From ramaninaidu@... Fri Jan 04 09:06:24 2002
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 17:06:24 -0000
Received: (qmail 11089 invoked from network); 4 Jan 2002 17:06:23 -0000
Received: from unknown (216.115.97.171) by m9.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 17:06:23 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 17:06:24 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.61) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 4 Jan 2002 17:06:19 -0000
Message-ID: <003401c19542$42a56400$3deac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruvempavai -summation tamil
Date: Fri, 4 Jan 2002 22:24:42 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14513
திருவெம்பாவை - நிறைவுரை
மார்கழி நீராட்டத்தின் சிறப்பைத்தெரிந்து கொண்ட கன்னிப் பெண்கள் குறித்த திருவாதிரை நாளில்
நீராட வேண்டுமெனத் தம்முள் கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள். திருவாதிரை நாள் அதிகாலையில் முன்னம்
துயிலுணர்ந்தவர்கள் ஒரு தோழியைத் துயிலுணர்த்த வேண்டிப் பள்ளியறை வாசற்படிக்கருகே நின்று தலைவனான
சிவபெருமானின் புகழை எடுத்தோதுகிறார்கள். இப்படித் துயிலுணர்த்தியும் உணராதவளை இகழ்ந்து பேசுவது
போல இத்தோழி மீது தமக்குள்ள அன்பை வெளியிடுகிறார்கள். இது திருவெம்பாவையின் முதல்பாட்டு. எழுப்பப்
பெற்றவள் கூட்டத்தில் கலந்து கொள்கிறாள் என்பது குறிப்பு.
இரண்டாம் பாசுரத்திலே பெண்களின் கூட்டம் ஒருத்தியைப் பரிகசித்துத் துயிலெழுப்பக் காண்கிறோம். அவளும்
பரிகாச எதிர் அம்பு தொடுக்க இன்னொருத்தி குறுக்கிட்டுக் காலதாமதம் ஏற்படாதபடி வெளியே இருந்து
பரிகசித்தவர்களை இடித்து அறிவுறுத்துகிறாள். உள்ளே இருந்தவள் உடனே மன அமைதி பெற்று வந்து கூட்டத்தில்
கலந்து கொள்கிறாள்.
முத்தன்ன வெண்ணகையாள் தித்திக்கப் பேசுவாள் ஒருத்தியைத் துயலுணர்த்தும் தோழியர்களின் அழகிய பக்தி
நிறைந்த சித்தத்திலே நகைச்சுவையும் ததும்பக் காண்கிறோம். இது மூன்றாம் பாடல்.
வெளியே இருக்கும் வண்ணக் கிளிமொழியாளருக்கும் உள்ளே இருக்கும் ஒளிமுத்துப் புன்னகையாளுக்கும் இடையே
பரிகாசமாகத் தொடங்கிப் பரிகாசமாக முற்றுப் பெறும் பேச்சுக்கிடையே பக்திச் சுவை நடுநாயகமாக
விளங்கக் காண்கிறோம். இவர்களுக்குச் சிவபெருமான் விண்ணுக்கு ஒரு மருந்து. வேத விழுப்பொருள்.
கண்ணுக்கு இனியான்.
ஐந்தாம் பாடலில் உள்ளே இருக்கும் தோழியைப் பாலூறு தேன்வாய்க் கன்னி என்று வெளியே கூட்டத்திலிருந்து
ஒருத்தி கொஞ்சி அழைக்க திருவாதிரை நாளுக்கு முன் மார்கழி நீராட்டத்தின் சிறப்பைத் தெரிந்து கொண்டு
அது தவறு என்று கருதிய மற்றறொருத்தி தடுத்துப் பேசுவதைக் கேட்கிறோம். இப்பாசுரத்தில் சிவபெருமானது
கோலமும், பெருமையும் சீலமும் சிறப்பிக்கக் காண்கிறோம்.
இந்த ஐந்து பாடல்களிலும் கதவைத் திறந்துகொண்டு வந்து கூட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்களைப்
பார்க்கிறோம். இந்தப் பெண்கள் எல்லோரும் கூடி வீதியில் செல்லும் போது கலகலவென்று தம்முள் கலந்து
உரையாடுவதை ஆறு, ஏழு, எட்டு ஆகிய பாடல்களில் கேட்கிறோம்.
ஆறாவது பாடலிலே நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன் என்று உறுதி கூறிச் சென்றவள் அந்த வாக்கை
மறந்து உறங்கிப் போய்க் கூட்டத்தினரால் எழுப்பப் பெற்று வந்திருக்கும் ஒருத்தியைப் பரிகாசம் செய்யக்
கேட்கிறோம்.
ஏழாம் பாடலிலும் இத்தகைய ஒருத்தியைத் தோழியர் பரிகசிக்கக் காண்கிறோம். உறக்கம் நன்னெஞ்சத்
தொண்டரையும் வன்னெஞ்சப் பேதையர் போல ஆக்கிவிடுகிறது என்ற கருத்தையும் காண்கிறோம்.
எட்டாம் பாடலின் முற்பகுதியில் ஆனந்தமான காலைப்பொழுது ஆனந்தமாக வர்ணிக்கப் பெறுவதைக்
காண்கிறோம். இத்தகைய காலைப் பொழுதை உறக்கத்தில் கழித்துவிடலாமோ? என்று தோழிமார்
கேட்கிறார்கள். உறக்க மயக்கம் முற்றும் கலையாது தம்முடன் வந்து கொண்டிருக்கும் ஒருத்தியை நோக்கி.
