From harikris@... Mon Jan 07 06:50:00 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 7 Jan 2002 14:49:57 -0000
Received: (qmail 13278 invoked from network); 7 Jan 2002 14:49:57 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 7 Jan 2002 14:49:57 -0000
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (202.144.76.19) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 7 Jan 2002 14:49:43 -0000
Received: (qmail 15039 invoked from network); 7 Jan 2002 20:08:33 +0530
Received: from unknown (HELO harikris) (210.214.131.72) by 202.144.76.19 with SMTP; 7 Jan 2002 20:08:33 +0530
Message-ID: <00ba01c1978a$a78e81e0$b3f0c7cb@...>
To:
References: <20020107131556.5201.qmail@...>
Subject: Re: [agathiyar] About Bharathiyar
Date: Mon, 7 Jan 2002 20:18:38 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14605

அன்புள்ள சாபு,

(இதென்ன திருவெல்லாம் போட்டு? அந்த நிலையைக் கடந்துவிட்டதாக அல்லவா எண்ணிக் கொண்டிருக்கிறேன்? :-))

தினமணியைப் பார்க்கவில்லை. என்ன வரிகள் என்று சொல்லுங்கள். அந்த வரிகள்மூலம் எந்தக் கட்டுரை என்று தெரிந்து கொள்ளலாம். கட்டுரை உடனடியாகத் தேவை என்றால் மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

பாரதி இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர் பற்றி சொல்லியிருப்பதைப் படிக்க வேண்டுமானால், முக்கியமான கட்டுரைகள் - (இந்தியா பத்திரிக்கையில் வெளிவந்தவை.)

சிவாஜி மகோத்சவத்தால் நாம் அறிவது என்ன? (23.6.1906)
நமது மகமதிய சகோதரர்கள் (23.6.1906)
நீரோ சக்ரவர்த்தி கல்லறை மீது ஒரு புஷ்பம் (11.8.1906)
வேலூர் மகமதிய கான்பரன்ஸ் (11.8.1906)
ஹிந்து மகமதியர்களின் கூட்டு விருந்து (22.9.1906)
சுல்தான் ஆகாகான் (6.10.1906)
மகமதிய பிரதிநிதிக் கூட்டம் (6.10.1906)
ஒரு கண்டனை (6.10.1906)
மகமதிய "ராஜபக்த சிகாமணி"களுக்கு ஒரு வார்த்தை" (13.10.1906)

இவற்றைத் தவிர பாரதி கட்டுரைத் தொகுப்பில்

இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை
ரெயில்வே ஸ்தானம்
முகம்மதிய ஸ்திரிகளின் நிலைமை

கவிதைகளில் சத்திரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது என்ற கவிதையின் முன்னுரை.

சிறுகதைகளில் துளசிபாயீ என்ற சிறுகதை. ரஜபுதனத்து மங்கையை 'சதி'யில் இருந்து காப்பாற்றி மணம்புரிந்துகொள்ளும் முகமதிய வீரனைப் பற்றியது. பாரதி, பெண்களுக்காக நடத்திய சக்ரவர்த்தினி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது.

உடனடியாக நினைவுக்கு வந்ததைச் சொன்னேன். மற்ற கட்டுரைகளில் ஆங்காங்கே பல செய்திகள் கிடைக்கின்றன. இஸ்லாத்தைப் போற்றியிருக்கிறார். மகமதியர்களைப் போற்றியுமிருக்கிறார். கண்டித்துமிருக்கிறார். பாரதியின் துலாக்கோல் மிகவும் நேர்மையானது. கடந்த ஆண்டு மன்ற மையத்தில் What did Bharati mean என்ற தலைப்பில் "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்" என்ற அடிக்கு, மசூதிகளை இடித்துக் கோவில் கட்டுவோம் என்ற மாதிரி விளக்கம் கொடுத்து நடந்த வாதங்களில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன். அந்தத் தொகுப்பு என்னிடம் இருக்கிறது. தேவைப்படுமானால் அனுப்பி வைக்கிறேன்.

கட்டுரைத் தொகுப்பு எல்லா இடங்களிலும்கிடைக்கிறது. இந்தியா கட்டுரைகள் "பாரதி தரிசனம்" என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. நான் முதல் தொகுதி மட்டும் வைத்திருக்கிறேன். NCBH வெளியீடு. இரண்டாம் தொகுதியைக் கடந்த பத்தாண்டுகளாக, அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். ம்.... மசிய மாட்டேன் என்கிறார்கள். வேண்டுமென்றே எப்போது அந்தப் பக்கம் போனாலும் கேட்பேன். தேவை அதிகமிருக்கிறது என்று நினைத்துக் கொள்ளட்டுமே! அப்போதாவது அடுத்த பதிப்பு போடுகிறார்களாபார்ப்போமே! சீனி. விசுவநாதன் பாரதி எழுத்துக்களை - கவிதை, கதைஇ, கட்டுரை எல்லாம் கலந்து - காலவாரியாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 1906வரை எழுதியவைதான் இதுவரை வந்திருக்கிறது. 1908 முதல் பாரதியின் இந்தியாகட்டுரைகள் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன். பாரதி பாண்டிச்சேரி சென்றது பற்றி நடந்து கொண்டிருக்கும் அவதூறை முறியடிக்கத் தேவைப் படுகிறது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! (அவை இல்லாமலும் உண்மையை நிறுவ முடியுமென்றாலும் நேரடி ஆதாரத்தைப் போல ஆகாது.)

பாரதி தரிசனம் முதல் தொகுதியின் கடைசிச் சில பிரதிகளை NCBHல் பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்தாறு ஆண்டுகளாக அவற்றைப் புத்தகக் கண்காட்சியில் பார்க்கிறேன். அதே பிரதிகள் என்று நினைக்கிறேன். இந்த முறை போகும் போது ஒவ்வொரு பிரதியிலும் ஏதாவது ரகசியக்குறி போட்டுவிட்டு அடுத்த புத்தகக் காட்சியில் பார்க்க வேண்டும். ;-)

உங்களுக்கு நூல் தேவைப் பட்டால் சொல்லுங்கள். பாரதி நூலை வாங்குவதற்கு உதவுவதைக் காட்டிலும் என்ன பெரிய வேலை?

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: "Shaboo"
To:
Sent: Monday, January 07, 2002 6:45 PM
Subject: [agathiyar] About Bharathiyar


|
| அன்பின் திரு. அரிகிருட்டிணன்,
|
| தினமணி நாளேடு வெளியிட்டுள்ள "ஈகைப் பெருநாள் மலர்" பார்த்தீர்களா ?
| இதில் "இஸ்லாம் இவர்கள் பார்வையில்" என்ற பகுதியில் பாரதியார்
| இஸ்லாத்தை பற்றி எழுதியிருந்ததில் பத்து வரியை வெளியிட்டுள்ளர்கள்.
| முழுக் கட்டுரையையும் படிக்க ஆவல். பாரதியார் கவிதைகள் அல்லாத மற்ற
| நுல்கள் எங்கே கிடைக்கும் ?
|
| =====
| அன்புடன்
|
| சாபு