From ramaninaidu@... Fri Jan 04 09:07:27 2002
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 17:07:18 -0000
Received: (qmail 60237 invoked from network); 4 Jan 2002 17:07:18 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 17:07:18 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 17:07:18 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.61) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 4 Jan 2002 17:07:15 -0000
Message-ID: <003601c19542$642aef00$3deac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruppalliyelucci - introduction tamil
Date: Fri, 4 Jan 2002 22:26:06 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14516

திருப்பள்ளியெழுச்சி - முன்னுரை

ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவைக்கும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
அப்படியே சில வேற்றுமைகளும் உள்ளன.

கன்னியர் ஒருவரை ஒருவர் எழுப்பிப் பொய்கை நோக்கிப் போதல், மார்கழி நீராடுதல் வரை இரண்டு பாவை
நூல்களும் ஒற்றுமை கொண்டுள்ளன. துயிலெழுந்த கன்னியர் இறைவனையும் எழுப்புவதற்குக் கோயில் சென்றடைந்து
திருப்பள்ளியெழுச்சி பாடுவதை நாச்சியார் திருப்பாவையில் காண்கிறோம். திருவெம்பாவையோ ஒருவரை
ஒருவர் துயிலெழுப்பி பொய்கையில் நீராடுவதோடு நின்றுவிடுகிறது. திருப்பள்ளியெழுச்சி தனியாகப்
பாடப்படுகிறது.

திருப்பாவையில் கொள்வதைப் போல மார்கழி நோன்புக் கன்னியரே திருப்பள்ளியெழுச்சி பாடுவதாகக்
கொள்ள முடியவில்லை. பால் வேறுபாடும் பருவ வேறுபாடும் இடம் பெறாதிருப்பதால் அடியார்கள் எல்லோருமே
கலந்து கொண்டு பாடுவதாகத் திருப்பள்ளியெழுச்சியைக் கொள்ள வேண்டும்.

திருப்பள்ளியெழுச்சியை எப்படிப் புரிந்து கொள்வது? ஆண்டவனை எழுப்புவதாகவா? துயிலும் இருளும் இல்லாத
ஆண்டவனை எப்படி எழுப்புவது? நமக்குள் துயிலும் பேராற்றலை எழுப்பிக் கொள்வதற்குத் திருப்பள்ளியெழுச்சியை
ஒரு குறியீடாகக் கொண்டு பாருங்களேன்.

நீறணிந்தார் அகத்திருளும் நிறைகங்குற் புறத்திருளும்
மாற வரும் திருப்பள்ளியெழுச்சி

என்பார் சேக்கிழார்.

இறைவனுக்கேது இருளும் துயிலும்? நம் இருளையும் துயிலையும் இல்லையாக்கும் முயற்சியே திருப்பள்ளியெழுச்சி.
நமக்குள்ளே பரமன் உணர்வு விழிப்புறப் பாடுவதே திருப்பள்ளியெழுச்சி.


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com