From sadayan50@... Sun Jan 06 02:55:11 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 10:55:11 -0000
Received: (qmail 15887 invoked from network); 6 Jan 2002 10:55:11 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 10:55:11 -0000
Received: from unknown (HELO web13801.mail.yahoo.com) (216.136.175.11) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 10:55:11 -0000
Message-ID: <20020106105511.25965.qmail@...>
Received: from [195.229.240.242] by web13801.mail.yahoo.com via HTTP; Sun, 06 Jan 2002 02:55:11 PST
Date: Sun, 6 Jan 2002 02:55:11 -0800 (PST)
Subject: Back to Dubai...
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com
Cc: uaetamilnetters@yahoogroups.com, tamil@...
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 14583
டிசம்பர் 13ம் திகதி நோன்பு திறந்து விட்டு, அடுத்த வேளை
தொழுக்காக்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த தருணத்தில் ஒரு தொலைப்
பேசி வந்தது. மனைவியிடமிருந்து கூவலாகவும் மூத்த சகோதரியிடமிருந்து
கேவலாகவும் வெளிப்பட்ட தகவல் தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக
இருப்பதால் ஒரு நடை வந்த பார்த்து விட்டு போய்விட முடியுமா என ( கடந்த
ஓரு மாதமாகவே உடல்நலம் குன்றி படுக்கையிலேயே இருந்தவர்கள் ) ,
அப்பறமென்ன காய்களை நகர்த்த வேண்டிய இடத்தில் நகர்த்தி ஒரு வழியாக
ஊருக்கு செல்ல ஏற்பாடுகளை செய்தேன். பண்டிகைக் காலமானதால் சென்னை
விமானத்தில் இடம் கிடைக்கவில்லை. டிசம்பர் 14ம் தேதி மஸ்கட்டிலிருந்து
செல்லவிருக்கும் விமானத்தில் இடம் கிடைத்தது. என்னதான் அவசரமாக
கிளம்பினாலும் அடுத்த நாள் நோன்புப் பெருநாளாக இருப்பதால் தேவையான
பொருள்களை சேகரித்துக் கொண்டு கிளம்பி விட்டேன். இதற்கிடையில்
அமீரக நண்பர்கள் யாருக்கும் தகவல் சொல்ல முடியாத நிலை.
மஸ்கட்டில் ( நள்ளிரவு) சென்னை விமானத்தில் காலடி வைத்த போதுக்கூட
பதட்டமான சூழ்நிலையே. விமானம் கிளம்பி சிறிது நேரத்தில் உணவு
பரிமாறப்பட்டது. சரி எஞ்சியிருக்கும் கடைசி நோன்பையும் நோற்று
விடுவோம் என்று உணவை முடித்துக் கொண்டு சற்று கண்ணயர்ந்தேன். விழித்த
போது விமானம் செனனையை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல். சரியான
நேரத்தில் (விடியல் 5.20) விமானம் தரையிரங்கிது. ஒருவழியாக
குடியுரிமை சோதனையை முடித்துக் கொன்டு உடமைகளை எடுப்பதற்காக காத்துக்
கொன்டிருந்த வேளையில். ஒரு கை தோளைத் தட்டி உங்கள் விமானச் சீட்டையும்
கடவு அட்டையையும் பார்க்கலாமா என்று கேட்டது. திரும்பிப் பார்த்த போது
அவர் விமான நிலைய அதிகாரி எனத் தெரிந்தது. இது என்ன புது சோதனை,
நாம் ஒன்றும் கடத்திக் கொண்டு வரவில்லையை அல்லது இணையத்தில் ஒசாமா
பின்லாடனுக்கு ஆதரவாகவும் ஒன்றும் எழுதவில்லையே என்று யோசித்துக்
கொன்டிருந்தபோது பயப்படவேண்டாம் மஸ்கட்டிலிருந்து வரவேண்டிய உங்கள்
உடைமைகள் மஸ்கட் விமானத்தில் போதிய இடமில்லாததால் வரவில்லை அடுத்து
வரும் விமானத்தில வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதவரை காத்திருங்கள்
என்றார் அப்போது சென்னை நேரம் காலை 6 மணி. அடுத்த விமானம் வருவது 7
மணிக்குத்தான் என்றார்கள். அதிர்ஷ்டம் தபாலில் வந்தால் தரித்திரம்
தந்தியில் வருமென்பார்கள் அது சரியானதென்பதை உணர்ந்து, என்னையே நொந்து
கொண்டு ஒரு மணி நேரம் சென்னை விமான நிலையத்தில் நடை பயின்று
கொண்டிருந்தேன். குறித்த நேரத்தில் குறிப்பிட்ட விமானம் தரையிறங்கி
உடமைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறியப்
போது காலை மணி 8.30. வீட்டுக்காரி ஏன் எல்லோரும் வெளியான பிறகு
விமான நிலையத்தை கழுவி பெருக்கி சுத்தம் செய்து விட்டு வருவதுதானே ?
