From naga ganesan@... Sat Jan 05 06:31:49 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 14:31:49 -0000
Received: (qmail 99901 invoked from network); 5 Jan 2002 14:31:49 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 14:31:49 -0000
Received: from unknown (HELO n31.groups.yahoo.com) (216.115.96.81) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 14:31:49 -0000
Received: from [216.115.96.163] by n31.groups.yahoo.com with NNFMP; 05 Jan 2002 14:31:49 -0000
Date: Sat, 05 Jan 2002 14:31:45 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: AruNagiriNadhar's Time
Message-ID: In-Reply-To: <015a01c19528$6a19f100$4ef0c7cb@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3110
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.223.26.185
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14542
டாக்டர் அய்யா,
அருணகிரிநாதர் 15-ஆம் நூற். என்பதில் ஐயமில்லை.
அவர் சோமதேவன் மடம் என்பது பற்றித் திருப்புகழ் பாடியிருக்கிறார்.
சோமதேவனைச் சில இiடங்களில் சிலாகித்தும் பேசியிருக்கிறார்.
சோமதேவன் கல்வெட்டுகள் 15-ஆம் நூற்றாண்டில் கிடைத்துள்ளன.
அருணகிரிநாதர் கால நிர்ணயம் பற்றி நான் படித்த சில நல்ல
நூல்கள்: 1) மு. அருணாசலம் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாறு
(15ஆம் நூற்றாண்டு) 2) இரா. நாகசாமியின் அருணகிரியார்
பற்றிய கட்டுரை. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பொன்விழா மலர்
3) Fred Clothey (Univ. of Pittsburgh) பல ஆண்டுகள்
அருணகிரி மீது எழுதியவை.
சவாசு என்றுவரும் திருப்புகழ் யாது? படிக்க ஆவல். நன்றி.
ஏடுகளில் இன்னும் 100-200 திருப்புகழ் வெளிவராமல் இருக்கின்றன.
சைவ சித்தாந்த மகாசமாஜப் பதிப்பு (திருப்புகழ்) பார்த்திருக்கிறீர்களா?
விவரம் இiவற்றைப் பார்த்து எழுதுகிறேனே,
அன்புடன்,
நா. கணேசன்
--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> தலைவரே,
>
> சவாசு. அத்தோடு சலாமு. ஆமாம். அருணகிரிநாதர் சவாசு மட்டுமில்லை சலாமும்
போட்டிருக்கிறார். மயில் விருத்தம் பத்தாவது பாட்டு -
>
> புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
> லாகுமயி லாயுத நெடும்
>
> புலோமசை - இந்திராணி வலாரி - இந்திரன். இந்திராணி சலாம் வைக்கும் மற்றும் இந்தி
ரனுக்குப் புகலாகும் அயில் ஆயுதம் உடையவன். இந்தப் 'பலாசன' என்ன என்று யோசித்துக்
கொண்டிருக்கிறேன். (யாரிடமாவது உரையிருக்கிறதா?)
>
> இன்னொரு இடத்தில் - மிக அதிகமாகப் பாடப்படும் பாடல்களில் ஒன்று - சலாம் வருகிறது.
யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். கந்தரலங்காரமா? பார்க்க வேண்டும். இன்னும் சில பி
ற்காலச் சொற்கள் திருப்புகழில் தென்படுவதுண்டு. ஆனால் உங்களிடத்தில் போய் சொல்லி
க்கொண்டிருப்பது அச்சத்தைத் தருகிறது! நாமென்ன உங்களை மாதிரி படிக்கவா செய்கி
றோம்? ஏதோ மூலத்தைப் படித்து நமக்கெட்டின வரைக்கும் அறுத்துக் கொள்வதுதானே!
>
> சும்மாயிரு சொல்லற என்று கிடக்கலாம் என்றால், கிடக்க முடியவில்லையே! அதையும்
முருகன்தானே குத்திக் கிளப்புகிறான்! (ஐயோ தப்பு தப்பு எழுத்தாளரையா! முருகர்தானே
கிளப்புகிறார்!)
>
> அன்புள்ள,
> ஹரி கிருஷ்ணன்.
>
>
> ----- Original Message -----
> From: jaybee
> To: agathiyar@y...
> Sent: Friday, January 04, 2002 4:17 PM
> Subject: AruNagiriNadhar's Time - Re: [agathiyar] Some questions about
Arunagirinathar
>
>
> At 05:33 PM 1/4/02 +0800, you wrote:
>
> அன்புள்ள கிருஷ்ணன்/எல்லே ராம்,
>
> இன்னொன்று, அருணகிரிநாதர் பயன்படுத்திய சில சொற்கள்.
> அவை 1440-இல் வழக்கில் இருந்ததில்லை.
>
> உதாரணமாக, ஓரிடத்தில் 'சவாசு' என்ற சொல்லைப்
> பயன்படுத்தியுள்ளார்.
> அச்சொல் ஜஹாங்கீர் காலத்தில் பாரசீகத்தை ஆண்ட ஷா அப்பாஸ்
> காலத்தில் ஏற்பட்டது.
> என்னும்பொழுது அக்காலத்துகுப் பின்னர்தான் அந்தப் பாடல்
> பாடப்பட்டிருக்கவேண்டும்.
>
> இவை இரண்டையும் வைத்துப்பார்க்கும்போது அருணகிரிநாதரின்
> காலம் 1440 என்று சொல்வதில் தயக்கம் ஏற்படுகிறது.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>