From ramaninaidu@... Mon Dec 31 15:09:40 2001
Return-Path:
Received: (qmail 21077 invoked from network); 31 Dec 2001 23:09:39 -0000
Received: from unknown (216.115.97.172) by m9.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 23:09:39 -0000
Received: from unknown (HELO n13.groups.yahoo.com) (216.115.96.63) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 23:09:39 -0000
X-eGroups-Return: ramaninaidu@...
Received: from [216.115.96.37] by n13.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 22:58:17 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 31 Dec 2001 23:09:35 -0000
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 31 Dec 2001 16:04:15 -0000
Received: (qmail 84401 invoked from network); 31 Dec 2001 16:04:14 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 16:04:14 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 16:04:14 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.23) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 31 Dec 2001 16:04:12 -0000
Message-ID: <00a501c19215$05705160$a2eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" ,
Subject: thiruvempavai 17 tamil
Date: Mon, 31 Dec 2001 20:59:42 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14365

திருவெம்பாவை - நாள் பதினேழு - பாடல் பதினேழு

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


திருவெம்பாவையின் பதினேழாம் பாடல் வைகறை நேரத்தில் பொய்கையில் நீராடப் போகும் கன்னியருள்
ஒருத்தி தன்னுடன் வரும் மற்றவளைப் பார்த்துப் பேசுவதாக அமைந்திருக்கிறது.

மணம் பொருந்திய கருங்கூந்தலை உடையவளே என்று அவளை விளிக்கிறாள். செங்கண்ணன் திருமால். திசைமுகன்
நான்முகன். இவர்களுக்கும் பிற தேவர்களும் அனுபவித்திராத இன்பத்தை நம்மையும் ஒரு பொருட்டாகக் கொண்டு
அருளியவன் இறைவன். நம் நெஞ்சமாகிய இல்லம் ஒவ்வொன்றிலும் தேடி வந்து குடி புகுந்தவன். தம் செங்கமலப்
பேற்றினை நமக்கு அருளியிருக்கிறான். அந்தச் சேவகன் புகழைப் பாடுவோம். நம் கண்ணுள்ளான் அவன். அந்தப்
பேரரசன் பெருமை பாடுவோம். நம் போன்றவர்க்கு அமுதென வாய்த்தவனைப் பாடுவோம். நம் பெருமானைப்
பாடுவோம். இப்படிப்பட்ட நலத்தை நம்மிடையே கொண்டு பொய்கையிலே நீராடுவோம் வா. இது அப்பெண்ணின்
கூற்று.

திருவாசகம் போய்ப் பார்ப்போமா?

தானந்த மில்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காணேடி
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள் காண் சாழவோ.
அந்தமில்லாதவன் அந்தமில்லாத ஆனந்தத்தைத் தன் அருளாக வழங்கியிருப்பதைச் சிறப்பித்துப் பாடுகிறார்.

மேலும்,

மையிலங்குநற் கண்ணி பங்கனே
வந்தெனைப் பணி கொண்டபின் மழக்
கையிலங்குபொற் கிண்ணமென்றலால்
அரியை என்றுனைக் கருதுகின்றிலேன்

என்கிறார். நமக்கு வாய்த்துள்ள இறைவனின் கருணைத் திறத்தை அறியாதவர் நாம். குழந்தை கையில் கிடைத்த
பொற்கிண்ணத்தின் அருமை அக்குழந்தைக்குத் தெரியுமா என்ன? வலிய வழங்கப் பெற்ற இறையருளின் அருமை உணரும்
போது அது நமது செல்வமாகிறது.

பிற மதங்களிலும் இப்பொருள் பற்றிய தேடுதல் இருந்திருக்கிறது. மனிதன் சம்பாதித்துக்
கொள்வதல்ல இறைவனின் கருணை. எந்தக் கேள்வியும் இல்லாமல் இறைவன் மனிதன் மேல் பொழிவது அருள் என்பது
கிறித்துவம்.

இறைக் கருணை குறித்துப் பிறிதோரிடத்தில் எழுதும்போது ஆங்கிலத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

Theologically grace is a free personal bestowal of unmerited favour upon man
by God. Phenomenologically it is a strength from beyond oneself, an
unexpected gift, a reneweal of spirit and response of deep gratitude. It is
a powerful guard against degeneration during desolation. Something from
beyond keeps one going. Also strength is provided against specific
temptations and evils. Patience and love are instilled by grace and the
sustenance of the individual against the evil and despair is looked at not
as an indication of self heroism but as a manifestation of the divine
action. Grace again teaches man to find purposes at work even in ones
suffering. One such purpose which is immediate is the acquisition of the
ability to discover God afresh or in a deeper way. Grace works through
sufferings and privations to scourge the barriers of guilt and
hardheartedness, bringing patience and other virtues, turning man away from
passing frivolities to lasting goods, hammering out the true self to become
a return presentation to God. If these are the inward impacts of the divine
purpose, the outward accomplishment is Gods will in man, such a will being
love and most worthy of being accomplished. Such a prospective of divine
purpose offers a totally altered perspective of man, of himself, his mission
in life, his vocation, so much so, any worthy vocation can be a vehicle for
the grace of divine calling...... Grace also contributes to a growth in
spiritual sanctification. A deepening awareness of Gods presence and
steadfastness in spite of trials, tribulations, discouragements and setbacks
makes life more meaningful in that God with His grace is patient in spite of
our indifference, merciful in spite of our follies. ... He becomes the
sustenance of the whole natural order. He reaches out to us in the depths of
oceanic darkness.