என்றாள்.
விமான நிலையத்திலிருந்து தி.நகரிலிருக்கும் வீடு வந்து சேர்ந்த போது
9.00மணி. அடுத்து கூத்தாநல்லுருக்கு கிளம்ப வேண்டும். வீட்டைப் பூட்டிக்
கொண்டு மகிழ்வுந்தில் அமர்ந்த போது காலை 11 மணி . வழி நெடுக
மகளும் மனைவியும் எதேதோ கேட்டு நச்சரித்துக் கொண்டு வந்தாலும், உள்ளமும்
உணர்வும் அம்மா எப்படியிருக்கிறார்களோ என்ற பரிதவிப்பிலே, சரியாக
மதியம் இரண்டு மணிக்கெல்லாம் நெய்வேலி வந்து விட்டோம் நானும் என்
மனைவி மட்டுமே நோன்பிருந்ததால் மதியச் சாப்பாட்டிற்காக மகிழ்வுந்தை
நிறுத்தி விட்டார் ஓட்டுநர். பிறகென்ன மீண்டும் பயணம். திருப்பனந்தாள்
வந்த போது மாலை நேரம் 6 மணி நோன்பு திறப்பதற்கான நேரம். வெளியே
மழை கொட்டிக் கொண்டிருந்தது. மகிழ்வுந்தில் இருந்து கொண்டே இரு பேரித்தம்
பழம் கொஞ்சம் தண்ணீர் என நோன்பை திறந்து விட்டிருந்தேன். கும்பகோணம்
வந்து சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கூத்தாநல்லுர் வந்தடைந்த போது இரவு 9
மணி .
தாயாரின் படுக்கையைச் சுற்றி, மகள், மருமகள், பேரன் , பேத்தி,
கொள்ளுப் பேத்தி எனக் கூட்டம் ( ஒரு கொள்ளுப் பேத்தி வேறு வயிற்றை
தள்ளிக் கொண்டு நின்றாள், கொள்ளுப் பேத்திக்கு பிள்ளை பிறந்தால் எப்படிக்
கூப்பிடுவது, எள்ளுப் பேத்தி என்றா ) ராணியைப் போல் கம்பீரமாக
வலம் வந்து கொண்டிருந்தவர்கள் கிழித்துப் போட்ட நாராக படுத்துக்
கிடந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அம்மாவிற்கு நினைவு
திரும்பியது. பக்கத்தில் போய் நின்று குரல் கொடுத்தேன். பேசினேன். யார்
வந்திருக்கிறது என்ற என் அக்காளின் கேள்விக்கு என்மகன் என்று வந்த பதிலில்
மனம் கொஞ்சம் சாந்தியடைந்தது.
( தாயாருக்கு வயது 77 நீரிழிவு இரத்தக் கொதிப்பு உண்டு இருமுறை
மாரடைப்பு வந்து மீண்டவர் இதில் ஒரு மாதமுன்பு நாற்காலியில்
உட்காரும்போது கீழே விழுந்ததில் தொடை எலும்பு முறிவு வேறு )
விடுப்பு கிடைத்ததோ ஒரு வார காலம், இக்குறுகிய காலத்தில் என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அத்தனை பணிவிடைகளையும் செய்தேன் இதற்கிடையில்
விடுப்பை ஒரு வார காலம் நீட்டிக் கொண்டேன். புறப்படும் நாள் வந்தது,
இந்தநிலையில் தாயை விட்டு விட்டு வர மனதில்லை. மனதைக் கல்லாக்கிக்
கொண்டு இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு துபாய் போய்வருகிறேன்
என்றபோது அந்த அன்பு உள்ளம் சலாமத்தாக ( செளக்கியமாக ) போயிட்டு
வா என்றதையே வேத வாக்காக எடுததுக் கொண்டும் மனதைக் கல்லாக்கிக்
கொண்டும் சனவரி முதல் தேதி வைகறையில் சென்னைக்கு கிளம்பி
விட்டேன்.
