From aysh@... Mon Dec 31 19:51:41 2001
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 1 Jan 2002 03:51:40 -0000
Received: (qmail 27472 invoked from network); 1 Jan 2002 03:51:40 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 1 Jan 2002 03:51:40 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Jan 2002 03:51:39 -0000
Received: (qmail 18425 invoked from network); 1 Jan 2002 09:10:49 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.98) by 202.144.76.18 with SMTP; 1 Jan 2002 09:10:49 +0530
To: Subject: tho.mu.chidhambara raghunathan passes away
Date: Fri, 1 Feb 2002 09:21:57 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
In-Reply-To: <3.0.6.32.20020101082828.007e4930@...>
Importance: Normal
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14382
புத்தாண்டு, முற்போக்கு இலக்கியப் படைப்பாளர் தொ.மு.சி ரகுநாதனின் இழப்போடு துவங்குவது வருத்தம் தரும்
விஷயம் தான். ஆனாலும் சமுதாய முன்னேற்றத்துக்கும், புத்திலக்கிய வளர்ச்சிக்கும்தொண்டாற்றுவதில் கழிந்த
முழுமையான வாழ்க்கை அவருடையது என்பதில் தொ.மு.சி பெருமிதம் கொண்டே மறைந்திருப்பார்.
'பஞ்சும் பசியும்' போன்ற புதினங்கள், திருச்சிற்றம்பலக் கவிராயராக எழுதிய கவிதைகள், சிறுகதைகள்,
புதுமைப்பித்தனின் தோழர், பெரியவர்கள் தி.க.சி, வல்லிக்கண்ணன் ஆகியோரின் உற்ற நண்பர் என்ற எல்லா
அடையாளங்களையும் விட தொ.மு.சிக்கு இன்னொரு அழுத்தமான இலக்கிய அடையாளம் உண்டு.
உலகப் பெரும் இலக்கியப் படைப்புக்களில் ஒன்றான மாக்ஸிம் கோர்க்கியின் 'தாய்' தமிழுக்கு இவர் மூலம்
தான் கிடைத்தது. அறியாப் பருவத்தில் நான் படித்த அந்தப் படைப்புத் தான் என்னுள் இலக்கிய பிரக்ஞையை
உருவாக்கி, இலக்கியத் தேடலின் எல்லைகளை விரிய வைத்தது.
தோழர் ரகுநாதனுக்கு அஞ்சலி. அவர் ஆன்மா சாந்தியடைய (அவர் நம்பாவிட்டாலும்) இறைவனைப்
பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
இரா.முருகன்
anbudan,
EraMurukan
[Non-text portions of this message have been removed]