From eramurug@... Fri Jan 04 08:35:05 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 16:35:05 -0000
Received: (qmail 37923 invoked from network); 4 Jan 2002 16:35:03 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 16:35:03 -0000
Received: from unknown (HELO web14808.mail.yahoo.com) (216.136.224.224) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 16:35:03 -0000
Message-ID: <20020104163503.41636.qmail@...>
Received: from [210.214.130.96] by web14808.mail.yahoo.com via HTTP; Fri, 04 Jan 2002 08:35:03 PST
Date: Fri, 4 Jan 2002 08:35:03 -0800 (PST)
Subject: Re: [agathiyar] isai vizhA
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <01d401c19534$72909300$4ef0c7cb@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14508

அதே தான் ஹரி.

இந்த நாலு வருஷத்தில் பட்டை தீட்டிய கோஹினூர் வைரமாகி விட்டார்
நித்யஸ்ரீ. அதனால் தான் எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டு போகிறது. பட்டம்மாள்
பேத்தி என்று வாஞ்சையோடு தான் அவர் பாடுவதைக் கேட்க ஆரம்பித்தது -
நித்யஸ்ரீக்குப் பாட்டி பட்டம்மாள் என்று இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.

சொன்னேனே..அந்த முதல் தர வித்வாம்சினியிடம் கலை வெளிப்படுவது போல்
கற்பனையும் வெளிப்பட்டால் தானே மனதுக்கு நிறைவாக இருக்கும்? இயல்பாகவே
பிர்க்கா உதிரும் சாரீரம் அவருக்கு. தடதடவென்று கிராண்ட் டிரங்க்
எக்ஸ்பிரஸ் போபாலைத் தாண்டி வேகம் எடுப்பது போல் ஸ்வரப் பிரஸ்தாரம் -
கூரை பிய்ந்து விழுகிற மாதிரி அப்ளாஸ்.. இது ஷண்முகப்பிரியா
தான்..குழந்தை கூடச் சொல்லும். யாரும் பாடலாம். பட்டம்மா பேத்தி -
பாட்டம்மா நித்யஸ்ரீ அதன், கம்பீரமான நேர்த்தியை, குழைந்து எழுந்து
பூரித்துப் பொங்கும் வனப்பைக் காட்ட வேண்டாமா? ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்
மாதிரி, அழகான கன்யகை மாதிரி விண்ணென்று ஒயிலாக நிமிர்ந்து
குதித்து நடை போட்டுப் போகும் அற்புதம் இல்லையா அது? நித்யஸ்ரீக்கு என்ன
குறைச்சல்? குரலிலா? திறமையிலா? பாடாந்தரத்திலா? புகழிலா?
அனுசரித்து வாசிக்கும் பக்க வாத்தியங்களிலா?

ஒரு உதாரணம் சொல்றேன். பர்வீன் சுல்தானா கச்சேரி ஒரு பதினைந்தாவது
கேட்டிருப்பேன். மிஸ்ர பைரவியில் 'அம்பா பவானி' பாடாமல் கச்சேரியை
முடிக்க மாட்டார். ஒவ்வொரு தடவை கேட்கும் போதும் பைரவி புதுப்புது புதுப்புது
புதுப்புது எல்லைகளைத் தொடும். இந்துஸ்தானி வித்வான்கள் மனோதர்மத்துக்கு
முதலிடம் கொடுப்பார்கள். இங்கே அப்படிப் பாடினால் தேங்காய் மூடி
கிட்டலாம். மியூசிக் அகாடமியிலும், நாரதகான சபாவிலும் சாயந்திரக்
கச்சேரிக்கு சான்ஸ் கிடைக்காது. (எம்.டி.ராமநாதன் இருந்தபோது எத்தனை
பேர் அவர் கச்சேரிக்கு வந்தார்கள்? அதுவே அரியக்குடி என்றால்?)

சீனியர் வித்துவான்கள் என்றதும் சமீபத்தில் படித்த ஜோக் நினைவு
வருகிறது.

செம்மங்குடி வீட்டில் ஈசி சேரில் உட்கார்ந்திருக்கிறார். டெலிஃபோன்
சத்தம். யாரோ எடுத்துக் கேட்டு விட்டு செம்மங்குடியிடம் சொல்கிறார்கள் -
"மாமா..தூர்தர்ஷன்லேருந்து கூப்பிடறா"

செம்மங்குடி : "யார் போய்ட்டான்னு கேளு"

அன்புடன்,
இரா.முருகன்


--- Hari Krishnan wrote:
> முருகு,
>
> எந்தக் கச்சேரியைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. பொருள்
> உணர்ந்து பாடும் அற்புதமான கலைஞர் நித்யஸ்ரீ. அந்த விதத்தில் சுதா கூட
> கொஞ்சம் மாற்றுக் குறைவுதான்.
>
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Send your FREE holiday greetings online!
http://greetings.yahoo.com