சென்னை வந்த போது மதியம் 1 மணி . விமானச் சிட்டை மறு உறுதி செய்து
கொண்டு மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு மணியைப் பார்த்த போது மாலை
7.30 அடுத்து தலையாய வேலை ஒன்று பாக்கி இருந்தது. அதான் சென்னை
நண்பர்களை சந்திப்பது. கையில் இருந்த பட்டியல் நீண்ட பட்டியல், ( திரு.
இரா.முருகன், முனைவர், போஸ், திரு. அரிகிருட்டினன், திரு. நாக
இளங்கோ, திரு. அரவிந்தன் கவியோகியார். ) காலமோ குறுகியது.
முதல் தொடர்பு இரா. முருகனிடம், தகவலைச் சொன்னேன், உங்களுக்கு கால
அவகாசம் கிடையாது உங்கள் இல்ல இலக்கத்தை சொல்லுங்கள் பத்து நிமிடத்தில்
அங்கிருப்பேன் என்றார். சொன்னபடியே பத்தாவது மணித்துளியில் வீட்டு
வாசலில் அந்த அன்பு நெஞ்சம். என் இல்லத்திலிருந்தபடியே இரா. முருகன் தன்
செல்பேசியில் நண்பர்களுடன் தொடர்பு கொண்டார். முதலில் அரி கிருட்டிணன்.
வீட்டில் இல்லை, செங்கல் பட்டு சென்றிருப்பதாக தகவல். அடுத்து முனைவர்,
அவரும் வீட்டிலில்லை. வருவதற்கு நேரமாகும் என்றார்கள். இதற்கிடையில்
திரு. வெங்கடேஷ் இணைப்பில் வந்தார்கள். அவரிடம் சிறிது அளவளாவினேன்.
அரசியல், ஆன்மீகம், இசை, இலக்கியம், கவிதை, என்று அகத்தியரிலும்
தமிழுலகத்திலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் இரா. முருகனை என்
வயதில்தான் எதிர்பார்த்தேன். பாவி மனிதன் என் ஊகத்தை பொய்யாக்கி
விட்டு கல்லுரி மானவனை போல் வந்து நின்றார். வந்தவர் சும்மா வரவில்லை
ஒரு பை நிறைய பொத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தார். அதுவும் கால
அவகாசம் இல்லை என்ற குறையோடு நேர மிருந்தால் பொத்தகங்களை ஓரு
கூடையிலேயே வாரி எடுத்துக் கொண்டு வந்திருப்பார் போலும். காலத்தைப்
பேணுவதில் கராரானவர் என்று கணித்துக் கொண்டேன். எவ்வளவோ வற்புறுத்தியும்
உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று பத்தே நிமிடங்களில்
விடை பெற்றுக் கொண்டார்.
அடுத்து நண்பர்களை தொடர்பு கொள்ள எத்தனித்த போது, உறவினர்களின்
படையெடுப்பு, எல்லாம் முடிந்து காலத்தைப் பார்த்தபோது இரவு மணி 11 .
அதே நேரத்தில் முனைவரின் தொலைபேசி, உங்கள் இல்ல முகவரியைத்
தாருங்கள், வருகிறேன் என்றார். மழை வேறு வருவேன் வருவேன் என பயமுறுத்திக்
கொண்டிருந்தது. உங்களிடம் பேசியதே நேரில் சந்தித்த மாதிரி என
சொல்லி அந்த அன்பு நெஞ்சத்திடமும் விடை பெற்றுக் கொண்டேன், மற்றவர்களை
அந்த அகால நேரத்தில் தொந்தரவு செய்ய மனமில்லாததால் இன்ஷா அல்லாஹ்
அடுத்து முறை சந்தித்துக் கொள்வோமென நினைத்து துபாய்க்கு திரும்பி
விட்டேன்.
என் தாயாரின் உடல் நிலை நற்குணமடைய வேண்டும் என தனி மடலிலும்,
பொது மடலிலும், தொலை பேசியிலும் வாழ்த்திய அனைத்து அன்பு
நெஞ்சங்களுக்கும் என உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/