From ramaninaidu@... Fri Jan 04 09:05:47 2002
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 17:05:47 -0000
Received: (qmail 55036 invoked from network); 4 Jan 2002 17:05:47 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 17:05:47 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 17:05:47 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.61) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 4 Jan 2002 17:05:45 -0000
Message-ID: <003201c19542$2e0d7aa0$3deac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruppavai 21 tamil
Date: Fri, 4 Jan 2002 22:19:43 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14511

திருப்பாவை - நாள் இருபத்து ஒன்று - பாடல் இருபத்து ஒன்று

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தாய் மகனே அறிவுறாய்
ஊக்கமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாறு போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவையின் இருபத்தொன்று முதல் இருபத்து மூன்றாம் பாடல் வரை நப்பின்னையும் ஆயர் சிறுமியரோடு
சேர்ந்து கொண்டு இறைவனைத் துயிலெழுப்புவதாக அமைந்திருக்கின்றன.

வளம், ஊக்கம், பெருமை, பொலிவு ஆகிய இறை இயல்புகளும் ஆய்க்குலத்துப் பெண்டிரின் சரணாகதியும் மிக
வாக்காகப் பொருந்தி வந்திருக்கும் பாடல்களில் திரட்சி அதிகம்தான். ஒரு வகையில் இறைஇயல்பு குறித்த
வைஷ்ணவக் கோட்பாடும் பாகவதர் இலக்கணமும் பக்தியின் முடிந்த குறிக்கோளும் இப்பாடல்களில் தொகுத்துச்
சொல்லப்பட்டு இருப்பதாகக் கொள்ளலாம்.

இவற்றுள் முன்சொன்ன இரண்டையும் கொண்டாடுவது இருபத்து ஒன்றாம் பாடல். நந்தகோபன் அரண்மனையின் வளத்தை
மிகச் சிறப்பாகச் சொல்கின்றன முதலிரண்டு அடிகள். ஏற்கெனவே பாத்திரங்கள் நிரம்பிவிட்டன. என்றாலும்
பசுக்களின் மடியில் இன்னமும் பால் இருக்கிறதாம். எனவே ஏற்கெனவே பால் நிறைந்து விட்ட பாத்திரங்களில்
மேல் நுரையைத் தள்ளிவிட்டு இடம் உண்டாக்கி இன்னமும் கொஞ்சம் பாலைக் கறந்து விடுகிறார்களாம். பாடலின்
முதல் அடியிலேயே வளத்தின் நிறைவைக் காண்கிறோம்.

ஏற்கெனவே பதினேழாம் பாடலிலும் பதினெட்டாம் பாடலிலும் இறைவனை நந்தகோபன் மகனாகக்
கண்டோம். கண்ணனை நந்தகோபன் மகனாகக் காண்பதில் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. ஆயர்
குலத்தில் இறங்கி வந்து வளர்ந்தது இறைவனின் சித்தம். அதுவும் ஆய்க்குலத்துப் பெண்டிரை ஈடேற்ற வேண்டும் என்ற
நோக்கத்தோடேயே வந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் அந்த அடியார்கள் தன்னைத் தேடி வந்தபின்னும் உறங்கிக்
கொண்டிருக்கலாமா? எனவே அவதாரத்தின் பயனே தம்மை ஈடேற்றுவது என்பதை வலியுறுத்தவே கண்ணனைத் திரும்பத்
திரும்ப நந்தகோபன் மகன் என்று கூறுகிறார்கள்.

