From ramaninaidu@... Fri Jan 04 09:07:48 2002
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 4 Jan 2002 17:07:46 -0000
Received: (qmail 838 invoked from network); 4 Jan 2002 17:07:46 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 4 Jan 2002 17:07:46 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 4 Jan 2002 17:07:47 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.61) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 4 Jan 2002 17:07:45 -0000
Message-ID: <003801c19542$759eb500$3deac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruppalliyelucci 1 tamil
Date: Fri, 4 Jan 2002 22:27:05 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14518
திருப்பள்ளியெழுச்சி - நாள் இருபத்தொன்று - பாடல் ஒன்று
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும்
எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல் சூழ்
திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே
ஏற்றுஉயர் கொடியுடையாய் எமை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
வாழ்வுக்கு முதலாக இருக்கும் இறைவனைப் போற்றித் திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்கள். திருவடிகளில்
மலர்கள் தூவி அவன் அருள் மலர்ச்சியை மனதில் கொண்டு அவனைத் தொழுகிறார்கள். சேறு துமுறும் வயல்களில்
செந்தாமரைகள் மலரும் சிறப்புடைய திருப்பெருந்துறை சிவபிரானைத் துயிலெழுப்புகிறார்கள்.
என் வாழ்முதல் எனும் முதலடித் தொடரும் எமை உடையாய் என்ற ஏழாம் அடித் தொடரும் ஒன்றை
ஒன்று இட்டுநிரப்பக் காண்கிறோம். சிவனடியார்கள் வாழ்வுக்கு முதல் காரணமாகவும் அவர்கள் வாழ்வின்
உள்ளடக்கமாகவும் இருக்கும் சிவனே அவர்களையும் அவர்களுடையதையும் தன்னுடையதாக்கிக் கொண்டவர்.
இந்தப் பாடலுக்கு விளக்கம் எழுதிய முனைவர் ம.ரா.போ.குருசாமி அவர்கள், சமய ஒருமைப்பாட்டினை
நோக்கமாகக் கொண்டு தொடங்கப் பெற்ற பாவை விழாவிலே இப்போதெல்லாம் இரண்டு பாவைகளையும்
ஓரிடத்திலே காண முடிவதில்லை. வைணவம் திருப்பாவையை முன் எப்போதும் போல் போற்றுகிறது. சைவம்
திருவெம்பாவையை நினைவூட்டிக் கொள்கிறது. ஒரே அரங்கிலே இரண்டு பாவையையும் காண்பது மிக
அருகியிருக்கிறது. என்று ஆதங்கப்பட்டுக் கொள்கிறார்.
தமிழ் இணையத்திலும் மெய்கண்டாரிலும் அகத்தியரிலும் பிற இணையச் சமுதாயங்களிலும் திருப்பாவையும்
திருவெம்பாவையும் ஒருங்கே அரங்கேறுவது பெரியதல்ல. அதை வரவேற்கும் உள்ளமே பெரியது. இது அவர்
போன்றோருக்கு நிறைவைத் தர வேண்டும்.
தகவல் புரட்சி பற்றிச் சொல்லும் போது emergence காலம் போய் convergence காலம் வந்துவிட்டது
என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதையும் தாண்டி integrating காலம் வந்துவிட்டது என்றுதான்
ரமணி நம்புகிறான்.
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com