From ramaninaidu@... Sun Jan 06 07:00:52 2002
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 15:00:43 -0000
Received: (qmail 94693 invoked from network); 6 Jan 2002 15:00:43 -0000
Received: from unknown (216.115.97.167) by m8.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 15:00:43 -0000
Received: from unknown (HELO smtp014.mail.yahoo.com) (216.136.173.58) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 15:00:43 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.162) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 6 Jan 2002 15:00:29 -0000
Message-ID: <005601c196c2$f67b92c0$a2eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruppalliyelucci 3 tamil
Date: Sun, 6 Jan 2002 20:21:49 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14589
திருப்பள்ளியெழுச்சி - நாள் இருபத்து மூன்று - பாடல் மூன்று
கூனின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
திருப்பள்ளியெழுச்சி மூன்றாவது பாடலில் இயல்பான சொற்சுவை செறிந்து கிடக்கிறது. அறிதற்கரிய
எம்பெருமான் அடியார்க்கு அறிய எளியனாதலைக் கொண்டாடுவது இப்பாடல்.
குயிலுக்குக் கூவுதல் என்ற வார்த்தையைத்தான் வழக்கமாகப் பயன்படுத்துகிறோம். சேவலும் கூவுவதாகத்தான்
சொல்கிறோம். என்றாலும் வார்த்தைக்குப் பொருள் வேறுபடுகிறது. இப்பொருள் வேறுபாடு பொருந்தித் தோன்ற
கூனின, கூவின என்ற வார்த்தைகளை முதலடியில் காண்கிறோம். இரண்டாவது அடியிலோ இயம்பின என்ற
வார்த்தைக்கு நாரைகள் எழுப்பும் ஒலியும் சங்கிடும் ஒலியும் பொருளாகின்றன. நட்சத்திரங்களின் ஒளி இல்லாது
போனதற்குப் பயன்படுத்திய வார்த்தையைத்தான் பாருங்களேன். ஓவினவாம். பகலவனின் ஒளி
பிரகாசப்படுவதற்குப் பயன்பட்ட வார்த்தையைப் பாருங்கள் - ஒருப்படுகின்றதாம்.
ஒருப்படுகின்றது என்ற வார்த்தை ஹாப்கின்ஸின் கவிதை ஒன்றை நினைவுக்குக் கொண்டு வருகிறது. Gathers
to greatness என்பார். எண்ணெய் வித்து ஒன்றைச் செக்கில் இட்டு ஆட்டும்போது துளித்துளியாக
எண்ணெய் இறங்கித் திரள்வதைப் பற்றிப் பேசுகிறார் அந்தப் பாடலில். இந்தக் காட்சியை விவரிக்க இந்தத்
திருப்பள்ளியெழுச்சியைப் படிக்கும் வரை எண்ணெய் திரள்கிறது என்று தமிழில் பொருள் கூறிக் கொண்டிருந்தேன்.
ஆனால் வெண்ணெய் திரள்வதைப் போலல்ல எண்ணெய் திரள்வது என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. இப்போது
ஒருப்படுகின்றது என்ற வார்த்தை அந்தப் பாடலில் சொல்லிய கருத்தைத் தமிழில் சொல்ல எவ்வளவு
பொருத்தமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். இவ்வாறாக சொற்சுவையில் விஞ்சி நிற்பது
திருப்பள்ளியெழுச்சியின் மூன்றாவது பாடல்.
மேலும் குயில் இருப்பதோ மரப்பொதும்பரில். கோழி இருந்து கூவுவதோ வீட்டுக் கூரை.
நீர்நிலைகளில் இருந்து நாரைகள் குரலெழுப்புகின்றன. கோயில்களில் இருந்து கேட்கிறது சங்கு. வானில்
நட்சத்திரங்கள் ஒளி மழுங்க ஆதவன் கதிர் பரப்புகிறான். இப்படி ஒரே வீச்சில் மண்ணைச் சுற்றி விண்ணைத்
தொடுகிறது பாடல். ஒட்டு மொத்தமாக ஒரே காட்சியாக மனக்கண்ணில் காணும்போது உயிரோட்டமிக்க ஒரு
காட்சி விளங்கத் தெரிகிறது. காது கேட்கக் கண்கள் பார்க்க ஒரு பிரபஞ்சக் காட்சி விரிகிறது.
சொற்சித்திரம் வரைதல் தமிழ்க் கவிதைக்குச் சிறப்பான கூறாக சங்க காலத்திலிருந்தே இருந்து
வந்திருக்கிறது. சங்கப் பாடல்களில் பலவும் நாடகக் கூற்றுகளாக அமைந்தவை. அந்நாடகக் கூற்றுக்கு ஏற்புடைய
களனாக சொற்சித்திரங்களை வரைதலில் சங்கப் புலவர்கள் தலை சிறந்து விளங்கினார்கள்.
புற நானூற்றில் சிற்றில் நற்றூண் பற்றி என்ற மூன்று வார்த்தைகளில் வரைந்துள்ள சொற்சித்திரத்தைத்தான்
பாருங்களேன். வீடு, அதன் தூண், திண்ணை, தூணைப் பற்ற ஒரு கை நீண்டிருக்க (மறு கை இடுப்பில்
வைத்திருப்பாளோ?) ஒரு நடுப்பிராயத்து மங்கை இன்னொருத்தியோடு பேசிக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியை
எப்படி மூன்றே வார்த்தைகளில் காட்டிவிட்டது பாருங்கள் பாடல்! எனவே இயற்கையை சங்க இலக்கியம்
விவரிக்கும் போது மானுடர் வாழ்வுக்குக் களமாக அமைத்து விவரிக்கிறார்கள். தேரில் கட்டிய மணியின்
ஓசையில் கலைந்து பறந்த வண்டுகள் போன்ற எத்தனை எத்தனை காட்சிகளைத்தான் நாம் சங்க இலக்கியத்தில்
காண்கிறோம்!
ஒலியும் ஒளியும் விடியலைக் குறிக்கவும் திருப்பெருந்துறை சிவபெருமானைத் துயிலெழுப்புகிறார்கள் பாவைக்
கன்னியர். யாவருக்கும் அறிய அரியவர் அடியவர்க்கென எளிமையாகத் தோன்றி வருவதைச்
சிறப்பிக்கிறார்கள். அதிலும் ஒரு நிச்சயத்தைப் பாருங்கள். எமக்கு எளியாய் என்று தீர்மானமாக
அறிவிக்கிறார்கள். பக்தியில் வைராக்கியம் மட்டுமில்ல, இறைவனோடான இணைவுக்கான ஏக்கம்
மட்டுமல்ல, இறைவன் நம்மவன் என்ற தீர்மானமும் வெளிப்படுவதைப் பார்க்கிறோம்.
தாயுமானவர் கூட எங்கணும் நீ என்றால் இருந்தபடி காணாமல் இங்குமங்கும் தேடி அலைகுவது ஏன்? என்று
கேட்கிறார். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஒழிவற ஒருவனாய் எங்கணும் நிறைந்த
பரிபூரணனாய் இருப்பவன் என்று சான்றோர் உணர்த்தியதை உணர்ந்திருக்கும் பாவைக் கன்னியரின் தீர்மானமாக
அவன் தமக்கு எளியன் என்று அறிவிக்கும் திறனை வியந்து போற்றாமல் இருக்க முடியவில்லை.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com