From perichandra@... Mon Dec 31 15:11:19 2001
Return-Path: Received: (qmail 12834 invoked from network); 31 Dec 2001 23:11:19 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 23:11:19 -0000
Received: from unknown (HELO n33.groups.yahoo.com) (216.115.96.83) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 23:11:18 -0000
X-eGroups-Return: perichandra@...
Received: from [216.115.96.117] by n33.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 23:11:18 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 31 Dec 2001 23:11:12 -0000
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 31 Dec 2001 18:07:51 -0000
Received: (qmail 80648 invoked from network); 31 Dec 2001 18:07:51 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 31 Dec 2001 18:07:51 -0000
Received: from unknown (HELO n15.groups.yahoo.com) (216.115.96.65) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 31 Dec 2001 18:07:51 -0000
Received: from [216.115.96.144] by n15.groups.yahoo.com with NNFMP; 31 Dec 2001 18:07:16 -0000
Date: Mon, 31 Dec 2001 18:07:39 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Panchali Sabatham - Kavithai Natakam - ArangERRam
Message-ID: In-Reply-To: <002a01c191d0$d73b5720$0200a8c0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3430
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14372
--- In agathiyar@y..., "Mani M. Manivannan" wrote:
> சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும்
>
> பொங்கல் விழா - முத்தமிழ் விழா
>
> சனவரி 12, 2002, 4.00 PM to 8.00 PM
>
> சான் ஓசே சிடி காலேஜ் ஆடிட்டோரியம்
>
> ...தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டிச் ...
பொங்கல் மட்டுமே தமிழர் திருநாளா?
கார்த்திகை/தீபாவளி விழாவிற்குத்தான் பொங்கலைவிடச் சான்றுகள்
சங்க இலக்கியத்தில் உண்டு.
கார்த்திகைத்தீபம் மிகப் பழைய தமிழர்பண்டிகை. அது முருகனுக்கு உரியது.
தீபாவளி அதினின்று பிரிந்திருக்கவேண்டும். கார்த்திகைக்குத் தீபவரிசையை (தீப ஆவளியை)
ஊர்முழுதும் நிறுவுவது சங்க இலக்கியத்தில் காணலாம்.
எங்கும்போய்த் தொலையும் கெடும்பில்லாத பொங்கலுக்கு மிகையான தவறான "தமிழர்
திருநாள்" என்ற பட்டத்தைச் சூட்டி நாம் கார்த்திகையைத் தொலைத்துக்கொண்டு
இருக்கிறோம்.
இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை:
யாராவது தமிழரின் பண்பாட்டுக் கூற்றை எடுத்துத்
தமக்கு உரியதுபோல் காட்டினால் அல்லது தமக்கும் விழுமியதென்று காட்டி
ஏதும் கதை கட்டுதல் போன்றவற்றைச் செய்தால் இக்காலத்து அரைவேக்காட்டு
இயக்கங்கள் அந்தப் பண்பாட்டுக் கூற்றை உடனே கைவிடுவதைக் கோட்பாடாகக் கொண்டுள்ளன.
எதைப் பற்றியாவது பெரியாருக்குப்பிடிக்காதமாதிரி ஏதாவது கதையிருந்தால் அது தமிழர்
பண்பாடு அன்று என்று ஒதுக்குவது இன்றைய வழக்கம். இப்படித்தானே தெய்விக
இலக்கியங்களினின்று இன்று நாம் தொலைந்து நிற்கிறோம். திருவாசகம் தேவாரம் திவ்வியம்
பெரியபுராணம் எல்லாம் பெரியார் நோக்கிற் செயல்பட்டதால் எங்கோ நிற்கின்றன.
கடைசியில் அந்தவெறுமையில் வடமொழி மரபுகளும் தோத்திரங்களும் நிரம்புகின்றன.
முதலுக்கே மோசம்!
சில கூறுகள் கடைச் சங்கக் காலமுன்பே இந்தியாமுழுதும் இருந்த திராவிட/இந்தியப்
பண்பாடுகள்; அவை எல்லாருக்கும் (அத்தாவது இன்றைய தமிழர் என்னும் சமுதாயத்திற்கு
மட்டுமன்றித் தொல்தமிழரினின்று கிளைத்த மற்ற திராவிட
மொழியினர்/வடமொழிச்சமுதாயத்தோடு கலந்துவிட்டவர் அனைவருக்கும்) உரியன.
இன்றைய தமிழரல்லார் அவற்றை வடமொழி
வழியாகப் பேணுவது உடனே தமிழ்மை அல்லதென்று பொருள்படாது.
அவ்வாறு கருதி அக்கூறுகளை
இழப்பதைப் போல் மிகப்பெரிய மடமை ஏதும் இல்லை. ஏனெனில் அக்கூறுகள்
அவற்றின் பரவலினாலேயே தம் தொன்மையைக் காட்டுகின்றன. அத்தொன்மையில்
தமிழருக்கும் முதற்பங்குண்டு.
நாம் இதுபோல் மொழியமைப்புகள், சொற்கள், யோகநெறி, கணிதம், கலைநெறிகள்
ஆகியவற்றைப் படிப்படியாகத் தொலைத்துள்ளோம். பலசமயங்களில் வடமொழி நூல்களே
நம் பழைய பண்பாட்டுக்கூறுகளை மீட்கும் மூலமாகிவிட்டது. அந்நூல்களில் நம் கருவான
பண்பாட்டிற்கு மாறுபட்டவற்றை ஆய்ந்து விலக்கி மிஞ்சுவதை மரியாதையோடு ஏற்பதுதவிர
வேறுவழியில்லாத நிலைக்கு உள்ளோம். வேண்டுமானால் அவ்வாறு கண்டசெய்திகளைத்
தமிழ்மொழியில் நூலாக்கவேண்டும். [இன்று திருமணம் போன்ற பல குலச்சடங்குகளின்
நுணுக்கங்களை பலர் தொலைக்கும் தறுவாயில் உள்ளனர். அந்தந்தக் குலத்தோர்
விரைவில் தத்தம் சங்குகளை நூலாகச் செய்முறை வடிவில் கையேட்டுவடிவில்
வெளியிடுவதை மேற்கொள்ளவேண்டும். அதில் ஒருபோதும் வழுவக்கூடாதன, ஏன் அந்தநெறி,
மற்றும் இன்றியமையாதன என்று வகுத்துக் குறிப்பிடவேண்டும்.]
நாம் இந்தத் தனித்தமிழ்/திராவிட இயக்கத்தின் முழு ஆதிக்கத்திற்கு ஆளாகித்
தமிழர்மட்டுமே பேணும் கூறுகளை மட்டுமே பேணுவோம் என்று செல்வது கேட்டில்
விடும் புல்லறிவாகும்.
இந்தத் தமிழ்ச்சங்கங்களும் மற்ற தமிழறிஞர் பெயர்வழிகளும் கார்த்திகைத் தீபத்தைக்
காக்கும் வழியை நடத்துவது நலமாகும். தீபாவளி விழா என்னும் தலைப்புத் தொடரில்
கார்த்திகைத் தீபம் என்னும் தொடரையும் தொடுக்கும் மரபை முதலில் கொணரலாமே.