From harikris@... Fri Jan 04 21:32:21 2002
Return-Path: X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 05:32:21 -0000
Received: (qmail 81800 invoked from network); 5 Jan 2002 05:32:21 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 05:32:21 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 05:32:19 -0000
Received: (qmail 2715 invoked from network); 5 Jan 2002 10:50:58 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.131.203) by 0 with SMTP; 5 Jan 2002 10:50:58 +0530
Message-ID: <001301c195aa$b094b840$cb83d6d2@...>
To: Subject: Fw: AruNagiriNadhar's Time
Date: Sat, 5 Jan 2002 08:50:59 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14536
இந்தக் கடிதம் வந்ததா? என்னை இது மட்டும் வந்தடையவில்லையே! நிழல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் போது 'மந்தையிலிருந்து வேறு வேறு திசையில்' சென்று விட்டதோ? இடையனுக்கு கையிலிருக்கும் ஆட்டுக் கூட்டத்தைப் பார்க்கிலும் தொலைந்து போன ஆட்டுக்குட்டி மேல்தானே சிரத்தை அதிகம்? மறுபடி அனுப்பி வைக்கிறேன். இதற்கு முன்னால் மற்றவர்களுக்குக் கிடைத்திருந்தால், மன்னித்துக் கொள்ளவும்.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: Hari Krishnan
To: agathiyar@yahoogroups.com
Sent: Friday, January 04, 2002 7:25 PM
Subject: Re: AruNagiriNadhar's Time
தலைவரே,
சவாசு. அத்தோடு சலாமு. ஆமாம். அருணகிரிநாதர் சவாசு மட்டுமில்லை சலாமும்போட்டிருக்கிறார். மயில் விருத்தம் பத்தாவது பாட்டு -
புலோமசை - இந்திராணி வலாரி - இந்திரன். இந்திராணி சலாம் வைக்கும் மற்றும் இந்திரனுக்குப் புகலாகும் அயில் ஆயுதம் உடையவன். இந்தப் 'பலாசன' என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். (யாரிடமாவது உரையிருக்கிறதா?)
இன்னொரு இடத்தில் - மிக அதிகமாகப் பாடப்படும் பாடல்களில் ஒன்று - சலாம் வருகிறது. யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். கந்தரலங்காரமா? பார்க்க வேண்டும். இன்னும் சில பிற்காலச் சொற்கள்திருப்புகழில் தென்படுவதுண்டு. ஆனால் உங்களிடத்தில் போய் சொல்லிக்கொண்டிருப்பது அச்சத்தைத் தருகிறது! நாமென்ன உங்களை மாதிரி படிக்கவா செய்கிறோம்? ஏதோ மூலத்தைப் படித்து நமக்கெட்டின வரைக்கும் அறுத்துக் கொள்வதுதானே!
----- Original Message -----
From: jaybee
To: agathiyar@yahoogroups.com
Sent: Friday, January 04, 2002 4:17 PM
Subject: AruNagiriNadhar's Time - Re: [agathiyar] Some questions about Arunagirinathar
At 05:33 PM 1/4/02 +0800, you wrote:
அன்புள்ள கிருஷ்ணன்/எல்லே ராம்,
இன்னொன்று, அருணகிரிநாதர் பயன்படுத்திய சில சொற்கள்.
அவை 1440-இல் வழக்கில் இருந்ததில்லை.
உதாரணமாக, ஓரிடத்தில் 'சவாசு' என்ற சொல்லைப்
பயன்படுத்தியுள்ளார்.
அச்சொல் ஜஹாங்கீர் காலத்தில் பாரசீகத்தை ஆண்ட ஷா அப்பாஸ்
காலத்தில் ஏற்பட்டது.
என்னும்பொழுது அக்காலத்துகுப் பின்னர்தான் அந்தப் பாடல்
பாடப்பட்டிருக்கவேண்டும்.
இவை இரண்டையும் வைத்துப்பார்க்கும்போது அருணகிரிநாதரின்
காலம் 1440 என்று சொல்வதில் தயக்கம் ஏற்படுகிறது.
அன்புடன்
ஜெயபாரதி
[Non-text portions of this message have been removed]