From perichandra@... Sat Jan 05 18:04:15 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 02:04:15 -0000
Received: (qmail 31006 invoked from network); 6 Jan 2002 02:04:15 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 02:04:15 -0000
Received: from unknown (HELO n7.groups.yahoo.com) (216.115.96.57) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 02:04:15 -0000
Received: from [216.115.96.111] by n7.groups.yahoo.com with NNFMP; 06 Jan 2002 02:04:12 -0000
Date: Sun, 06 Jan 2002 02:04:11 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Poornamathah....Re: [agathiyar] Re: Some questions about Arunagirinathar
Message-ID:
In-Reply-To: <001801c19621$4ed120e0$a5f0c7cb@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5254
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14568

--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> அன்புள்ள சந்திரா,
>
> பெரிசிடம் கேட்டிருந்தாலும், கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு நான் குறுக்கில்
>வருவதைத் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார், பொருட்படுத்தமாட்டார் என்று நினைக்கிறேன்.

உங்கள் குரல்கேட்டு இன்பமே!
>
> வால்மீகி இராமாயணத்தில் விஷ்ணுவின் அம்சம் நான்கு சகோதரர்களிடம் எப்படிப் பிரிந்தது
என்றொரு கணக்கு வருகிறது.
>
> பாலகாண்டம் பதினெட்டாவது சர்க்கம்.
>
> "....
>Ikswaku's race, who represented one half of Lord Visnu..." (a portion
>from Sloka 8-11)

...
>represented a quarter of Lord Visnu..." (a portion of Sloka 13)
>
> "Sumitra (the second wife of King Dasaratha) then gave birth to
(twin) sons Lakshmana and Satrughna, both valiant and skilled in the
use of all (kinds of) missiles and (jointly) representing a portion
(one-sixth) of Lord Visnu. (Sloka 14)
>
> மொழிபெயர்ப்பாளர் one-sixth என்று சொன்னாலும் அது one-eighth என்று
>இருப்பதுதான் பொருத்தமாகப் படுகிறது. ராஜாஜியும் அவ்வாறே குறிப்பிடுகிறார்.

போதாதென்று இன்னும் ஒரு குழப்பம்.
என்னிடம் உள்ள வால்மீகி இராமாயணத்தின் பரிமள் பதிப்பகத்தின் பதிப்பில்
சொல்லும் அந்தப் பதினாலாம் செய்யுள்:

"அத லக்ஷ்மணசத்ருக்னௌ ஸுமித்ரஜனயத்சுதௌ
வீரௌ ஸர்வாஸ்த்ரகுசலௌ விஷ்ணோரர்தஸமன்விதௌ" (வால்:பால:18:14)

அர்தஸமன்விதௌ என்பதைக் கவனிக்க.
எம்.என்.தத் என்பவர் பெயர்ப்புச் சொல்வது:
"Then Sumitra gave birth to Lakshmana and Satrughna, heroic, and
skilled in all weapons, and endowed with the half of Vishnu"!

இருவருக்கும் மொத்தம் அரைப்பங்கு என்கிறது.
நாமும் நேரடியே அந்தத் தொடரை அகராதிகொண்டு ஆராயலாம்:
அர்த = அரை என்பது தெரிந்ததே. ஸமன்விதௌ என்றசொல் அரையென்பதன்
எண்ணுப்பொருண்மையை மாற்றுகிறதா என்று பார்ப்போம்.

ஸமன்விதௌ = ஸமன்வித: என்பதன் இருமை
ஸமன்வித = ஸமன்வி என்னும் வினையின் எச்சப்பெயர்
ஸம்-அனு-இ என்பதன் புணர்ச்சி = ஸமன்வி

காட்டாக:
ஸம்-அனு-பூ = ஸமனுபூ

samanubhU
P , %{-bhavati} to enjoy together , feel , perceive Ragh.

ஸமன்வி
sam-anv-i
P. %{-eti} , to go together after , follow MW. ; to infer or ensue as
a consequence ib.

ஸமன்வித
sam-anvita
mfn. connected or associated with , completely possessed of
, fully endowed with , possessing , full of (instr. or comp.)
S3vetUp. Mn. MBh. &c. ; corresponding or answering to (comp.) R.

