From ramaninaidu@... Sun Jan 06 06:59:39 2002
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 14:59:38 -0000
Received: (qmail 36087 invoked from network); 6 Jan 2002 14:59:38 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 14:59:38 -0000
Received: from unknown (HELO smtp014.mail.yahoo.com) (216.136.173.58) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 14:59:38 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.162) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 6 Jan 2002 14:59:35 -0000
Message-ID: <005401c196c2$d5e10400$a2eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruppavai 23 - tamil
Date: Sun, 6 Jan 2002 20:20:00 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14587
திருப்பாவை - நாள் இருபத்து மூன்று - பாடல் இருபத்து மூன்று
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப்போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்தருளேலோ ரெம்பாவாய்.
சொற்சித்திரம் வரைதல் தமிழ்க் கவிதைக்குச் சிறப்பான கூறாக சங்க காலத்திலிருந்தே இருந்து
வந்திருக்கிறது. சங்கப் பாடல்களில் பலவும் நாடகக் கூற்றுகளாக அமைந்தவை. அந்நாடகக் கூற்றுக்கு ஏற்புடைய
களனாக சொற்சித்திரங்களை வரைதலில் சங்கப் புலவர்கள் தலை சிறந்து விளங்கினார்கள். புற நானூற்றில்
"சிற்றில் நற்றூண் பற்றி" என்ற மூன்று வார்த்தைகளில் வரைந்துள்ள சொற்சித்திரத்தைத்தான் பாருங்களேன்.
வீடு, அதன் தூண், திண்ணை, அதைப் பற்ற ஒரு கை நீண்டிருக்க (மறுகை இடுப்பில் வைத்திருப்பாளோ? ஒரு
நடுப்பிராயத்து மங்கை இன்னொருத்தியோடு பேசிக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியை எப்படி மூன்றே
வார்த்தைகளில் காட்டிவிட்டது பாருங்கள் பாடல். எனவே இயற்கையை சங்க இலக்கியம் விவரிக்கும் போது
மானுடர் வாழ்வுக்குக் களமாக அமைத்து விவரிக்கிறார்கள். தேரில் கட்டிய மணியின் ஓசையில் கலைந்த பறந்த
வண்டுகள் போன்ற எத்தனை எத்தனை காட்சிகளைத்தான் நாம் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்!
ஆண்டாள் நாச்சியாரின் கவித்திறனில் சொற்சித்திரம் தலையாய பகுதியாக அமைந்திருக்கிறது. "மத்தளம்
கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் புடை சாய்ந்த பந்தற்கீழ்" எனும் போது சித்திரக் காட்சியாக
அமைவது தாண்டி உயிரோட்டமுள்ள காட்சியாகவே கண்முன் படைக்கிறார். ஆங்கிலத்தில் இதனை dynamic
element in description என்பர்.
திருப்பாவையில் இருபத்து மூன்றாம் பாடல் இப்படியான உயிரோட்டமுள்ள காட்சியைப் படைப்பதில்
முதன்மையானதாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
மழைக்காலத்துக்குப்பின் ஒரு காலை நேரம் - மலை மேல் ஒரு குகை - அதில் ஒரு சீரிய சிங்கம். இப்படி
ஆரம்பமாகிறது காட்சி. அந்தச் சிங்கம் தூங்கி எழுகிறது. அதில் ஆரம்பமாகிறது உயிரோட்டம். கண்கள்
தீக்கங்குகளாகச் சுடர்விடுகின்றன. நுரைவிட்டுப் பொங்கும் அலைகடலைப் போலப் பிடறி மயிர்
பொங்குகிறது. ஒரு சிலிர்ப்பில் எல்லா மயிர்க்கால்களிலும் உதறல் தந்து படிந்திருக்கும் பொடி மண்ணை
எத்திசையும் விட்டெறிகிறது. தூக்கத்தையும் ஒரு நெட்டுயிர்ப்போடு விட்டெறிந்து முழங்கிப் புறப்படுகிறது.
முழக்கம் பாறைக்குகை எங்கும் எதிரொலித்து உரக்க வெளியே கேட்கிறது. இப்படியாகச் சிங்கம்
காரியமாற்றப் புறப்படுகிறது. என்ன காரியமா? ஆரண்யத்தின் அரசன் அல்லவா!
நாச்சியாரின் வார்த்தைகளைப் பாருங்கள். மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் - தூக்கத்திலும் ஒரு
கம்பீரம் - அது வார்த்தைகளிலும் தெறிக்கிறது. சாதாரண சிங்கமல்லவாம் - சீரிய சிங்கம் அது. வெறும்
தூக்க விழிப்பல்லவாம் - அறிவுற்றதாம். முரட்டுப் பார்வை அல்லவாம் - தீ விழியாம். வேரி மயிர்
பொங்க எப்பாடும் பேர்ந்துதறி எனும் போது உடலின் ஒவ்வொரு நரம்பையும் உதறிவிட்டுச் சோம்பர் முறிக்கும்
பாங்கு வெளிப்படுகிறது. பிடறி மயிர் பொங்குவதற்கு என்ன உவமை பாருங்கள். அதுவும் ஒரே வார்த்தையில் -
பொங்க என்கிறார். மூரி நிமிர்ந்து எனும் கம்பீரம் முழங்கி என்ற வார்த்தையோடு எப்படிப் பொருந்தி
வருகிறது பாருங்கள். குகைக்குள் முழங்கினால் சுவர்களில் எதிரொலித்து வெளியே வரும் போது அதன் கர்ச்சனை
உரத்து ஒலிக்க வேண்டும் அல்லவா? கம்பீரம், அழகு, பிரமாதம் ஆகிய வார்த்தைகள் போதுமா காட்சியைக்
குறிப்பிட?