ஒன்பதாம் பாடலில் மார்கழி நோன்பின் இரட்டைப்பெரு நோக்கத்தில் அதிமுக்கியமான நோக்கம்
சொல்லப்படுகிறது. தலைவனாகிய சிவபெருமானை நினைத்துக் கொண்டு உன்னைப் பிரானாகப் பெற்ற நாங்கள்
உன் அடியாரையே கணவராகப் பெற்று உய்யுமாறு அருள்வாய் என்கிறார்கள். இதைப் பிரார்த்தனை என்று சொல்வதை
விடச் சங்கல்பம் என்று சொல்ல வேண்டும்.
இந்தச் சங்கற்பச் செய்யுளுக்குப் பின் கோயிற் பிணாப் பிள்ளைகளைப் பற்றிய பேச்சு வருகிறது.
சிவாலயத்தில் பணி புரியும் உரிமை பூண்ட கூட்டடததினர் இப்பெண்கள். இந்தக் கூட்டத்தினரிடம் கன்னிப்
பெண்களின் கூட்டம் இறைவனைப் பாடும் இயல்பு முதலான சில விஷயங்களைக் குறித்து வினாவக் காண்கிறோம்.
அந்தப் பெண்கள் இந்தப் பெண்களுக்குத் தக்க விடை தந்திருக்க வேண்டும்.
அடுத்த பாடலில் இறைவனை நோக்கி உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் இன்றும் அப்படியே எங்களைக்
காப்பாய். இதை எங்கள் நீராடலின் பயனாக அருள்வாய் என்று பெண்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.
பன்னிரண்டாம் பாடலில் பெண்களின் கூட்டம் இறைவனைப் புகழ்ந்து பேசிப் பொற்பாதம் ஏத்திச் சுனை
நீராடுவோமாக என்று பேசிக்கொள்வதைக் காண்கிறோம்.
அடுத்த பாடலில் இறைவனுக்கும் இறைவிக்கும் பொய்கைக்கும் சிலேடைகள் அமையக் காண்கிறோம். அம்மையப்பரின்
அருட்கடலில் தோய்வதற்கு அறிகுறியாகச் சுனை நீராட்டம் இங்கே பேசப்படுகிறது.
பதினான்காம் பாடலில் நீராடும் பெண்களின் குதூகலம் செய்யுளின் ஓசைப் பொலிவிலேயே சித்தரிக்கப்
பெறுகிறது.
பதினைந்தாம் பாடலில் இறைவன் காதற்பித்து உடையவராக்கி ஆட்கொள்கிறான் என்ற உண்மை வெளியிடப்
பெறுகிறது. இத்தகைய இறைவனை வாயாரப் பாடிப் பூம்புனல் பாய்ந்து ஆடும் ஆனந்தம் இப்பாட்டிலும் அலையெறியக்
காண்கிறோம்.
அடுத்த பாடல் மழைப்பாட்டு. அடியவரைக் கணவராகப் பெற்று இல்லறத்தை நல்லறமாக நடத்தவதற்கு நாடு
செழித்திருக்க வேண்டும். அந்தச் செழிப்புக்கு பருவ மழை தேவை. உலக அன்னையாகிய உமாதேவியின் இன்னருள்
போல மழை இறங்கி வரவேண்டும் என்பது வேண்டுகோள்.
பதினேழாம் பாடலில் இல்லங்கள் தோறும் எழுந்தருளி இன்பமளிக்கும் சேவகனைப் பாடி மார்கழி நீராடுவது
பற்றிப் பேசுகிறார்கள்.
பதினெட்டாம் பாடலில் இறைவன் கழல் பாடி நீராடுவதைப் பற்றிப் பேசுமுன் அண்ணாமலையான் அடிக் கமலம்
பற்றிப் பேசுவதைக் கேட்கிறோம். திருவண்ணாமலையில் திருவெம்பாவை பாடப்பட்டிருக்க வேண்டும்
என்பதற்கு இப்பாட்டையும் ஓர் அகச்சான்றாகக் காட்டலாம்.
அடுத்த பாடல் உன்கையில் உனக்கே பிள்ளை அடைக்கலம் என்ற பழமொழியுடன் தொடங்குகிறது. இதில்
திருவெம்பாவையின் தனிப் பெருங்கொள்கையான பக்தி வைராக்கியம் வெளிப்படுகிறது.
கடைசிப் பாடலில் பெண்கள் இறைவன் திருவடிகளையும் மார்கழி நீரையும் போற்றிப் பாடி ஆடி வருவோம்
என்கிறார்கள். இறைவனது இணையடிகள் பொற்பாதம் என்றும் பாதமலர் என்றும் பூங்கழல்கள் என்றும் பொன்மலர்கள்
என்றும் செந்தளிர்கள் என்றும் கொஞ்சும் தமிழில் குறிக்கப் பெற்றுள்ளன.
இப்பொன் மலர்களுக்குத் திருவெம்பாவை முழுவதும் ஒரு மாணிக்கச் சுடர் மாலையாக அமைவதாய்க் கருதலாம்.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com