இந்த உண்மையைக் கவித்துவமான உணர்வாக வெளிப்படுத்துகிறது இப்பாடல்.

இன்னுமொரு வார்த்தையும் நமது கவனத்துக்கு உரியதாகிறது. நாயேன் என்று தன்னை அழைத்துக் கொள்வது எங்ஙணம்?
பிறிதோர் இடத்தில் நான் எழுதியிருந்தது கவனத்துக்கு வருகிறது. It is the most notorious on
the part of the most virtuous to consider themselves the most vicious. இறைக்
கருணை வேண்டிப் பிரார்த்திக்கும் போது நம்மாழ்வாரைப் போன்ற பாவத்தின் வாசனை கூடத் தம்மேல்
படாதவர்கள் தம்மை இப்படி நிந்தித்துக் கொள்வதேன் என்பதைப் பற்றி எழுதும்போதே அப்படி
எழுதியிருந்தேன். இதை விளக்க, செய்த அல்லது செய்யத் தவறிய காரியங்கள் பாற்பட்ட பாவங்களன்று இவர்கள்
குறிப்பது. அடிப்படையில் மனிதனாகப் பிறந்ததற்கு ஏதுவாகிப் போன பாவத்தைக் குறித்தே இப்படிப்
பேசுகிறார்கள் என்றேன். அதாவது ஆங்கிலத்தில் Mans present is the sum of the
accumulated merit and sins of mankind and it is the elemental sin of Man
that these people ascribe to themselves என்று எழுதியிருந்தேன். இப்பாடலில் பாவைக் கன்னி
சொல்வதும் அப்படிப்பட்ட அடிப்படைப் பாவப்பீடிப்பே அன்றி அவள் அறிந்து செய்த அல்லது செய்யத் தவறிய
காரியங்களின் பாற்பட்ட பாவம் அன்று என்பதைத் தெளிவாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்பாடலில் இன்னுமொரு கவனத்துக்குரிய வார்த்தை சேவகன் என்பதாகும். கடவுளை மனிதனின் சேவகன் என்று
குறிப்பிடுவது விநோதமாகத் தெரியலாம். விளக்கம் காண வேண்டிய வார்த்தை. ஆன்மாக்களை ஈடேற்றியே
தீர்வது என்ற தீர்மானத்தில் இருப்பவன் இறைவன் என்பதால் சேவகன் என்று குறித்த நயம் சிந்தனைக்கும் பக்தி
ஈடுபாட்டுக்கும் உரியது.

நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் முதற்பாடலிலேயே இதைக் குறித்துப் போயிருக்கிறார்.

உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயரவறு அமரர்கள் அதிபதி எவனவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே

என்பது பாடல். இதில் என்னதான் மயர்வுகளை அற்றுப் போகவைக்கத் தேவையான மதிநலத்தை அருளினாலும்
மயக்கம் தீராத ஆன்மாக்கள் துயரடைவதுதான் நடக்கப் போகிறது என்பதால் கடைசி அடியில் துயரறு சுடரடி
என்றார்.

சாத்திரம் என்பது அறிவுவாத மயமானது. காரண காரியங்களை நுணுக்கமாக சுபக்கமாகவும் பரபக்கமாகவும்
தீர்க்கமாக ஆராய்பவை சாத்திரங்கள். என்றாலும் அத்தகைய அறிவின் வளம் எல்லாம் தோத்திர நூல்களின்
அனுபவத்தையே ஆதாரமாகக் கொண்டவை. அவ்வகையில் சிவஞான சித்தியாரை விளக்கிய திருஞானசம்பந்தர்
சாத்திரத்துக்கு ஆதாரமாகத் திருவெம்பாவையின் பதினேழாம் பாடலைக் காட்டுகிறார் என்றால் இப்பாடலின்
பெருமை புரிகிறது.

பொறுப்பரிய பேரன்பை அருளி அதன் வழியே புகுந்திடுவன் எங்குமிலாப் போகத்தைப் புரிந்தே என்பது
சிவஞான சித்தியார் வாக்கு. எங்குமிலாததோர் இன்பம் என்ற இப்பாடலின் தொடர் எங்குமிலாப்
போகம் என்ற சித்தியார் வாக்குக்கு அடிப்படையாக அமைகிறது.


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com