இந்தக் காட்சியின் உயிரோட்டமே இந்தப் பாடலின் சிறப்பாக அமைகிறது. முன்பு விவரித்த காட்சிகள்
பாவையருள் ஒருத்தி உறங்கிக் கிடக்கும் சோம்பலைக் குறித்தன. அல்லது அவதாரங்களில் இறைவனின்
செயல்களைக் குறித்தன. அல்லது புலர்காலை நேரத்தில் பறவைகளும் மிருகங்களும் மனிதர்களும் செய்த செயல்கள்
மற்றும் விடியலில் மலர்கள் விரிந்தமை போன்ற இயற்கை நிகழ்வுகளைக் குறித்தன. கம்பீரமான உயிரோட்டம்
மிக்க
காட்சி ஒன்றை இருபத்து மூன்றாம் பாடலுக்கென ஒதுக்கி வைத்திருந்தாரோ நாச்சியார்?
இந்தப் பாடலைப் புரிந்து கொள்ள முதன்மையாக அமைவது காரியம் என்ற வார்த்தை. இறைவனைத் தமது
ஈடேற்றத்துக்காக அணுகியிருக்கும் பாவைக் கன்னியர் தமது காரியத்தைக் கவனித்து நிறைவேற்றித் தருமாறு
பிரார்த்திக்கிறார்கள். முந்தைய பாடலில் குறித்த சாபத்தினின்றும் விடுபடுவதே இந்தக் காரியம் என்க.
ஏற்கெனவே சாபம் என்பது செய்த ஒன்றாலோ செய்யாமல் விடப்பட்ட ஒன்றாலோ விளைந்த பாவத்தின் அடியானது
அல்ல என்றும் அது உடலெடுத்த வாழ்வுக்கு அடிப்படையானது என்றும் விளக்கம் கண்டோம்.
என்னதான் விதித்தவாறு வாழ்ந்தாலும் இச்சாபத்தினின்றும் விடுபடுவதை உயிர் தானாகச் சாதிக்க முடியாது.
ஏனென்றால் உடலெடுத்து வந்ததற்குக் காரணம் ஆன்மாவின் கர்ம வினை. அந்தக் கர்ம
வினையின் இயல்பு இன்னதெனத் தெரிந்து கொள்ள முடியாத வரை அதைக் கழிக்க எப்படிச் செயலாற்றுவது?
வாழ்வின் ரகசியமே தானறியாக் கர்ம வினையின் வழி தானாகிய பின் தானாக தனக்குத் தெரியாததைக்
கழித்துக் கட்ட வேண்டியிருப்பதுதான். எனவே தன்னைக் கழித்துவிட்டு இறைவனிடம் சரணடைந்து விடுவது தவிர
வினைப் பயனைக் கழித்துக் கட்ட வேறு வழியில்லை. அதை விடுத்து அதைக் கழிக்க இதையும் அதையும் செய்தோ
செய்யாமலோ விடும்போது வினைப் பயனைக் கழித்துக் கூட்டி வினை இருக்கச் செய்யத்தான் வருகிறோம்.
அவ்வாறன்றி உடலெடுத்த வாழ்வைச் செயல்களைக் கொண்டன்றி இறைச் சிந்தனை கொண்டு நிறைப்பதே மேலும்
உடலெடுத்து வாராமல் இருக்கச் சிறந்த வழியாகிறது. சரணாகதித் தத்துவமும் இப்படித்தான் விளக்கம் கொள்ள
வருகிறது.
"பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்" என்று இருபத்தி எட்டாம் பாடலில் பாடும்போது பிறவிப்
பிணிப்பைத் துண்டிப்பதே வாழ்வின் லட்சியம் என்பதை வெளிப்படுத்துகிறார். பிறவிப் பிணிப்
பீடிப்பு இருக்கும் வரை ஈடேற்றம் கிடையாது என்பதாகும். "உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க
ஒழியாது" என்று மேலும் பாடும் போது பிறவித் துயரை இறைத் தொடர்பின்றி வேறு வழியில் ஒழிக்க
முடியாது என்பதாகிறது.
பிறவித் தளை உறுதியானது என்றால் வலிவானவர்தான் அதை வெட்டி எறிந்து நீக்க முடியும்.
அதனால்தான் இறைவனை கம்பீரத்தோடும் வலிமையோடும் பிரமாதத்தோடும் தொடர்பு படுத்துகிறார்கள். வீரம்
அல்ல இங்கு அவர்கள் குறிப்பது. வீரம் பகையை முறியடிக்கும். பகை இருப்பது தெரியாமல் இருப்பதாகப்
பிறவித்துயரம் இருக்கும்போது என்ன செய்வது? அப்படியான பிறவித்துயரத்துக்குக் காரணமான அடிப்படைச்
சாபத்தை, பிறவிகள் தோறும் செயல்பட்டு செயல்படாமல் விடுத்துச் சேர்த்துச் சேர்த்துக் கொண்டு வந்த கர்ம
வினையை நீக்குமாறு கேட்பதால்தான் சீரிய, அறிவுற்று, தீவிழி, பேர்ந்துதறி, மூரி நிமிர்ந்து,
முழங்கி போன்ற வார்த்தைகளைக் கொண்டு கம்பீரத்தைக் குறித்து அந்தக் கம்பீரத்துக்கு முன் நின்று நிலைக்க
முடியாமல் கர்மவினை மாய்ந்து போக வேண்டும் என்கிறார்கள்.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com