From harikris@... Sun Jan 06 08:27:53 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 6 Jan 2002 16:27:51 -0000
Received: (qmail 82258 invoked from network); 6 Jan 2002 16:27:49 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 6 Jan 2002 16:27:49 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 6 Jan 2002 16:27:50 -0000
Received: from harikris ([203.199.240.73]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPIZ2B01.15A; Sun, 6 Jan 2002 21:57:47 +0530
Message-ID: <01bb01c196cf$9df413e0$49f0c7cb@...>
To: "Shaboo" , ,
References: <20020106105511.25965.qmail@...>
Subject: Re: [tamil] Back to Dubai...
Date: Sun, 6 Jan 2002 22:01:37 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14594

அன்புச் சகோதரா,

தாயுள்ளம் வேறென்ன சொல்லும்? பாலைவனத்துக் குரலாக ஒலிக்கும் உங்கள் குரலில்தான் எத்தனை ஏக்கம். எல்லாம் வல்ல இறைவன் தங்கள் தாயாருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் அளிப்பானாக. அடுத்தவருக்கு ஒரு துயர் என்றால் பிரார்த்தனையில் ஈடுபடும் உங்களைப் போன்ற நல்ல இதயங்களுக்கு ஒரு குறையும் நேராது ஆண்டவன் காப்பான். நான் அனுபவித்ததல்லவா அது?

நாம் சந்திக்க முடியாமல் போனது வருத்தமே. இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தால்யாரோ பாபுவாமே என்று... கிடந்து குழம்பிக் கொண்டிருந்தேன். அடுத்த விடுமுறையில் வருவீர்கள். நல்ல நிம்மதியான மன நிலையில் இருப்பீர்கள். நாம் சந்திப்போம். தங்கள் தாயார் பூரண குணமடைய பிரார்த்தனையுடனும்,

அன்புடனும்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: "Shaboo"
To: ;
Cc: ;
Sent: Sunday, January 06, 2002 4:25 PM
Subject: [tamil] Back to Dubai...


மனதைக் கல்லாக்கிக் கொண்டு இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு துபாய் போய்வருகிறேன்
| என்றபோது அந்த அன்பு உள்ளம் சலாமத்தாக ( செளக்கியமாக ) போயிட்டு
| வா என்றதையே வேத வாக்காக எடுததுக் கொண்டும் மனதைக் கல்லாக்கிக்
| கொண்டும் சனவரி முதல் தேதி வைகறையில் சென்னைக்கு கிளம்பி
| விட்டேன்.
| | =====
| அன்புடன்
|
| சாபு
|