From ramaninaidu@... Mon Dec 31 15:09:35 2001
Return-Path: Received: (qmail 54710 invoked from network); 31 Dec 2001 23:09:34 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 23:09:34 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 23:09:34 -0000
X-eGroups-Return: ramaninaidu@...
Received: from [216.115.96.37] by n13.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 22:58:12 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 31 Dec 2001 23:09:34 -0000
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 31 Dec 2001 15:39:15 -0000
Received: (qmail 21698 invoked from network); 31 Dec 2001 15:39:15 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 15:39:15 -0000
Received: from unknown (HELO smtp013.mail.yahoo.com) (216.136.173.57) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 15:39:15 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.162) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 31 Dec 2001 15:39:13 -0000
Message-ID: <006b01c19211$8c4de8e0$a2eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , Subject: thiruppavai 17 - tamil
Date: Mon, 31 Dec 2001 20:57:33 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14363
திருப்பாவை பதினேழு முதல் இருபத்திரண்டு வரை அடுத்த வரிசைப் பாடல்களாகின்றன. பதினாறு
பதினேழாவது பாடல்களுக்கிடையே பாவை நோன்பிருக்கும் கன்னியர் கோயிலுக்குள் அனுமதி பெற்றுப்
போயிருக்க வேண்டும். பதினேழாவது முதல் இருபத்திரண்டாம் பாடல் வரை இறைவனைத் துயில் எழுப்பி அவன்
கருணையை வேண்டுவதைப் போல அமைகின்றன.
இந்து மதம் பலதெய்வ வணக்கம் கொண்டது. என்றாலும் பலதெய்வ வணக்கம் என்ற பொருள் தரும் polytheism
எனும் வார்த்தை தரும் பொருளானது இந்துமதக் கட்டமைப்புக்கு ஒவ்வாத உரிச்சொல் என்பதைச் சொல்ல வேண்டும்.
வேதங்களின் கோட்பாடு பிரம்மாவைக் கடவுளாகக் கண்டது. என்றாலும் குறிப்பிட்ட சமயங்களில் வழிபாடு
செய்யும்போது வெவ்வேறு கடவுளரை ஆவாகனம் செய்து வழிபடுவது வழக்கம். அப்படியான வாசுதேவர் ஒரு துணைக்
கடவுளாகவும் பிரம்மா ஆதிக் கடவுளாகவும் வேதங்களில் வழிபடப்பட்டனர். குறிப்பிட்ட சமயத்துக்காக
ஆவாகனம் செய்து வழிபட்ட கடவுளரை ஆதிஸ்தான தேவதைகள் என்று வழங்கினர்.
பின்னாளைய கடவுட் கொள்கை இப்படியான எளிய விளக்கங்களுக்குள் அடங்கிவிடுவதில்லை. சைவர்களுக்கு சிவன்
கடவுளாகிவிட வைஷ்ணவர்களுக்கு நாராயணர் கடவுளாகிறார். அத்தகைய கடவுட் கொள்கை தத்தமக்கேயான
கடவுளை ஒரு குறிப்பிட்ட வடிவில் கற்பித்து வணங்குவதாகக் கொள்ள வேண்டும்.
கடவுளுக்கு அப்படி ஓர் உருவம் கற்பித்து வணங்குதல் சரியா? இந்தக் கேள்விக்கு சற்றே விரிவான விளக்கம்
காண்போம்.
இறைவனோடு தொடர்பற்றுப் போய்விட்டதால் தனக்கென எந்த மதிப்பும் இல்லாமலும் போய்விட்டது என்ற
உணர்வின் மேலோட்டம் மானுட உணர்வில் தோன்றுகிறது. எனவே கடவுட் கொள்கையானது இறைவனோடு மனிதன்
உணர்வளவில் தொடர்பு கொள்ள ஏதுவாக அமையும் போதுதான் விரக்தி அல்லது நிலை தாழ்ச்சி அல்லது தனிமை
ஆகிய உணர்வுகளின் பீடிப்பிலிருந்து விடுபட்டு நம்பிக்கையும் நிலை மேம்பாடும் ஆன்மத் தோழமையும் உணர
முடிகிறது.
