From eramurug@... Sat Jan 05 08:03:47 2002
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 16:03:46 -0000
Received: (qmail 33581 invoked from network); 5 Jan 2002 16:03:46 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 16:03:46 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 16:03:46 -0000
Message-ID: <20020105160346.17049.qmail@...>
Received: from [210.214.130.68] by web14810.mail.yahoo.com via HTTP; Sat, 05 Jan 2002 08:03:46 PST
Date: Sat, 5 Jan 2002 08:03:46 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: AruNagiriNadhar's Time
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14550
முனைவர் கணேசன்,
ஒரு நாள் முன்னால் சொல்லியிருக்கக் கூடாதா? இன்று புத்தகக் கண்காட்சியில்
தேடியிருப்பேனே!
இப்போதுதான் கண்காட்சியிலிருந்து திரும்பினேன். முதல் நாளே நல்ல கூட்டம்.
விற்பனைக் கூடங்களும் இந்த ஆண்டு அதிகம். நுழைவுக் கட்டணம் இல்லை.
பம்மல் சம்பந்த முதலியாரின் 'நாடக மேடை நினைவுகள்', பொன்னீலனின்
அன்னை அழகியநாயகி அம்மாளின் 'கவலை', மறைந்த நண்பர் தஞ்சை
பிரகாஷின் 'கள்ளம்', 'கரமண்டார் வூடு', மீ.மனோகரனின் 'மருது
பாண்டியர் வரலாறு' (இரண்டாம் தடவையாக) இன்னும் சாஹித்ய அகாதமி
ஸ்டாலில் சில மலையாளப் புத்தகங்கள் (முக்கியமாக சூரநாடு குஞ்சன்
பிள்ளையின் 'மலையாள காவிய ரத்னாகரம்' என்ற இரண்டு நூற்றாண்டுக்
கவிதைகளின் தொகுப்பு) இப்படி வாங்கினேன்.
சிலிக்குயில் மு.பொதியவெற்பன், வயல் மோகன் போன்ற சிற்றிதழ்
இலக்கிய நண்பர்கள், மா.ஆண்டோ பீட்டர் போன்ற கணினித்தமிழ் அன்பர்கள்,
வாசக அன்பர்கள் என்று பலரையும் ஒரு சேரப் பார்க்க, பேச முடிந்தது...
இன்னும் வாங்க, படிக்க, பார்க்க, பேச, கேட்க நிறைய்ய்ய்ய்ய்ய
இருக்கிறது...
அன்புடன்,
இரா.முருகன்
--- naga_ganesan wrote:
> --- In agathiyar@y..., "era.murugan achwin"
> wrote:
> > 'மயில் ஏறும் ராவுத்தனே' கூட அருணகிரி சொன்னது தானே?
> >
> > அருணகிரி பெண்ணாசையைத் துறந்து துறவியானார் என்று கேள்வி. ஆனால்
> ஏன்
> > சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொரு பாட்டிலும் முதல் ஏழெட்டு வரி அங்க
> > வர்ணனை, காதல் விளையாட்டு வர்ணனை என்று போய்க் கடைசியில்
> > இ'இஇப்படிப்பட்ட பெண்ணாசையிலே விழுவேனா?" என்று முடிக்க வேண்டும்?
> - ஒரு
> > பாட்டு ரெண்டு பாட்டுன்னா சரிதான்..is there an undercurrent
> of
> > subconscious indulgence .. suprressed emotions
> coming
> > to the fore...
>
> இஇiதற்கான விடையைத் திரு. வி. க. வின்
> "முருகன் அல்லது அழகு" என்னும் புத்தகத்தில்
> படிக்கலாம். கி. வா. ஜ. அவர்களின் "பெரும்பெயர் முருகன்"
> - இiந்த இiரண்டு நூல்களும் தமிழர் எல்லோரும் படிக்க
> வேண்டியன.
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/