From jaybee@... Fri Jan 04 06:43:54 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 14:43:54 -0000
Received: (qmail 40588 invoked from network); 4 Jan 2002 14:43:52 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 14:43:52 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 14:43:52 -0000
Received: from user (sp-103-64.tm.net.my [210.186.103.64]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPF00A8N4X1QL@...> for agathiyar@yahoogroups.com; Fri, 04 Jan 2002 22:43:51 +0800 (SGT)
Date: Fri, 04 Jan 2002 22:47:39 +0800
Subject: Murugan or Sivan KOYil? - Re: [agathiyar] Some questions about Arunagirinathar
In-reply-to: <20020103172821.12818.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020104224739.0072be28@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.6.32.20020103223540.007f8100@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14503
At 09:28 AM 1/3/02 -0800, Ellay Ram wrote:
>அன்புள்ள சிங்கை கிருஷ்ணன்,
>
>நன்றியும் பாராட்டுகளும். பிரமாதமாக எழுதி iருக்கிறீர்கள்.
>
>'ஆதி அருணாசலம் அமர்ந்த ...' என்பதற்கு, 'திருவண்ணாமலையில் தற்போது
>iருக்கும் கோவிலை விட iன்னும் பழமை வாய்ந்த கோவில் ஒன்றைக்'
>குறிப்பிடுகிறார் என்று iங்கே ஒரு கோவில் குருக்கள் அவசர விளக்கமாகச்
>சொன்னார். அது அவ்வளவு சரியா என்பதுதெரியவில்லை.
அப்படியும் இருக்கலாம்.
அருணகிரிநாதர் பாடியுள்ள பல இடங்களில் முருகனுக்கென்று
தனிக்கோயில்கள் தற்சமயம் இல்லை. ஒருகாலத்தில் இருந்திருக்கலாம்.
சிலவேளைகளில் அக்கோயில், ஒரு பெரிய சிவன் கோயிலுடன் இணைந்து
விட்டிருக்கும். அல்லது பெரிய சிவன்கோயிலில் ஒரு தனிச் சன்னிதியாக
விளங்கலாம். அல்லது சிவன் கோயில் complexஸுக்குள்ளேயே
முருகனுக்கென்று ஒரு கோயில் இருக்கலாம்.
உதாரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
மதுரை நகரில் முருகனுக்கென்று தனிப்பட்டு அருணகிரிநாதர்
காலத்திய கோயில்கள் கிடையா.
ஆனால் மீனாட்சியம்மன் கோயிலில்கூடல் முருகன் சன்னிதி
என்று ஒரு சன்னிதி இருக்கிறது.
அது எங்கே இருக்கிறது என்றா கேட்கிறீர்கள்?
சொல்றேன்.
அதாவது, பொற்றாமரைத் திருக்குளத்தின் கரையிலிருந்து
மீனாட்சியம்மன் சன்னிதியை நோக்கிச்செல்கிறோம். அதன்
வெளிப்பிரகாரத்துக்குள் நுழையவிருக்கிறோம். வலப்புறம் பார்க்கிறோம்.
பெரிசு உட்கார்ந்திருக்கிறது. அதாவதுமுக்குறுணி விநாயகர்.
இந்தப்பக்கத்தில் அனுக்ஞை விநாயகர்.
சரி. உள்ளே நுழைகிறோம்.
பிரகாரத்துக்கு வந்து விட்டோம்.
சன்னிதியின் வாயிலில் திருமலை விநாயகர் அமர்ந்திருக்கிறார்.
அங்கேதான் குமரகுருபரர், மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடி அரங்கேற்றிய
நாற்கால் மண்டபம் இருக்கிறது.
நாம் அப்படியே அந்த பிரகாரத்தில் சுற்றி வர ஆரம்பிக்கிறோம்.
முதலில் தென்கிழக்கு மூலையில் திருமலை நாயக்கர் "நமஸ்காரமு"
செப்பிக்கொண்டு தன் மனைவியர் புடைசூழ பாக உன்னாராக
நின்றுகொண்டிருக்கிறார்.
அப்படியே நேரே செல்கிறோம் பெரிய பெரிய சிலைகள் நான்கு.
தூண்களின்மீது நின்றுகொண்டு அதுகள் பங்குக்கு நமஸ்காரமு சொல்லிக்
கொண்டிருக்கின்றன. எல்லாம் மனவாடு.
தென்மேற்கு மூலையில் கொலு மண்டபம் இருக்கிறது. அங்குதான்
ஊஞ்சல் விழா நடைபெறும். வலது புறமாக தொண்ணூறு டிகிரி திரும்புகிறோம்.
நேரே வடமேற்கு மூலையைக்குச்சென்று விடுகிறோம்.
ஆஹா!
வள்ளி தெய்வயானையுடன் சர்வாலங்காரபூஷிதராக முருகப்பெருமான்
கூடல் குமரனாக நின்றுகொண்டிருக்கிறார். அருகில் கூடல் விநாயகர்.
அடடே! அவருக்கருகில் யாரவர் அந்த இன்னொருவர்?
அருணகிரிநாதர்தான் நிற்கிறார்.
நாம் படங்களில் அருணகிரிநாதர், தாடி மீசை ஜடாமகுடத்துடன்தான்
அதிகமாகப் பார்த்திருக்கிறோம். போதாததற்கு டீயெம்.சௌந்தரராஜன்
அந்தக்கோலத்தில் அருணகிரிநாதராகத் தோன்றி அந்த அவ்வடிவத்தை மிக
ஆழமாகப் பதிப்பித்துவிட்டார். ஆனால்இங்கோ? மழித்த தலையுடன்
ருத்திராக்கதாரியாக அருணகிரிநாதர் நின்றுகொண்டிருக்கிறார்.
இந்தக் கூடல் குமரனைத்தான் அருணகிரிநாதர் பதினோரு பாடல்களில்
சிறப்பித்திருக்கிறார்.
திரிபுரநக்கன் பாதி மாதுறை
அழகிய சொக்கன் காதிலோர் பொருள்
செலவருளித்தென் கூடல் மேவிய பெருமாளே!
என்றும் பாடியுள்ளார்.
'மதுரைச் சங்கிலி மண்டப' என்பது அருகில் இருக்கும் ஊஞ்சல்
மண்டபமாக இருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் இருக்கிறது.
அன்புடன்
ஜெயபாரதி
அருணகிரியார்
>வாழ்ந்த காலம் என்ன?
>
>'ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்' என்பதில் ஆறுமுகமான பொருள் என்று
>எதனைக் குறிப்பிடுகிறார்?
>
>iடைக்காட்டு சித்தர் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
>
>அன்புடன்,
>
>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
==============================