From eramurug@... Sat Jan 05 07:34:03 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 15:34:03 -0000
Received: (qmail 26862 invoked from network); 5 Jan 2002 15:34:02 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 15:34:02 -0000
Received: from unknown (HELO web14804.mail.yahoo.com) (216.136.224.220) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 15:34:02 -0000
Message-ID: <20020105153401.88961.qmail@...>
Received: from [210.214.130.68] by web14804.mail.yahoo.com via HTTP; Sat, 05 Jan 2002 07:34:01 PST
Date: Sat, 5 Jan 2002 07:34:01 -0800 (PST)
Subject: Re: [agathiyar] kaNNaki - is she Maari?
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14548

அன்புள்ள திரு கணேசன்,

நீங்கள் ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி கதை பற்றிச்
சொல்கிறீர்களா? பரசுராமனின் அன்னை. அவனால் சிரம் அறுக்கப்பட்டுக்
கொல்லப்பட்டவள். அவளுக்கு அடைக்கலம் கொடுத்த செம்படவப் பெண்ணையும்
பரசுராமன் கொல்கிறான்.பிறகு அவர்களை உயிர் பிழைக்க வைக்கும் போது
தலைகளை மாற்றி வைத்து விடுகிறான் - இப்படிப் போகும் அழகான
நாட்டுப்புறவியல் கதையல்லவா அது?

சமூக அநீதியும் ஏற்றத் தாழ்வுகளும் மிகுந்திருந்த காலத்தில் நாட்டார்
வாய்மொழி இலக்கியம் தன் கோபக் குரலை இப்படித்தான் முகம் மாற்றிச்
சொல்ல வேண்டி இருந்தது.

இன்றைக்கு என்றால் "மனுசங்கடா" என்று இன்குலாப் போல் உரக்கக் குரல்
கொடுக்க முடியும்.

அன்புடன்,
இரா.முருகன்


--- naga_ganesan wrote:
>
> அன்பு நண்பர் நாக. இஇiளங்கோ அவர்களுக்கு,
>
> மாரி மிகப் பழைய தெய்வம். மகாராட்டிரம் முதலாக
> விளங்குகிறாள். அவள் கதை வடமொழி மகாபாரதம்
> முதற்கொண்டு வருகிறது.
>
> மாரி கதையும் கண்ணகி கதையும் வேறுவேறானவை.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>


__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/