From perichandra@... Fri Jan 04 08:47:05 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 16:47:05 -0000
Received: (qmail 19226 invoked from network); 4 Jan 2002 16:47:05 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 16:47:05 -0000
Received: from unknown (HELO n8.groups.yahoo.com) (216.115.96.58) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 16:47:04 -0000
Received: from [216.115.96.152] by n8.groups.yahoo.com with NNFMP; 04 Jan 2002 16:46:56 -0000
Date: Fri, 04 Jan 2002 16:46:52 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: lines for rakam-taanam-pallavi (Re: isai vizhA)
Message-ID:
In-Reply-To: <01d401c19534$72909300$4ef0c7cb@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3106
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14509

--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> முருகு,
>
> எந்தக் கச்சேரியைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. பொருள் உணர்ந்து பாடும்
> அற்புதமான கலைஞர் நித்யஸ்ரீ.
>அந்த விதத்தில் சுதா கூட கொஞ்சம் மாற்றுக் குறைவுதான்.

சுதா பொருளுணர்ந்து உணர்வோடு/பாவத்தோடு பாடுவதில்லைபோலத்தான் தோன்றுகிறது.
அவருடைய செம்மையாலும் நுணுக்கத்தாலும் உணர்ச்சிதானாக *நம்முள்* தோன்றுகிறது.
அந்த விதத்தில் அவர் சிறக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
திருப்பாவையின் 19-ஆம்பாட்டான குத்துவிளக்கெரியவைச் சகானாவிலும்
28-ஆன கறவைகள் பின்சென்றுவைக் காம்போதியிலும் யார்பாடினாலும்
சுதாவினுடையதுபோல் கண்ணீரை வருவிப்பது இல்லை.
நித்யசிரீ தெலுங்குத் தமிழிசைக் கிருதிகளோடு தமிழ்மொழித் தமிழிசைக் கிருதிகளையும்
நிறையப்பாடுபவர். இங்கே அட்லாண்டாவில் அவர் அவ்வாறு பாடி அமைப்பாளர் ஒருவர்
நிறையப் பகை ஈட்டினார். :-)

சென்னைஆன்லைனின் இசையலசல்கள்:
http://www.chennaionline.com/musicseason2001/reviews/index.asp
அங்கே நித்யசிரீயை அலசல்:
http://www.chennaionline.com/musicseason2001/reviews/nithyasree.asp
சுதா:
http://www.chennaionline.com/musicseason2001/reviews/sudharaghunathan.
asp

ஏனோ இந்த முறை சுதா மிகமோசமாகப் பாடியிருப்பதுபோல் தெரிகிறது.
ஆனால் இப்படிக் கிழிபடுமளவு பாடுவது வியப்பே.
ஆமாம் இந்த இரகம்-தானம்-பல்லவிக்கு ஏன் இராகப் பெயர்களைக் கொண்ட அடிகளை
எடுத்துக்கொள்கிறார்கள் எல்லாரும். கொஞ்சம் அலுக்கிறது.
மேலே அலசி கடிந்ததுபோல்:
"...The pattern of choosing ragas with allied names and incorporating
them in the Pallavi line at the end of a swara is becoming very
cliched, and its value for holding audience interest is vastly
overrated. ..."

இங்கே நாங்கள் சேசகோபாலனுக்கு ஏற்படுத்திய கச்சேரியில் அவர் சங்கராபரணப்
பல்லவிக்குத்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
என்ற மணிவாசக அடிகளைத் தேர்ந்து கலக்கினார்.

நித்யசிரீயின் பயிரவி என்னும் பெயருடைய சார்சுர் CDW விலாசப்
பல்லவிச் சுவடியில் (album) அவரும்
"சிரீ தேவி பார்கவி மகாபயிரவி அருள்புரி <இராகப் பெயர்>" என்ற
அடிகளைத் தேர்ந்துள்ளார்.
சேசகோபாலனின் நாட்டை/நாட்டைக்குறிஞ்சி பல்லவிச் சுவடியிலும் (சார்சுர் விலாசம்)
"எங்கள் நாட்டைக் குறிஞ்சி என்பார்..."
என்று அடிகள்....சகிக்கவில்லை யென்றே சொல்லவேண்டும்.

சக்கரவாளத்தில் உள்ள பல்லவிச்சுவடியில் (சஞ்சய்?/சிவா?) (சார்சுர் விலாசம்)
திருப்புகழ் அடிகளான
"அபகாரநிந்தை பட்டுழலாதே - அறியாத வஞ்சரைக் குரையாதே..."
என்ற அடிகள் இராகத்திற்குத் தக்கவாறு உருக்கமாக இருக்கிறது.


>...
...
>
> மறு நாள் காரைக்குடி மணியிடம் லயத்துக்கும் தாளத்துக்கும் என்ன வித்தியாசம் என்று
>கேட்கிறார்கள். ஐந்து நிமிடம் விரிவாக, பொறுமையாக விளக்குகிறார். என் மரமண்டைக்கு
>ஒண்ணும் புரியவேயில்லை. இத்தனைக்கும் சந்தக் கவிதையோடு நெருங்கிய உறவுள்ள
>விஷயம்.
கொஞ்சம் எழுதுங்களேன்...
கற்கவிருப்பம்...

>
> காரைக்குடி மணி புலவர். வணங்கத் தக்க அறிவு நிறைந்தவர். நித்யஸ்ரீ கவிஞர்.
>
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.
>


அன்புடன்
பெ.சந்திரசேகரன்.