From eramurug@... Sun Jan 06 02:24:43 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 10:24:43 -0000
Received: (qmail 21649 invoked from network); 6 Jan 2002 10:24:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m3.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 10:24:42 -0000
Received: from unknown (HELO web14804.mail.yahoo.com) (216.136.224.220) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 10:24:42 -0000
Message-ID: <20020106102442.42727.qmail@...>
Received: from [210.214.130.77] by web14804.mail.yahoo.com via HTTP; Sun, 06 Jan 2002 02:24:42 PST
Date: Sun, 6 Jan 2002 02:24:42 -0800 (PST)
Subject: nothing to do with Kamal's 'Pammal Sambandam'
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20020106094358.98174.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14582

"அக்காலத்தில் சில முக்கியமான காட்சிகளுக்குத் தவிர, மற்றக்
காட்சிகளுக்கு எல்லாம் இன்னின்ன திரைகளை விடவேண்டும் என்ற நியமமே
கிடையாது என்றே சொல்ல வேண்டும். நான் என் கண்ணாரக் கண்ட ஒரு
உதாரணத்தைக் கொடுக்கிறேன். "திரௌபதி வஸ்திராபஹரணம்" என்னும்
நாடகத்தில் துரியோதன மகராஜன் தன் மாமனாகிய சகுனியிடம் தான்
பாண்டவர் சபையில் பட்ட அவமானத்தைச் சொல்லும் காட்சிக்கு ஒரு தெருப்படுதா
விடப்பட்டிருந்தது. அத் தெருப் படுதாவில் சென்னை போஸ்ட் ஆபீசும்,
மின்சார வண்டிகள் போவதற்காக வேண்டிய இரும்புக் கம்பங்களும் தந்திகளும்
வரையப் பட்டிருந்தது!

என்னடா, இப்படி துவாபர யுகத்தில் நடந்திருக்குமா? ராஜாதி ராஜனென்ற
பெயர் பூண்ட துரியோதனன், சகுனியுடன் மந்திராலோசனை செய்யும் போது ஒரு
வீதியில் தான் செய்வானா? அதுவும் சென்னப் பட்டணம் போஸ்ட் ஆபீசுக்கு
எதிராகவா?"

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய "நாடக மேடை நினைவுகள்"
புத்தகத்திலிருந்து.

வி.கே.என், சகரியா என்று மலையாளத்தில் உள்ளது போல் தற்காலத் தமிழ்
உரைநடையில் அங்கதம் கிடையாது என்று என் நண்பர் ஜெயமோகன்
குறிப்பிட்டார். ஜெயமோகனிடம் முதலியாரை அறிமுகப்படுத்தி வைக்க
வேண்டும். அவர் இதை எழுதிய வருடம் 1932 !!

anputan,
era.murukan

__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/