From harikris@... Sun Jan 06 00:01:15 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 08:01:15 -0000
Received: (qmail 38608 invoked from network); 6 Jan 2002 08:01:15 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 08:01:15 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 08:01:14 -0000
Received: from harikris ([203.199.240.97]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPIBM003.I1X for ; Sun, 6 Jan 2002 13:31:12 +0530
Message-ID: <004701c19688$9dcd9860$61f0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References: <20020106053319.83919.qmail@...>
Subject: Re: [agathiyar] mozhi
Date: Sun, 6 Jan 2002 12:56:21 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14578

அன்புள்ள முருகன்,

நல்ல தலைப்பை ஆரம்பித்திருக்கிறீர்கள். இரண்டு மொழிகளையும் நன்றாக அறிந்த உங்களைப் போன்றவர்களால்தான் நடுவு நிலையோடு செய்ய முடியும். தொடருங்கள்.

கடைசிப் பத்தியில் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. குறிப்பாக "அடிமைப் படுத்தப் பட்டவர் வழங்குவதிலும்(வழங்க வைக்கப்பட்டதிலும்)." வழங்க வைக்கப்பட்டதிலும்? விளக்க வேண்டுகிறேன்.

வெப்பு என்பது வெம்மைதான். வெற்பு என்றபொருளில் நான் எங்கேயும் பார்த்ததில்லை. வெப்பு நோய் என்பதும் உண்டு. வெப்பு என்பதற்குத் தொழுநோய் என்றும் பொருள் உண்டு.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.


----- Original Message -----
From: "era.murugan achwin"
To:
Sent: Sunday, January 06, 2002 11:03 AM
Subject: [agathiyar] mozhi


|
| கவனித்துப் படித்தால், தமிழ் மலையாளமாக மெல்ல மாறும் பரிணாம
| நிகழ்வின் கூறுகள் தெரிகின்றன -
|

| 5) வெப்பு - இது வெற்பு என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு. தற்கால
| மலையாளத்தில் வெப்பு பெரும்பாலும் சமையல் செய்வதைக் குறிக்கும் -
| அரிவெப்பு - வைத்தலிலிருந்து வைப்பு வந்து அது வெப்பாகி இருக்கலாம்.
| அல்லது வெப்பப் படுத்துவதாலா?
|
| மனிதன் சமுதாயத்தோடு கலந்து உறவாட ஏற்பட்ட ஊடகமான மொழி ஒரு
| static சமாசாரமாக இல்லாமல் வளர்சிதைமாற்றம் அடைந்து கொண்டே
| இருக்கிறது என்பதற்கு மேலே கண்டது உதாரணம்.
|
| மொழியை ஊடகமாகப் பார்க்கும் போது வியத்தலும், இகழ்தலும் நீங்கிப்
| போகிறது. ஊடகம் என்பதால், ஆதிக்கம் செய்கிறவர்கள் மொழியை
| வழங்குவதிலும், அடிமைப் படுத்தப் பட்டவர் வழங்குவதிலும் (வழங்க
| வைக்கப்பட்டதிலும்) புலப்படும் வேறுபாடுகள் சமூகவியல் ஆய்வுக்கு உரியன.
|
| anputan,
| era.murukan
|