From ramaninaidu@... Sat Jan 05 10:50:54 2002
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 5 Jan 2002 18:50:54 -0000
Received: (qmail 10493 invoked from network); 5 Jan 2002 18:50:51 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 5 Jan 2002 18:50:51 -0000
Received: from unknown (HELO smtp013.mail.yahoo.com) (216.136.173.57) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 5 Jan 2002 18:50:51 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.27) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 5 Jan 2002 18:50:35 -0000
Message-ID: <001301c19619$f76ab980$1beac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruppalliyelucci 2 tamil
Date: Sat, 5 Jan 2002 22:39:20 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14561

நாள் இருபத்திரெண்டு - திருப்பள்ளியெழுச்சி - பாடல் இரண்டு

தமிழில் திருப்பள்ளியெழுச்சி பாடும் வழக்கம் எப்படி வந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்போம்.
பழந்தமிழகத்தில் அரசனைத் துயிலெப்பப் பாணர்கள் பாடுவார்கள். இதைத் தமிழ் நூல்கள் துயிலெடை நிலை
என்று குறிக்கின்றன. இந்தப் புறத்திணைத் துறைதான் கமய இலக்கியம் தமிழில் வளர்ந்த காலத்தில்
திருப்பள்ளியெழுச்சியாக மாற்றம் கொண்டிருக்க வேண்டும். தூங்கி விழிக்கும் இயல்பினரான வேந்தர்களைத்
துயிலெழுப்பும் துயிலெடை நிலையென்னும் துறையிலிருந்து வேறுபட்டதெனக் குறிக்கவே திருப்பள்ளியெழுச்சி என்று
குறித்தனர். பள்ளி எழுந்தருளாய் என்பதற்கு எமதுள்ளத்தில் திருப்பள்ளி ஓலக்கம் கொள்ள எழுந்தருள்க என்று
சீகாழித் தாண்டவராயர் பொருள் உரைப்பார்.

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல்அம் கண்ணாம்
திரள்நிறை அறுபதம் முரல்வன இவை ஓர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

கதிரவனின் சாரதி அருணன். இந்திரன் திசை கிழக்கு. கதிரவனின் வரவுக்குக் கட்டியம் கூறுவான் போல
அருணன் கிழக்குத் திசையை நெருங்கிவிட்டான். வானியலாளர்கள் கதிரவன் தோன்றுவதற்கு ஐந்து
நாழிகைகள் இருக்கும் பொழுதாக இதைக் குறிப்பார்கள். இருள் மெல்ல மெல்லப் போய்க் கொண்டிருக்க உதய ஒளி
பரவும் நேரம்.

கதிரவனின் கதிர்க்கரங்கள் படப் படக் கமல மலர்கள் விரிகின்றன. இறைவனின் திருமுகத்தில் கருணைப்
பேரொளி எழ எழ அடியவர்தம் கண்கள் மலர்கின்றன.

கூட்டம் கூட்டமாக வண்டுகள் முரல்கின்றன. அடியவர் கூட்டம் ஆனந்தத் தேன் பருகக் குனிப்புடையான் கழலாகிய
தாமரையில் தேன் பருக முரல்கின்றன.

அருள்நிதியமாகிய மூல பண்டாரத்தை வழங்குகிற ஆனந்த மலை. அருளலை வீசுகின்ற பெருங்கடல்.
அவ்விறைவனைத் துயில் நீங்கி எழுந்து வருமாறு அழைக்கின்றனர் பாவைப் பெண்டிர்.

இப்பாடலில் இறைவனைக் கடலாகவும் மலையாகவும் உருவகம் செய்திருப்பது சிறப்பு. அளக்கலாகா அளவும்
பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம் தரும் வன்மையும் கொண்டது மலை. இதையே
திருஞான சம்பந்தர் சென்றடையாத திருவுடையான் என்பார்.

அளவிடற்கரிய பரப்பும் ஆழமும் அளவிறந்த செல்வமும் கொண்டது கடல். என்றாலும் அலைவீசும் கரையிலே
எளிமையானது போலத் தோன்றி இன்பமும் அளிக்கிறது. அதனுள் இறங்காதவருக்கும் இனிய காற்றைத் தருவது
கடல். நெருங்கிவரும் அடியாருக்கு எளிமையும் ஒட்டி நிற்பாருக்கு இன்னருளும் வழங்குபவன் என்பதால் கடலை நினைவு
கொண்டார் மாணிக்கவாசகர்.



_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com