மேலுள்ளதன்படி "விசுணுவின் அரைப்பங்கையும் முழுதும் பெற்ற இருவர்" என்றுதான் பொருள்.
கவனிக்கவேண்டியது இருவருக்கும் சமமாக என்று கூடப் பொருளில்லை. எனவே தத்துவின்
பெயர்ப்பு அந்தச் செய்யுளின்துல்லியம்போல் தெரிகிறது.

அந்தச் செய்யுளுக்குப் பாடவேறுபாடுகள் உண்டா? என் பதிப்புப்
பாடவேறுபாடுகளைக் குறிப்பதில்லை.


>இந்தக்
>கணக்கைப் பற்றிச் சொல்லும்போது ராஜாஜி பின்வருமாறு சொல்கிறார்.
>
> "இந்த விஷயங்கள் அவ்வளவு முக்கியமல்ல. கடவுளைப் பங்கு பண்ணி கணக்கிட முடியாது.
பரம்பொருளில் ஒரு சிறு பங்கும் பூரணமாகவே நிற்கும் என்பது சுருதி." இதற்குப் பிறகு அந்த
ஸ்லோகத்தைச் சொல்கிறார்.
>
> ஓம் பூர்ணமதஹ் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
> பூர்ணஸ்ய பூர்ணமதாய பூர்ணமே வா வசிஷ்யதே
>
> பூர்ணமிதம் என்பதுதான் சரியென்று தோன்றுகிறது. உங்களுடைய மொழிக்கூர்மை போற்றத்
>தக்கது.

நன்றி. மேலும் கொங்குநாடு ஈன்ற சான்றோரும்
மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியர் அவர்களின் சிற்றப்பாவும் ஆகிய
சுவாமி சிதுபவானந்தர் பள்ளியில்/விடுதியில் ஓதுவது அந்தச் செவ்விய செய்யுள்.
இரவு உறங்குமுன் நடக்கும் கூட்டத்தில் ஓதுவதென்று நினைக்கிறேன்.
திவ்வியத்தின் முதற்கோப்பான "பல்லாண்டு பல்லாண்டு பலகோடிநூறாயிரம்...",
[அதைச் சுதா இரகுநாதன் நாட்டையில் அமெரிக்கத் தமிழ்ப் பேரவை மாநாட்டின்
1996-ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பாடியுள்ளதைக் கேட்கக் கொடுத்திருக்கவேண்டும்.
என் அண்ணார் அதுபோல் நாட்டையில் ஒரு பாட்டைக் கேட்டதில்லை என்பார்கள்.
மிக அருமையான மெட்டு. அன்றே கேட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும்!]

சம்பந்தரின் "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்"
ஆகியவையும் ஓதிவிட்டுத் தூங்குவது மரபு.


> பெரிசுக்குக் கண்பார்வை, உடல் நிலை, மனநிலை என்று பல இடர்ப்பாடுகள். கை
>தவறியிருக்கலாம். இத்தனை கஷ்டங்களுக்கு நடுவில் விடாமல் அவர் இத்தனை செய்வது
>பெரிய விஷயம். மன உளைச்சல்களைக் கழற்றி வைத்துவிட்டு இயங்குவது எவ்வளவு
>கடினமானது என்பது எனக்குத் தெரியும்.

முற்றும் ஒப்புகிறேன். அவருடைய இணையத் தமிழ்ப்பண்பாட்டுத் தொண்டில் ஒருமாற்றுக்
குறைச்சலும் இல்லை. அவர் செவ்விய நூல்கள் வெளியிடவேண்டும். "இணையத்தில்
செயபாரதி"
நல்ல முதற்படி. அது தொடரட்டும். அவர் நலமும் அத்தொடரோடு பெருகட்டும்.

>
> பெரிசையா, நான் தவறாக ஏதேனும் உளறியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
>
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்.

>
>
>
> ----- Original Message -----
> From: perichandra
> To: agathiyar@y...
> Sent: Sunday, January 06, 2002 3:11 AM
> Subject: [agathiyar] Re: Some questions about Arunagirinathar
>
>
>
> பூர்ணமத: *பூர்ணமிதம்* என்றிருக்கவேண்டுமே??
>
>
> [Non-text portions of this message have been removed]