால் 'In the year of the
Lord' என்று அர்த்தம்.
இங்கும் அதேதான். ஆனால் அந்த lordshipதான்
மாற்றம் கண்டது. In this case the Japanese Emperor was
the Lord.

அன்புடன்

ஜெயபாரதி





>
>
>--- jaybee wrote:
>> At 04:44 PM 12/28/01 -0800, you wrote:
>> >
>> >-
>> >> ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்''புயலில் ஒரு தோணி'
>> >> ஆகியவையும் இதே நிலக்களன், சம்பவங்களைக் கருப்பொருளாகக்கொண்ட
>> >> நாவல்கள். ப.சிங்காரத்தைப் பற்றியும் பிறகு சொல்கிறேன். அவர்,
>> >> பினாங்கிலும் மீடானிலும் எங்கள் வர்த்தக நிறுவனத்தில்
>> இருந்தவர்தான்.
>> >>
>> >>
>> >
>> >அன்புள்ள ஜேய்பி-சான்,
>> >
>> >ப.சிங்காரத்தின் படைப்புக்கள் மறுபதிப்பாக வெளிவந்துள்ளன. அடுத்த
>> வாரம்
>> >புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டும்.
>> >
>> >எம்.வி.வி, கு.அழகிரிசாமி, ராஜநாராயணன், சிதம்பரசுப்ரமணியன்
>> >வரிசையில் வைக்கத் தகுந்த நல்ல எழுத்தாளர் அவர் என்று தெரியும். என்
>> >நண்பர், தினமணி சிவகுமார் அவர் எழுத்தை சிலாகித்து நிறையப்
>> பேசுவார்.
>> >அவரைப் பேட்டியும் எடுத்திருக்கிறார்.
>> >
>> >ப.சிங்காரம் பற்றி இன்னொரு இழையில் சொல்லுங்களேன்..
>> >
>> >அன்புடன்,
>> >இரா.முருகன்
>>
>>
>> இந்த இழையில்கூட இடம்பெறலாம்.
>> இதிலும் சம்பந்தமுள்ளவர்தாம்.
>>
>> என்னுடைய தந்தையாரின் டயரியின் இரண்டு பக்கங்களை
>> ஸ்கேன் செய்து போட்டிருக்கிறேன்.
>>
>> http://www.geocities.com/visva.geo/sksdiary31.html
>>
>> கூட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
>> ஆகவே விளக்குகிறேன்.
>>
>> 1941-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1, 2 தேதிகளில்
>> எழுதப்பட்ட பக்கங்கள்.
>>
>> அதில் 1-ஆம் தேதியன்று 'அ' என்னும் அம்மாளுக்கு
>> Dr.Leizenberg என்னும் டாக்டரிடம் காட்டி ஊசி போட்டு மருந்து
>> வாங்கிக்கொடுத்த விபரம் காணப்படுகிறது. அந்த அம்மாளுக்கு
>> இரவு 4-00 மணிக்கு இடுப்புவலி வந்த விபரமும் காணப்படுகிறது.
>>
>> அடுத்த பக்கத்தில் அந்த அம்மையாரைக் காலை 8-00 மணிக்கு
>> எலிசபெத் ஆஸ்பத்திரியில் சேர்த்ததும் 8-25க்கு ஆண்குழந்தை
>> பிறந்ததும், பூச்சியம்மாள் துணையாக இருந்தது, செகண்ட் கிளாசில்
>> நாள் வாடகை 10 ரூப்பியாவுக்குத் தங்கியிருந்ததுவும் இருக்கிறது.
>> (அந்தக்காலத்தில் இரண்டரை ரூபியாவுக்கு ஒரு பவுன் தங்கம்
>> வாங்கலாம்).
>> Stoll, Bok ஆகியோர் டச்சுக்கார டாக்டர்கள். லீஸென்பர்க்
>> ஜெர்மானியர்.
>> 'அ' என்பவர் அழகுரெத்தினம் அம்மாள்.
>> ஆண்குழந்தைதான் ஜேய்பி.
>>
>> ஜூலை 1-ஆம் தேதிப்பக்கத்தின் மேற்புறத்தில் late entry-யாக
>> ஒரு செய்தி காணப்படுகிறது.
>>
>> "1-7-2602 ஆனி மாதம் 17 தேதி புதன்"
>>
>> "இன்று நல்லதம்பி, சிங்காரம், சேதுராமன் மூவரும் சரக்குடன்
>> தொங்கானில்
>> பினாங்குக்குப் போகிறார்கள். பயணம்பண்ண பிளவான் போய்வரப்பட்டது."
>>
>> தொங்கான் Tongkang என்பது ஒரு வகையான பெரிய
>> தோணி. பிளவான் என்பது வட சுமாத்ராப் பகுதியின் முக்கிய
>> துறைமுகம். மேடானிருந்து வடக்கே இருக்கிறது. மேடான்தான்
>> சுமாத்ராவின் தலைநகரம். இந்தோனேசியாவின் இரண்டாவது
>> முக்கிய நகரம். பிளவானிலிருந்து வடகிழக்கே Straits of
>> Malaccaவுக்கு
>> அப்பால் பினாங்கு இருக்கிறது.
>>
>> அக்காலத்தில் சரக்குகளை மேற்கூறியதொங்கான்களில்
>> ஏற்றித்தான் அனுப்புவது வழக்கம்.
>>
>> நாவலாசிரியர் சிங்காரமும் மற்ற இருவரும் தொங்கானில்
>> சென்றபோது, மலாக்கா ஜலசந்தியின்நடுவில் அவர்களின் தொங்கான்
>> புயலில் சிக்கிக்கொண்டது.
>>
>> அந்த அனுபவம்தான் 'புயலில் ஒரு தோணி' நாவலின்
>> தலைப்பாக உருவாகியது. அந்த நிகழ்ச்சியும் அந்த நாவலில்
>> வருகிறது. சிங்காரம் அந்த இடத்தை மிகவும் graphical-ஆக
>> விவரித்திருப்பார்.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>> ====================