From aj@... Tue Jan 01 07:29:23 2002
Return-Path: X-Sender: aj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 1 Jan 2002 15:29:22 -0000
Received: (qmail 71305 invoked from network); 1 Jan 2002 15:29:22 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 1 Jan 2002 15:29:22 -0000
Received: from unknown (HELO omail2.emirates.net.ae) (194.170.168.4) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 1 Jan 2002 15:29:22 -0000
Received: from pmail3.emirates.net.ae by omail2.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with ESMTP id <0GP900KSUN0QB9@...> for agathiyar@yahoogroups.com; Tue, 1 Jan 2002 19:29:14 +0400 (GST)
Received: from asif (ldb284.emirates.net.ae [217.165.137.30]) by pmail3.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with SMTP id <0GP900CGKN0JPS@...> for agathiyar@yahoogroups.com; Tue, 01 Jan 2002 19:29:09 +0400 (GST)
Date: Tue, 01 Jan 2002 19:13:42 +0400
Subject: RE: [agathiyar] Asif Meeran calls...
X-Sender: aj@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <1.5.4.32.20020101151342.0069710c@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Content-type: text/plain; charset="iso-8859-1"
Content-transfer-encoding: quoted-printable
From: Asif Meeran X-Yahoo-Group-Post: member; u=31404947
X-Yahoo-Profile: asifmeeran
X-Yahoo-Message-Num: 14395
அன்பின் முருகன் அவர்களுக்கு,
இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
சாபு அண்ணன் தாயகத்தில்தன் இருக்கிறார். அவரது
தாயாரின் உடல்நிலை கவலைக்குள்ளாகி இருப்பதால் அவசர
விடுப்பில் வந்திருந்தார்..சென்னையில்இருக்கிறாரா கூத்தாநல்லூரிலா
என்று தெரியவில்லை.. சென்னையில் நண்பர்கள் அனைவரையும்
அவசியம் சந்திக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்..
வாய்ப்பு எப்படி அமையுமென்றுதான் தெரியவில்லை. அவரது
தாயார் உடல் நிலைக்காக பிரார்த்தியுங்கள்.
பெரியவருடன் பேச வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி எனக்கு.
அவரோடு அவ்வப்போது தனிமடலில் அளவளாவுவதுண்டு. அப்போதெல்லாம்
அவரது உடல் நிலை குறித்து அதிகமாகக் கேட்டதில்லை.. ஆனால்,இன்று
சாதாரணமாக அவரிடம் உங்கள் உடல்நிலை எப்படியிருக்கிறது என்று கேட்ட
போதுதான் 38 வயதில் மாரடைப்பு ஏற்பட்டதையும் இதயத்தில் நான்கு அடைப்புகளில்
அறுவை சிகிச்சை மூலம் மூன்றினை அகற்ற முடிந்ததையும் மற்றுமொன்றைச் சுமந்து
கொண்டே இருப்பதையும் உணர முடிந்தது..அதுபோலவே உதட்டில் நடந்த அறுவை
சிகிச்சையைத் தொடர்ந்து நாக்கில் சில நரம்புகள் பாதிகப்பட்டதையும், இப்போது
கண்ணில் இருக்கும் பிரச்னையையும் சொன்னார்.
உண்மையில் அவரைப் போன்ற உடல்நிலையை வைத்துக் கொண்டு இணையப் பக்கம்
எட்டிப் பார்ப்பதே மிக மிகக் கடினமான விடயம். என்றாலும் பெரும் சிரமத்திற்கிடையிலும்
அவர் அகத்தியரில் நேரம் ஒதுக்கி தான் அறிந்தவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்வதில்
காட்டும் சிரத்தைக்கும், அக்கறைக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி
எஞ்சி நிற்கிறது.
அன்புடன்,
ஆசிப் மீரான்
>Glad to know Asif phoned u up. What happened to our another Emirates friend
>Sabu?
>
>Thambi Asif, I wish u and dear Sabu a happy and prosperous new year 2001 !!