எனவே அனைத்தையும் அனைவரையும் தாண்டியவன் இறைவன் என்ற கொள்கை அவ்விறைவன் மனிதனோடு நேரடித்
தொடர்பு கொள்ளும் சாத்தியத்தை ஏற்றுக் கொள்ளாது. மனிதனின் உணர்வு எல்லைக்குள் உணரப்படும் வகையில்
தனக்கென வடிவும் இயல்பும் கொண்டவன் இறைவன் எனும்போது கடவுளைத் தான் நேரில் சந்திக்கும் உணர்வும்
அவரோடு பேசும் உணர்வும் சாத்தியமாகின்றன. அவ்வாறான பாவனைகள் பக்திப் பாடல்களாகவும் இசையாகவும்
பிரார்த்தனைகளாகவும் சடங்குகள் பாற்பட்ட வழிபாடாகவும் வடிவம் கொள்கின்றன. வடிவும் குணமும் பாற்பட்டவன்
அல்லன் இறைவன் எனும்போது அவ்வாறான சமயத் தொடர்புக்கு வழியில்லாது போகிறது. அப்படியே அவற்றைப்
பாவனை செய்து கொள்ளும் போதும் பொருளற்றுப் போகின்றன. எனவே மனிதனின் இறைஉணர்வு வடிவும் இயல்பும்
சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது. அப்போது சமய உணர்வு பொருள் பொதிந்ததாகவும் மதிப்புடையதாகவும்
அமைகிறது. அப்படியானால் இறை உணர்வு என்ற மனோபாவம் பற்றிய சம்பவம் மனத்தளவில் நம்பிக்கைக்கும்
நிலை மேம்பாட்டுக்குமான ஏக்கத்துக்கு ஓர் விடையாகிறது.
அப்படி இறைவனுக்கு வடிவும் இயல்பும் சார்ந்த நிலை கற்பித்த போது அவரோடு தொடர்பு கொண்ட கடவுளர் என்ற
கொள்கையும் வடிவு கொண்டது. இப்படியாகத்தான் கோயில் வழிபாடும் கோயில் அமைப்பு சார்ந்த கலையும்
பிரமாதமான கலை வடிவம் கொள்ள வந்தன. சதுரங்களுக்குள் சதுரமாகக் கோயில்கள் கட்டப்பட்டன. உட்சதுரம்
கருவறையாக அமைந்தது. ஒவ்வொரு சதுரத்துக்கும் இடையே இருக்கும் இடம் பிரகாரம் எனப்பட்டது.
பிரகாரம் ஒவ்வொன்றையும் சுற்றிக் கடைசியாகக் கருவறை சென்று இறைவனை வழிபடும் வழக்கம் வந்தது.
அவ்வாறான பிரகாரம் ஒவ்வொன்றுக்கும் இறைவனோடு தொடர்பு கொண்ட பிற கடவுளருடனான தொடர்பு
கற்பித்தார்கள். இந்தச் சூழலில் வைத்தே திருப்பாவையின் பதினேழு முதல் இருபத்திரண்டு வரையிலான
பாடல்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
துவாரபாலகர்கள் அனுமதி பெற்று கோயில் பிரகாரங்களுக்குள் நுழைந்த பின் கன்னியர் நந்தகோபாலன்,
யசோதை, பலராமன் போன்றவரைப் போற்றிப் பாடுகிறார்கள்.
நந்தகோபர் வீட்டில்தான் கிருஷ்ணன் வளர்ந்தான். அறம் என்ற வார்த்தை வழக்கமாகக் கொடை என்ற பெயரில்
வழங்குகிறது. சரியாக இதைப் பார்க்க வேண்டுமானால் ஆயர்களின் தலைவனாக நந்தகோபர் தம் மக்களிடையே
செல்வம் யாவும் சிறக்க அரசு செய்ததைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். ஆதலால் அம்பரமும் தண்ணீரும்
சோறும் அறம் செய்வதாகச் சொன்னார் ஆண்டாள்.
