From eramurug@... Fri Jan 04 18:55:35 2002
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 02:55:35 -0000
Received: (qmail 70866 invoked from network); 5 Jan 2002 02:55:35 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 02:55:35 -0000
Received: from unknown (HELO web14805.mail.yahoo.com) (216.136.224.221) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 02:55:35 -0000
Message-ID: <20020105025534.86510.qmail@...>
Received: from [210.214.130.78] by web14805.mail.yahoo.com via HTTP; Fri, 04 Jan 2002 18:55:34 PST
Date: Fri, 4 Jan 2002 18:55:34 -0800 (PST)
Subject: A beautiful morning with Mohd.Rafi, Naushad, Shakeel, Malkauns and pahadi
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14532
சில காலைப் பொழுதுகள் இனிமையாகப் புலர்கின்றன - இன்று போல்..
தமிழ் சுப்ரபாதத்துக்காக டி.வியைப் போட (பிரமாதமாக இருக்கிறது -
யார் மொழிபெயர்ப்பு, யார் பாடியது என்று தெரியவில்லை!), ஸ்டார்
சேனலில் ஒரு பழைய இந்திப் பாட்டு -
'மேரே மெஹபூப்' படத்தில் நௌஷத் இசையில் முஹம்மத் ரஃபி பாடிய "மேரே
மெஹபூப் முஜே மேரி மொஹப்பத் கி கஸம்"
முஹம்மத் ரஃபி மறைந்து இருபது வருடமாவது ஆகி இருக்கும். அந்தக் குரல் இன்னும்
மனதின் உள்ளறைகளைத் தட்டித் திறந்து உள்ளே உள்ளே போய் எதையோ
தேடுகிறது.. இனிமையான சோகம், கசப்பான மகிழ்ச்சி, வாஞ்சை,
கம்பீரம், கண்களின் ஓரத்தில் துளிர்க்கும் ஒரு துளி கண்ணீரின் உப்புச்
சுவடு.. ரஃபியின் குரலில் எல்லாம் உண்டு.
நௌஷத்தின் இசையமைப்பில் ரஃபியின் கலை நேர்த்தி இன்னும் துல்லியமாகத்
துலங்குகிறது.
'பெய்ஜூ பவ்ரா'வில் தொடங்கிய உறவில்லையா அது?
(பெய்ஜு பவ்ரா படத்தில் இடம் பெற்ற மனதை உருக்கும் கானம் - "மனு தர்பத்
ஹரி தர்ஷன்" - ராகம் மால்கௌன்ஸ் - ஹிந்தோளம் - . எந்த இந்துவும்
இந்தப் பாடலைக் கேட்டால் கண்ணீர் மல்கக் கை கூப்பித் தொழுவான். பாடலை
எழுதிய கவிஞர் - ஷக்கீல் பதாய்னி; இசையமைத்த இசை மேதை - நௌஷாத்
அலி; பாடிய கந்தர்வக் குரல் - முஹம்மத் ரஃபி. மூன்று பேருமே
இஸ்லாமியர்கள். இது தான் இந்தியா.. இனம், மொழி வேற்றுமைகளைக்
கடந்து வாழும், வளரும் பாரத சமுதாயம் இது.)