From harikris@... Sun Jan 06 00:01:21 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 08:01:22 -0000
Received: (qmail 7779 invoked from network); 6 Jan 2002 08:01:22 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 08:01:22 -0000
Received: from unknown (HELO smtp02.vsnl.net) (203.197.12.8) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 08:01:20 -0000
Received: from harikris ([203.199.240.97]) by smtp02.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPIBM202.P1W for ; Sun, 6 Jan 2002 13:31:14 +0530
Message-ID: <004801c19688$9f2e12c0$61f0c7cb@...>
To:
References:
Subject: Re: Poornamathah....
Date: Sun, 6 Jan 2002 13:31:41 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14579

அன்புள்ள சந்திரா,

இராமன் அரைப் பங்கு, பரதன் கால் பங்கு என்றால், மீதம் கால்பங்கு. **அந்தக் கால்பங்கில் அரைப் பங்கு அரைப் பங்கு** லக்ஷ்மணனும் சத்ருக்னனும் என்று கொள்ளலாமோ? அதுதான் பொருத்தமாகப் படுகிறது. வடமொழி வல்லுனர்கள்தான் சொல்ல வேண்டும். நல்ல வேளை. கம்பன் இந்த மாதிரித் துன்பங்களைத் தரவில்லை!

ராஜாஜி சொல்கிறார். "கம்பர் வால்மீகி ராமாயணத்தை மிகக் கவனமாகப் பின்பற்றியே தம்முடைய தனிச் செல்வமான கற்பனா சக்தியையும் உபயோகித்துஅபார அழகுடன் தம் ராமாயணத்தைப் பாடியிருக்கிறார். ஏதும் மாற்றாமலே அநேக இடங்களில் **சாமர்த்தியமாகச் சிக்கல்களை சரிப்படுத்தி விட்டிருக்கிறார்.**" உண்மை. கம்பன் ஒரு சில இடங்களில் மட்டும் மாற்றியிருப்பதாகச் சொல்கிறார். ஒரு சில என்பதற்கு அவர் மொழியில் "நூற்றுக் கணக்கான இடங்களில்" என்ற பொருள் போலும்!

நானும் நீட்டி முழக்கி ஒவ்வொரு பாத்திரமாக அன்றாடம் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு வாசகர் கேட்டார். 'லக்ஷ்மணன்ஆதி சேஷன் என்றால், பரதனும் சத்ருக்னனும் எந்த அம்சம்? அவர்களில் யார் சங்கு, யார் சக்கரம்? சரயு நதியில் விழும் போது யார் முன்னால் விழுந்தார்கள்? யார் தொடர்ந்தார்கள்?' அன்பும், அறனும், பொறையும் வீரமும் கொண்ட அந்த நால்வரில் எது மக்களுக்கு அவசியமாகி விடுகிறது பார்த்தீர்களா!

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: perichandra
To: agathiyar@yahoogroups.com
Sent: Sunday, January 06, 2002 7:34 AM
Subject: Poornamathah....Re: [agathiyar] Re: Some questions about Arunagirinathar



"அத லக்ஷ்மணசத்ருக்னௌ ஸுமித்ரஜனயத்சுதௌ
வீரௌ ஸர்வாஸ்த்ரகுசலௌ விஷ்ணோரர்தஸமன்விதௌ" (வால்:பால:18:14)

அர்தஸமன்விதௌ என்பதைக் கவனிக்க.
எம்.என்.தத் என்பவர் பெயர்ப்புச் சொல்வது:
"Then Sumitra gave birth to Lakshmana and Satrughna, heroic, and
skilled in all weapons, and endowed with the half of Vishnu"!

இருவருக்கும் மொத்தம் அரைப்பங்கு என்கிறது.
நாமும் நேரடியே அந்தத் தொடரை அகராதிகொண்டு ஆராயலாம்:
அர்த = அரை என்பது தெரிந்ததே. ஸமன்விதௌ என்றசொல் அரையென்பதன்
எண்ணுப்பொருண்மையை மாற்றுகிறதா என்று பார்ப்போம்.




[Non-text portions of this message have been removed]