From jaybee@... Sat Jan 05 23:21:05 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 07:21:04 -0000
Received: (qmail 41508 invoked from network); 6 Jan 2002 07:21:04 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 07:21:04 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 07:21:04 -0000
Received: from user (sp-103-61.tm.net.my [210.186.103.61]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GPI00BE89R0CP@...> for agathiyar@yahoogroups.com; Sun, 06 Jan 2002 15:21:01 +0800 (SGT)
Date: Sun, 06 Jan 2002 15:24:58 +0800
Subject: Gunadhya, Saka, Satavahana and others - Re: [agathiyar] Re: MOdhakam thandha kaaviyam
In-reply-to:
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020106152458.0118a9c8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020105000347.0078e3c8@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 14576

At 09:18 PM 1/5/02 +0000, you wrote:
>--- In agathiyar@y..., jaybee wrote:
>>
>> அன்பர்களே,
>>
குனாட்டியர் என்னும் பண்டிதர் ஓராண்டில் கற்றுக்கொடுப்பதாகச்
>> சொன்னார்.
...
>>
>> ஜெயபாரதி
>
>இந்தக் குணாட்டியர் பைசாசம் பிருகத்கதை எல்லாம் சாதவாகன
மன்னனோடு
>தொடர்பென்றல்லவோ நினைப்பு...
>தெருட்டவும்...
>
>பெ.சந்திரசேகரன்


:-)
இந்த இழையின் ஆரம்பத்தில் இப்படி எழுதியிருந்தேன்:


மோதகத்துக்குப் பூர்ணத்தை வேக வைத்துக்கொண்டிருக்கும்போது
'மோதகம்' சம்பந்தமான ஒரு வரலாற்றுக்கதை நினைவுக்கு வந்தது.

நீண்ட காலத்துக்கு முன்னர் படித்த கதை.


வரலாற்றுக் கதை.
வரலாற்று மாந்தர்கள், நிகழ்வுகள் சில,ஆகியவற்றைக்
கொண்டதொரு கதை.
இது ஒரு செவிவழி மரபுக் கதையாக விளங்கி, நீண்ட
காலத்துக்குப் பின்னர் எழுதிவைக்கப்பட்டது.

குனாட்ட்டியரின் காலம் சரியாக அறியப்படவில்லை. அவர்
காலத்தால் சந்திரகுப்தனுக்கும் முற்பட்டவர். சந்திரகுப்தன் கி.பி.380-இல்
இருந்தவன். குனாட்டியர் கி.பி. 1-ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கலாம்
என்று கருதப்படுகிறது.
அவர் சாதவாகனர்கள் அவரவையில் இருந்தவர் என்றும்
சகர்களோடு இருந்தவர் என்றும் இருவிதக்கருத்துக்கள் விளங்குகின்றன.
பைசாச்சி மொழியில் அவரால் எழுதப்பட்ட பிருஹத்கதை அறவே
அழிந்துவிட்டது.
அதனைத் தழுவி க்ஷேமேந்திரரால் எழுதப்பட்ட ப்ருஹத்கதா மஞ்சரியும்
சோமதேவரால் எழுதப்பட்ட கதா சரித்சாகரமும் பிற்காலத்தில் எழுதப்பட்டவை.
குனாட்டியரின் படைப்பான பைசாச்ச பிருஹத்கதாவை மைசூரின்
கங்கமன்னன் துர்விநீதன் வடமொழியில் மொழிபெயர்த்ததாகவும் அதன்
தழுவலாக கொங்குவேளால் தமிழில் இயற்றப்பட்டதுதான் 'உதயணன் கதை'
எனப்படும் 'பெருங்கதை' அல்லது 'கொங்குவேள் மாக்கதை' என்று
சொல்வார்கள்.
ஈரோட்டிற்கு அருகிலுள்ள விசயமங்கலத்தின் பள்ளியில்
வாழ்ந்ததொரு சமணத்துறவி.
உங்கள் வட்டகைக்காரர்தான்.

குனாட்டியர், பாணினி, சந்திரகுப்த விக்கிரமாதித்தன் ஆகியோரை
வைத்துக் கதையைப் புனைந்திருகிறார்கள்.
நம்ம குலோத்துங்கன், கம்பன், ஔவையார், புகழேந்தி,
ஒட்டக்கூத்தர் ஆகிய அனைவரையும் வைத்துப் புனையப்பட்ட கதையைப்
போலவும் ஏகம்பவாணன் சரித்திரத்தைப் போலவும்தான்.

ஆனாலும்கூட பெரும்பண்டிதராகிய குனாட்டியர் பைசாச்சியில்
போய் அப்படிப்பட்ட பெருங்கதையை இயற்றினார் என்னும்போது.....
சிறிது பிசிறு தட்டத்தான் செய்கிறது.
என்னமோ நடந்திருக்குங்குறென்.

அன்புடன்

ஜெயபாரதி

===================================