From ramaninaidu@... Sat Jan 05 10:49:13 2002
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 18:49:11 -0000
Received: (qmail 84379 invoked from network); 5 Jan 2002 18:49:11 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 18:49:11 -0000
Received: from unknown (HELO smtp013.mail.yahoo.com) (216.136.173.57) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 18:49:13 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.27) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 5 Jan 2002 18:49:08 -0000
Message-ID: <001101c19619$c4376cc0$1beac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruppavai 22 tamil
Date: Sat, 5 Jan 2002 22:37:23 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14559

திருப்பாவை - நாள் இருபத்திரெண்டு - பாடல் இருபத்திரெண்டு

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழ்
சங்கமிருப்பார் போல வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

இருபத்திரண்டாம் பாடல் முந்தைய பாடலைப் போலவே இறைவனின் அருளை வேண்டுவதாக அமைந்திருக்கிறது.
முந்தைய பாடலில் மாற்றார் வலி தொலைந்து ஆற்றாது வந்து அடிபணிவதைப் பற்றிப் பேசக் கேட்டோம்.
ஆயினும் அவர்கள் வாசற்கடை பற்றித்தானே நிற்கிறார்கள்?
இருபத்திரெண்டாம் பாடலில் குறித்த அரசர் மாற்றார் அல்லர். அரசர்களே ஆயினும் வாழ்வியலின் ஏற்றத்
தாழ்வுகளுக்கு உட்பட்டவர்கள். தோல்வி, வறுமை, விரக்தி போன்ற உணர்வுகளுக்கு ஆற்பட்டவர். அரசர்களே
ஆயினும் வாழ்வியலின் கூறுகளான துன்பங்கள் தாக்கும் போது அவர்கள் ஆணவம் அழிகிறது. ஷேக்ஸ்பியரின் நாடக
வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது - துயரங்களின் பயன் இனியதுதான்.
அபிமானம் பங்கப்படும்போது இறைவனின் அரியாசனத்தைத் தங்களின் புகலிடமாகக்
கொள்கிறார்கள். இவ்வாறு இந்தப் பாடலின் அரசர்களைப் பார்க்கும் போது முந்தைய பாடல்களின்
மாற்றாரிடமிருந்து வேறானவர்களாகப் பார்க்க முடிகிறது. தான் தனது என்பவற்றின் சிறுமையை
உணரும்போது இறைவனிடம் வந்து சேர்கிறார்கள்.
அவர்களோடு ஒப்பிடும்போது இக்கன்னியரும் அவ்வாறே ஆனவர் என்பது சிறப்பாக வெளிப்படுகிறது. அவர்களும்
வாழ்வின் துயர வசப்பட்டவர்களே. அத்துயரங்கள் எல்லாம் நீங்கிப் போகும் என்பதனாலேயே எங்கள் மேல்
சாபம் இழிந்தேலோர் என்கிறார்கள்.

ஆயினும் அவர்களுடைய சாபம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டதாலோ அல்லது செய்யக் கூடாததைச்
செய்து விட்டதாலோ அவர்கள் மேல் பாய்ந்ததல்ல. உடலெடுத்து வந்ததே பாவத்தின் அடிப்பிறந்தது என்பதால்
அந்தப் பாவத்தைக் கழிக்க வேண்டும் என்கிறார்கள். கிருத்துவத்தில் ஆதிமனிதன் செய்த பாவத்தை மனிதனாகப்
பிறக்கும் ஒவ்வொருவரும் பங்கிட்டு ஏற்றுக் கொள்வதைப் போலத்தான். ஆயினும் கிருத்துவத்தில் செய்த ஒரு
காரியத்தின் அடிப்பிறந்தது அந்தப் பாவம். இங்கோ அது செய்த அல்லது செய்யாமல் விடுத்த எதையும் சாராத
அடிப்படைப் பாவமாகிறது.
நம்மாழ்வார் பிறந்தது முதல் பன்னிரெண்டு ஆண்டுகள் பாலுண்ணுதல், பேசுதல், அசைதல் என்ற எந்த இயக்கமும் இன்றி
ஒரு ஜடமாகக் கிடந்தாராம். அப்போது காசி யாத்திரையில் இருந்த மதுரகவியாழ்வார் தெற்கு நோக்கி
ஒரு நட்சத்திரம் நகர்வதைக் கண்டு யாத்திரையைப் பாதியில் நிறுத்திவிட்டு நட்சத்திரத்தைத் தொடர்ந்து
போனாராம். அவர் நம்மாழ்வார் இருந்த திருக்குருகூர் வந்து சேர்ந்த போது அந்த நட்சத்திரம் மறைந்துவிடவும்
அவ்வூரில் என்ன சிறப்பு என்று கேட்டாராம். சிறப்பு ஏதுமில்லை என்று சொல்லக் கேட்டு வழக்கத்துக்கு மாறாக
ஏதும் அந்த ஊரில் இருக்கிறதோ என்று கேட்டாராம். அப்போது நம்மாழ்வாரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர்
ஜடமாகக் கிடந்த பொலிந்து நின்ற பிரான் கோயில் திருப்புளி அருகே போய் நம்மாழ்வாரைப் பார்த்தார்.
ஒரு சிறு கல்லை எடுத்துத் தரையில் தட்டி ஓசை எழுப்பி செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்
தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்க அதுவரை ஜடமாகக் கிடந்த நம்மாழ்வார் வாய் திறந்து அத்தைத்
தின்று அங்கே கிடக்கும், என்று சொன்னார். அந்தப் பதில் தொடங்கி தமது பாடல்கள் அனைத்தையும் பாடினார்
என்பது ஐதிகம். செத்தது உடல். சிறியது உயிர். உயிர் உடல் எடுத்து வரும்போது எதை அனுபவித்துக் கொண்டு
எங்கே இருக்கும் என்பது கேள்வி. அவ்வுயிர் அதன் வினைப்பயன் தீரும் வரை அதை அனுபவித்துக் கொண்டு அந்த
உடலிலேயே இருக்கும் என்பது பதில்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இந்துதத்துவத்துக்கே சிறப்பான ஒரு செய்தி வெளிப்படுகிறது. எல்லா
மதங்களும் சீரிய வாழ்வு வாழ்ந்தால் இறைவனின் கருணைக்கும் கீழான வாழ்வு வாழ்ந்தால் சாபத்துக்கும் ஆளாக
நேரிடும் என்று சொல்கின்றன. எனவே ஒழுக்கம் என்பது சமய வாழ்வின் முக்கிய பகுதியாகிறது.

