From harikris@... Fri Jan 04 07:26:30 2002
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 15:26:30 -0000
Received: (qmail 73933 invoked from network); 4 Jan 2002 15:26:30 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 15:26:30 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 15:26:29 -0000
Received: from harikris ([203.199.240.113]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPF6W200.Y42 for ; Fri, 4 Jan 2002 20:56:26 +0530
Message-ID: <01d401c19534$72909300$4ef0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com" References: <20020104015625.82553.qmail@...>
Subject: Re: [agathiyar] isai vizhA
Date: Fri, 4 Jan 2002 20:57:06 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14506
முருகு,
எந்தக் கச்சேரியைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. பொருள் உணர்ந்து பாடும் அற்புதமான கலைஞர் நித்யஸ்ரீ. அந்த விதத்தில் சுதா கூட கொஞ்சம் மாற்றுக் குறைவுதான்.
இது நான் ரசித்தது. ஜெயா டிவியில் மாலை 6 மணிக்கு ஒரு நிகழ்ச்சி. நித்யஸ்ரீ பாடுகிறார். 'கமகத்துக்கும் பிருகாவுக்கும் என்ன வித்தியாசம்?' என்று யாரோ கேட்கிறார்கள். 'இப்போ பாருங்கோளேன்' என்று சொல்லிவிட்டு, கண்ணைக் கொஞ்சம் மூடிக் கொண்டு வராளியில் அஅஅ என்று (அதாவது கா வாவாவாஅஅஅ என்று வருவது மாதிரி) இழுத்தார். 'இது கமகம்' என்றார். அப்புறம் ஒரு உருட்டு உருட்டினார்.நம்ப சேட்ட கோபாலன் வார்த்தைக்கு வார்த்தை பண்ணுவாரே அப்படி. 'இது பிருகா' என்றார். தொடர்ந்து விளக்க முற்பட்டார். 'அதுக்கு ஒரு டயக்ரமே இருக்கு. இதோட இது வரும் இது வராதுனு பெரிய கணக்கே இருக்குஇ' என்றார். சின்ன தயக்கம். கண்ணில் கொஞ்சம் வெட்கம். குழந்தை மாதிரி சிரிக்கிறார். (வழக்கம் போல 'குழந்தைமாதிரி' என்ற வர்ணனை இல்லை. குழந்தை மாதிரியே.) கை விரல்களைக் குவித்து, உடலை சற்றே முன்னுக்குப் பணிவாக வளைத்து, கழுத்தைக் கெஞ்சலாக ஒரு பக்கம் சாய்த்து, குவித்த கையை நெஞ்சில் தொட்டு, இன்னொரு கை விரல்களை இயலாமையாக விரித்து 'எனக்கு அதுக்கு மேல தெரியல,' என்று அப்பாவியாகச் சிரிக்கிறார்.
என்ன சத்தியம்! என்ன அழகாக ஒரே வினாடியில் விளக்கிக் காட்டியாயிற்று! அப்புறம் என்ன எனக்குத் தெரியல? இயல்பான அடக்கம். நான் எவ்வளவு அடக்கமாக இருக்கிறேன் பார் என்று காட்டிக் கொள்வதற்கான அடக்கம் இல்லை. எனக்குக் கண்ணில் நீர் வழிய ஆரம்பித்து விட்டது. 'அம்மாடி பரதேவதே இதுக்கு மேல என்னடிம்மா தெரியணும்' என்று நினைத்துக் கொண்டேன்.
மறு நாள் காரைக்குடி மணியிடம் லயத்துக்கும் தாளத்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறார்கள். ஐந்து நிமிடம் விரிவாக, பொறுமையாக விளக்குகிறார். என் மரமண்டைக்கு ஒண்ணும் புரியவேயில்லை. இத்தனைக்கும் சந்தக் கவிதையோடு நெருங்கிய உறவுள்ள விஷயம்.
காரைக்குடி மணி புலவர். வணங்கத் தக்க அறிவு நிறைந்தவர். நித்யஸ்ரீ கவிஞர்.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: "era.murugan achwin" To: Sent: Friday, January 04, 2002 7:26 AM
Subject: [agathiyar] isai vizhA