From naga ganesan@... Sat Jan 05 08:31:05 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 16:31:05 -0000
Received: (qmail 60684 invoked from network); 5 Jan 2002 16:31:04 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 16:31:04 -0000
Received: from unknown (HELO n25.groups.yahoo.com) (216.115.96.75) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 16:31:04 -0000
Received: from [216.115.96.141] by n25.groups.yahoo.com with NNFMP; 05 Jan 2002 16:29:54 -0000
Date: Sat, 05 Jan 2002 16:31:04 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: More on A.K.Chettiyaar - Re: Ulagam suRRum thamilzhan - Re: The SKS Diaries - Re: More Looting - Re: [agathiyar] 60 yearsago.....A True story#5
Message-ID: In-Reply-To: <20020105154425.94384.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2915
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.25.29
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14551
அ. கருப்பன் செட்டியார் புத்தகம் ஒன்று என்னிடம் உண்டு ஹூஸ்டனில்.
மற்றவை ஊரில். அ. க. செட்டியார் காந்தியாரின் பழனி விஜயத்தை எடுத்தார்.
அதை முதலில் இணைத்து என் உறவினர் கோவை அய்யாமுத்து
சினிமாவாக வெளியிட்டாராம். இiன்பசாகரன் என்ற பெயர்?
பத்மா சுப்ரமணியத்தின் தந்தை K. சுப்பிரமண்யம் டைரக்டர்.
அ. க. செட்டியாரின் புத்தகம் "தமிழ்நாடு மாவட்டக் குறிப்புகள்"
இங்குள்ளது. அதில் நம் தமிழ்நாட்டுப் பல ஊர்களைப் பற்றியும்
ரசமான செய்திகள் உண்டு. சிலவற்றைத் தருகிறேன்.
-----------------------
உங்களிடம் ஒரு உதவி கேட்க வேண்டும்:
உங்களூர் சிவகங்கையில் முத்துக்குட்டிப் புலவர் என்று
இiருந்தார். முத்துக்குட்டி அய்யர் உங்களைப் போல.
வசன நடை கைவந்தவர். அவர் எழுதி அச்சான
புத்தகம் "வசன சம்பிரதாய கதை" புதுத் தமிழில்
வெளிவந்த முதல் உரைநடை நூல். இதுபற்றி விவரம்
இன்றைய இந்திய இலக்கியம் (சிவசங்கரி) தொகுப்பில்
அப்துல் ரகுமான் கூட ஒருவரி எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
அந்தப் புத்தகம் என்நண்பர் ஈரோட்டில் வைத்துள்ளார்.
முத்துக்குட்டிப் புலவரின் கவிதை நூல் கண்ணுடையம்மன்
பள்ளு. இதிவல்லோ கவிதை என்று கு. அழகிரிசாமி
பல கட்டுரை எழுதினார். தேவலோக கோர்ட் கேசு
என்று ஒரு சிறுநூல் எழுதியுள்ளார் (இது லண்டனிலும்,
என்னிடமும் உண்டு). முத்துக்குட்டியின் 3 நூல்களை
உங்களுக்கு என்னால் தரமுடியும். அதை நீங்கள்
அச்சுப்போட முடியுமா? தமிழின் ஒரு முக்கிய
படைப்பாளி, உங்களூராருக்கும் தமிழுக்கும்
செய்யும் பணியிது. உதவுங்கள்.
அ. க. செ. சொல்வதுபோல், கம்பனும் சொல்கிறானே!
கைலாயம் வெண்பனி போர்த்ததை. ஹரிக்கும்,
ஏனைக் கம்பன் அறிஞர்களுக்கும் தெரியும்
அந்த விருத்தம் என நினைக்கிறேன்.
--- In agathiyar@y..., "era.murugan achwin" wrote:
>
> ஜேய்பி-சான்,
>
> ஏ.கே.செட்டியாரின் உரைநடை ஏ.கே 47 தாங்கிப் பயமுறுத்தாமல்
> எளிமையாக இருக்கும். நான் கல்லூரியில் ஒரு கட்டுரை படித்திருக்கிறேன் -
> லண்டனில் பனி பெய்வதைப் பற்றிச் சொல்லும் போது "நடந்து போனவர்கள்
> எல்லாம் வீபுதி அபிஷேகம் ஆன சிவபெருமான் போல இருந்தார்கள்" என்று
> படித்தது இன்னும் நினைவு இருக்கிறது.
>
> குமரிமலர் தொகுப்பு உங்களிடம் இருக்கிறதா?
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
> --- jaybee wrote:
> > At 07:23 PM 1/5/02 +0800, JayBee wrote:
> >
> > >
> > > குமரி மலரைக் கடைகளில் வாங்கிவிடுவது சிரமம். கிடைக்காது.
> > >சந்தாதாரரின் எண்ணிக்கைக்குக்கூட வரம்பு இருந்தது. அதற்குமேல்
> > >அவர் சந்தாதாரரைச் சேர்க்கமாட்டார். ஒவ்வொரு மாதமும் ஒரு
> > குறிப்பிட்ட
> > >எண்ணிக்கையுள்ள இதழ்களே மட்டுமே வெளியிடப்படும்.
> >
> >
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Send FREE video emails in Yahoo! Mail!
> http://promo.yahoo.com/videomail/