பசுக்களை குருவாகக் காணலாம். ஞானத்தின் வழியில் சீடர்களைத் திருப்புகிறவர்கள். அவர்களுடைய உபதேசமே
பால். மடியில் கைவைத்தவுடன் பால் சொரிய ஆரம்பிக்கும் பசுக்கள் பாத்திரம் நிறைந்த பின்னும் விடாது
பால் சொரிந்து கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட எல்லையில்லாத உபதேசமே இந்தப் பாடலில்
சிறப்பித்துப் பேசப்படுகிறது. விஷ்ணு புராணத்திலிருந்து ஓர் உதாரணம் காணலாம். மைத்ரேயர் பராசரரிடம்
சீடராகப் போய்ச் சேர்ந்தார். மைத்ரேயர் தேடிப் போனதை விட அதிகம் பராசரர் அவருக்கு உபதேசம்
செய்தார். அத்தகைய அளவற்ற பால் பெருக்கே பசுக்களை வள்ளல் பெரும் பசுக்களாக்கிவிட்டது.

அறிவுறாய் என்ற சொல்லுக்கும் சம்பிரதாயமான விளக்கத்தில் கூடுதல் பொருள் சொல்வார்கள். துயிலெழுதல்
என்ற பொருளில் அன்றி நந்தகோபனின் மகனாக ஆயர்களைக் காத்தலே கண்ணனுடைய உடனடிப் பணி என்று
உரிமையாகச் சொல்லித் தம்மிடம் வந்து சேருமாறு அழைக்கிறார்கள் என்பார்கள். வாக்குத் தத்தம்
பெற்றவர்களல்லவா?

ஊக்கமுடையாய் என்ற சொல்லுக்கும் பல பொருள் காண்பர். வேதத்துக்கு உட்பொருள் இறைவன். இறைவன் இல்லாமல்
வேதம் பொருளுடையதாகவே ஆவதில்லை. இரண்டாவதாக இருபதாம் பாடலில் சொல்லி வியந்தபடி அமரர்
துயரத்தையும் தீர்க்கும் வல்லமை உடையவன் இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

வைணவ இறையியலில் செளலப்யம் இறைவனுடைய குணம். எனவே ஊக்கமுடையாய் எனும்போது இறைவனின் எளிவரல்
சிறப்பிக்கப் படுகிறது என்றும் கொள்வர். இறைவனின் அவதாரங்களின் மேன்மையே செளலப்யம் எனும்
எளிவரல் எனும் இயல்பு பாற்பட்டது எனில் மிகையாகாது. கீதையில் கூடக் கண்ணன் யுக யுகம்
தோறும் தாம் தோன்றி வருவதாகக் கூறுவதும் இந்தப் பண்பின் பாற்பட்டதே.

பெரியாய் எனும் வார்த்தைக்குப் பொருள் காணும் போது வேதங்களாலும் உரைக்க முடியாத பெருமையும் அருமையும்
கொண்டவன் என்று கொள்வர். இருக்கும் வேதங்களும் இனி இருக்க வரும் வேதங்களும் சொல்லி மாளாத பெருமையும்
அருமையும் அவனுடையது. வேதங்கள் உரைத்த அருமை பெருமையெல்லாம் தாண்டியதே அவன் அருமையும் பெருமையும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் முதல் பாடலில் முதல் அடியைப் பாருங்கள். உயர்வற உயர்நலம் உடையவன்
என்பார். மற்றைய உயர்வுகள் எல்லாம் உயர்வற்றுப் போகுமளவுக்கான உயர்வை உடையவன் என்று பொருள் சொல்ல
வேண்டும். அத்தகைய உயர்வை உடையவன் தன் அடியார்களுக்கென்று தன் அருள் பொலியக் கண்ணனாக வந்து
சேர்ந்திருக்கிறான் என்பது மீண்டும் அவன் எளிவரலைச் சிறப்பிப்பதாக அமைகிறது. ஆயினும் அவனுடைய
பெருமையை எவரும் தவிர்த்துவிட முடியாது என்பதற்காகவே தோற்றமாய் நின்ற சுடரே என்று
சொல்லியிருக்கிறார். இவ்விதம் இறைவன் அருகனாகவும் அருமையானவனாகவும் இருப்பதைச் சொல்வதே
வைஷ்ணவ இறை இயலின் சிறப்பு எனக் கொள்ள வேண்டும்.