இந்து மெய்ப்பொருளியலில் ஈடேற்றம் என்பது சிறப்பான பொருளைப் பெறுகிறது. இறைவனோடு இடையீடற்ற
தொடர்பு கொள்ள வேண்டும் என்பதே வாழ்வின் பயனாகிறது. பாவங்கள் மட்டுமன்றி புண்ணியங்களும் தொடர்ந்து
வரும் பிறப்புக்குக் காரணமாகின்றது. எனவே உண்மையான துறவு என்பது புண்ணிய பாவம் ஆகிய இரண்டையும் துறந்து
விடுவதுதான். இறைவனிடம் சரணடையும் போது புண்ணியம் பாவம் ஆகிய இரண்டின் விளைவுகளும் தீர்ந்து
போய்விடுகிறது. அதனால்தான் நம்மாழ்வார்,
வீடுமுன் முற்றவும் வீடு செய்தும்முயிர்
வீடுடையானிடை வீடு செய்மினே
என்பார். எல்லாவற்றையும் முழுக்க விட்டுவிட்டு இறைவனிடம் சரணடைய வேண்டும் என்கிறார். எல்லாவற்றையும்
எனும்போது பாவம் புண்ணியம் ஆகிய இரண்டையும்தான் என்று கொள்ள வேண்டும். நம்மாழ்வார் அடுத்த பாடலிலேயே
நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர்நிறை இல்லே
என்கிறார். தான் தனது என்ற பற்றை வேரோடு விட்டுவிடுவதைப் போல உயிருக்கு ஆகிவருவது வேறு
எதுவும் இல்லை என்கிறார். அப்படி தனது பற்றை எல்லாம் விட்டுவிட்டு இறைவனிடம் சரணடைய வேண்டும்
என்கிறார். உடலெடுத்திருப்பது அப்படி அனைத்தையும் விட்டுவிட்டுச் சரணடைவதற்குத் தடை. ஆகையால் பாவையர்
தங்கள் மேல் சாபம் இழிய வேண்டும் என்று வேண்டும்போது உடலெடுத்திருப்பதன் பீடிப்பு நீங்கவேண்டும் என்று
வேண்டுவதாகக் கொள்ள வேண்டும்.
இறைவனின் பார்வையை விவரிக்கும் வார்த்தைகளைத்தான் பாருங்களேன். இறைவனின் கருணை திடீரெனப்
பொங்கிப் பாய்வதல்ல. சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ எனும்போது மெது மெதுவே அவர்களைப் பிடித்த
பாவம் அகலும் என்றாகிறது. மேலும் திங்களைப் போலக் குளுமையும் சூரியனைப் போல வெம்மையும் எனும்போது
ஆணவத்தைத் தகிக்கும் வெம்மையும் அருளின் குளுமையும் குறிக்கப்பட்டன என்க.
எனவே இப்பாடலைப் புரிந்து கொள்ள முக்கியமான வார்த்தை சாபம் என்பதாகும். சாபம் என்ற வார்த்தை
பாவத்தின் அடியானது என்றால் செய்த அல்லது செய்யாமல் விடுத்ததைச் சார்ந்தது என்று கொள்ளாமல்
உடலெடுத்திருப்பதே சாபம் என்று கொள்ளும் பாவையர் தம் பாவம் புண்ணியம் ஆகிய அனைத்தையும் தீர்த்துவிட்டு
ஈடேற்ற வேண்டும் என்று வேண்டுவதாகக் கொள்ள வேண்டும்.




_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com