இரண்டாவதாக கிருஷ்ணனை வளர்த்த யசோதையை நோக்கிப் பாடல் திரும்புகிறது. ஆயர்பாடியின் பெண்மக்களின்
மென்மையைக் குறிக்க கொம்பனார் என்றார். அத்தகைய மெல்லியலாளர்களில் உயர்ந்தவர் யசோதை. மேலும்
ஆயர்குலத்துக்குக் குலவிளக்கும் யசோதை என்கிறார். பெண் கடவுளருக்கு இந்து மதத்தில் சிறப்பான ஓரிடம்
வழங்கியே வந்திருக்கிறார்கள். தேவியரே பக்தரிடம் அளப்பரிய அக்கறை வைத்திருப்பதாக நம்புகிறார்கள்.
பார்க்கப் போனால் இறைக் கருணை வேண்டிய பிரார்த்தனையே தேவியர் வழியாகத்தான். எனவே இயல்பாகவே
யசோதை இந்தப் பாடலின் போக்கில் மிகச் சிறப்பாகவே பொருந்தி வருகிறாள்.
என்னதான் கடைசியில் இறை அருளையே வேண்டுகிறார்கள் என்றாலும் ஒரு பிரகாரத்தில் பாடுகிற பாடல்
என்பதால் நாராயணனின் ஓர் அவதார மேன்மையைச் சிறப்பிக்கிறார்கள். ஈரடிகளில் உலகை அளந்த வாமனரை
அடுத்த அடிகளில் சிறப்பிக்கிறார்கள்.
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி என்ற தொடரைப் பாருங்கள். வானைப் பிளந்து வளரும் வாமனரின் பிரம்மாண்டம்
கட்புலனுக்கே தெரியும் அளவில் அமைந்த தொடர் அது.
கிருஷ்ணனின் சகோதரன் பலதேவனையும் இந்தப் பாடல் கொண்டாடுகிறது. வீரம் பற்றிய குறிப்போடு
பலதேவரைப் பாடல் சிறப்பிக்கிறது. செம்பொன்னால் செய்யப்பட்ட கழல் அணிந்த கால்களாம்.
இந்தப் பாடலின் முதலடி பல விதமான விளக்கங்கள் பெறுகிறது. கடவுளே பக்தருக்கு உடுக்கும் உடையும் பருகும்
நீரும் உண்ணும் உணவும் என்று வாழ்வுக்கும் கெளரவத்துக்கும் அடியாகிறார். கடவுளே தமக்கு எல்லாமும் என்றாகிப்
போன பாவைக் கன்னியருக்கு இறைவனின் கருணையைக் கொடையாக வழங்குகிறவர் நந்தகோபன் என்பது
சம்பிரதாயமான ஒரு விளக்கம்.
உண்ணும் சோறு, பருகும் நீர் தின்னும் வெற்றிலை யாவும் கண்ணனே என்ற ஆழ்வாரின் மொழியை நினைவில்
கொள்ள வேண்டும்.
நந்தகோபருக்கும் கிருஷ்ணனுக்கும் நடுவில் யசோதை படுத்துறங்குவதான குறிப்பு பாடலில் தெரிகிறது. ஒரு
பக்கம் கணவனுக்குத் தன் காதல் அணைப்பையும் மறுபக்கம் மகவுக்குப் பால் தரும் வகையில் இருவருக்கும் நடுவே
யசோதை படுத்துறங்குவதாகச் சம்பிரதாய விளக்கம் தருவார்கள்.
மேலும் கொழுந்து எனும் போது செடி வாடினால் முதலில் வாட்டம் தெரிவது தளிர் இலைகளில் என்பதால்
குடும்பத்துக்கு ஒரு கேடு என்றால் அதை முதலில் தெரிந்து வாடுவது பெண்களே என்ற பொருளில் கொழுந்து என்ற
சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்வார்கள்.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com