கிருத்துவத்தில் இதற்கு இணையான கொள்கை ஒன்றைக் காணலாம். ஹாப்கின்ஸ் என்ற யேசு சபைப் பாதிரியாரும்
புலவரும் கடவுளின் பிரமாதம் என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மின்கலத்தில் மின்சாரம் பரவிக்
கரந்திருப்பது போல இறைவன் இவ்வுலகின் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பார். The world is charged
with the grandeur of God. அப்படியே இருந்தாலும் ஜிகினாக் காகிதத்தைக் கசக்கி
விளக்கொளியில் காட்டும் போது கண்ணை மூடிக் கொண்டாலும் பிரதிபலிக்கும் ஒளியைக் கண் தவிர்க்க
முடியாது போவது போல இறை இருப்பைத் தவிர்க்க முடியாது என்பார். It shines forth like
shining from shook foil. அப்படியே இறை இருப்பை உணரமுடியாத மூடருக்கும் தன்னை
வெளிக்காட்டுகிறவன் கடவுள் என்பது பொருள்.
பாடலின் கடைசி மூன்று அடிகளும் மிகச் சிறப்பானவை. தோற்றுப் போனவர் தன் ஆணவத்தையும் அகந்தையையும்
துறந்துவிட்டு வென்றவர் வாயிற்படியில் காத்துக் கிடப்பதைப் போல நாங்கள் உன்னிடம் வந்து
சேர்ந்திருக்கிறோம் என்கிறார்கள். எதிர்த்தவர் சரணடையும் போது இயல்பாகத் தன் அருளை அவருக்குத்
தருபவன் இறைவன். காகத்தின் கண் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்ற இராம பாணத்தை நினைவுக்குக் கொண்டு
வாருங்கள். இன்று போய் நாளை வா என்று இராவணனை அனுப்பி வைத்த சீர்மையை எண்ணிப் பாருங்கள்.

இவர்கள் தோற்று வந்தவர்கள் அல்லர். போற்றிப் பாடி வந்தவர்கள். தம்மைத் தத்தம் கொடுத்துவிட்டவர்கள்.
நம்மாழ்வார் சொல்வதைப் பாருங்கள். நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து - தான் தன்னுடையது என்ற
எண்ணத்தை வேரோடு கெல்லிக் களைந்தவர்கள் இவர்கள். மேலும் பற்றிலையாய் அவர் முற்றில் அடங்கியவர்கள்.
எனவே இறைவன் வல்லவன் என்பதால் அன்றி இறைவனின் அருளைத் தெரிந்து கொண்டவர்களாக அவனிடம்
சரணடைகிறவர்களாக ஆய்ப்பாடிச் சிறுமியர் தம்மை இனம் காட்டிக் கொள்கிறார்கள்.

இருபதாம் பாடலில் உக்கமும் தட்டொளியும் கேட்டதைக் கவனத்துக்குக் கொண்டு வந்தால் இந்தப் பாடல் இன்னமும்
தெளிவடைகிறது. உக்கம் என்ற சாமரம் பற்று எல்லாவற்றையும் விரட்டி அடிப்பது. கண்ணாடியே ஞானம்.
எனவே இருபதாம் பாடலின் கோரிக்கையை பற்றுக்களை விரட்டி அடிப்பதற்கும் ஞானத்தைக் கண்டு கொள்வதற்கும்
அருளுமாறு கேட்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்று விடற்கு
என்பதையும் பாருங்கள். அற்றது பற்றெனில் உற்றது வீடு என்பதையும் பாருங்கள்.

இவ்வாறாக திருப்பாவையின் இருபத்தொன்றாம் பாடல் வைஷ்ணவ மெய்ப் பொருளியலில் தோய்ந்து வந்த ஒரு முத்து
எனச் சொல்ல வேண்டும்.


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com