From jaybee@... Mon Dec 31 23:19:35 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 1 Jan 2002 07:19:33 -0000
Received: (qmail 34436 invoked from network); 1 Jan 2002 07:19:33 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 1 Jan 2002 07:19:33 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Jan 2002 07:19:34 -0000
Received: from user (sp-103-193.tm.net.my [210.186.103.193]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GP90014L0CJRG@...> for agathiyar@yahoogroups.com; Tue, 01 Jan 2002 15:19:33 +0800 (SGT)
Date: Thu, 03 Jan 2002 15:23:05 +0800
Subject: Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 years ago.....A True story#5
In-reply-to: <20011230113926.60752.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "era.murugan achwin": ;
Message-id: <3.0.3.32.20020103152305.0071cf7c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20011230191003.0114683c@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14386

At 03:39 AM 12/30/01 -0800, you wrote:
>
>>
>> http://www.geocities.com/visva.geo/sksdiary9.html
>>
>> காலிக்கோ பைண்டிங்; 3.5 X 5 X 0.75 inches.
>> Folder-இன் அமைப்புக்கொண்டது. Strap ஐக் கொண்டு டயரியை
>> மூடிக்கொள்ளலாம். Flap-இன் உட்பக்கத்தில் அழகிய சிறு பென்சில்
>> ஒன்று செருகப்பட்டிருக்கும்.
>
>
>அட்டஹாசம். அபாரம். அந்தக் குட்டிப் பென்சிலை இன்னும் பத்திரமாக
>வைத்திருக்கிறீர்களே!


அது, அதாகவே பத்திரமாக டயரிக்குள் இருக்கிறது:-)

>
>டைரியை வெளியிட்ட 'வேதாரண்யம் சத்யாக்கிரஹ முதற்படைத் தொண்டர்
>மதுரை மு.பழனியாண்டி சேர்வை யார்?


தெரியவில்லை. நெடுமாறன் போன்ற பழைய ஆட்களைக்
கேட்டுப்பார்க்கலாம்.
தமிழ்நாட்டுக் காங்கிரஸ்/விடுதலை இயக்கத்தைப் பற்றி
ஏதும் விரிவான புத்தகங்கள் வந்திருக்கின்றனவா?


>
>டைரியில் காந்தி மகான் புகைப்படத்தோடு கூடிய இரண்டாம் பக்கத்தில்,
>விவேகானந்தரின் அமர வார்த்தைகளான "விழிமின்", "எழுமின்"
>ஆகியவற்றைத் தலைப்பில் போட்டிருக்கிறார்கள். அதில் "விழிமின்" ஒரு
>துண்டு கடுதாசில் அச்சடித்துத் தனியாக ஒட்டப் பட்டிருப்பது தெரிகிறது.
>
>எனக்கு உடனடியாக இது நினைவுக்கு வருகிறது - இரண்டு ஆண்டுகள் முன்னால்
>இங்கே ஒரு பத்திரிகையில் அந்தக் குறிப்பு அச்சேறும் வரை "விழுமின்
>..எழுமின்" என்று இருந்தது. அச்சுக்குப் போகும்போது தான் விபரீதத்தை
>உணர்ந்த ("விழுமின்") உதவி ஆசிரியர் உடனடியாக அதை நிறுத்தி,
>வார்த்தையைச் சரியாகத் திருத்தினார்.
>
>காங்கிரஸ் டைரி அடிக்கும் போதும் அதே போல் நடந்திருக்குமோ?


அப்படி ஏதும் இருந்திருக்கலாம். அந்த லேபிலை நீக்கிப்
பார்க்கவில்லை. அப்படியெல்லாம் செய்தால் அதனுடைய பழைய
தன்மை கெட்டுவிடும்.

பழங்காசுகள் சேகரிப்பதிலும் பல கோட்பாடுகள் இருக்கின்றன.
அவற்றைத் தேய்த்துப் பாலிஷ் போட்டுவிடக்கூடாது. அப்படிச்செய்தால்
அந்தப் பழங்காசின் மதிப்பு பெரிதும் வீழ்ந்துவிடும்.

பழங்காசில் ஒருவிதமான களிம்பு ஏறியிருக்கும். அதனை
pimenta என்று சொல்வார்கள். அது அந்தக்காசில் இருக்கவேண்டும்.
பாலிஷ் ஏற்றி அதனை நீக்கிவிட்டால், அந்த நாணயம் தன்னுடைய
பழையநாணய மதிப்பை இழந்துவிடும்.
விதிவிலக்கு - தொல்பொருள் ஆய்வில் ஈடுபடுத்தப்படும்
காசுகள். அவற்றின் காலம் முதலியவற்றைக் கணிப்பதற்கு அவற்றைக்
கட்டாயமாகத் துப்புறவாகச் சுத்தம் செய்யத்தான் வேண்டியிருக்கும்.

தற்கால எகிப்து, மக்களாட்சி ஏற்படுமுன்னர், மன்னர்களால்
ஆளப்பட்டு வந்தது. ஜெனரல் நகீப், கர்னல்நாஸர் ஆகியோர்
செய்த புரட்சியில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

அந்த நாட்டின் கடைசி மன்னராக இருந்தவர் ஃபரூக்.
அவர் பழங்காசுகளை நிறைய சேகரித்துவந்தார். அடிக்கடி அவர்
தம்முடைய காசுகளை எடுத்துவைத்துக்கொண்டு பாலிஷ் போட்டு
மெருகேற்றியவண்ணமிருப்பார்.
அவர் நாட்டைவிட்டு ஓடும்போது நிறையப்பொருள்களும்
பணமும் எடுத்துச்சென்றார். அந்த நாணயக் குவையும் இருந்தது.
அதனை அவர் விற்க நினைத்தபோது அவற்றுக்குரிய விலை
கிடைக்கவில்லை. Worthless என்று ஒதுக்கிவிட்டார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி

>
>அன்புடன்,
>இரா.முருகன்
>
>__________________________________________________