From ramaninaidu@... Mon Jan 07 07:42:39 2002
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 7 Jan 2002 15:42:39 -0000
Received: (qmail 54680 invoked from network); 7 Jan 2002 15:42:27 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 7 Jan 2002 15:42:27 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 7 Jan 2002 15:42:27 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.212) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 7 Jan 2002 15:42:00 -0000
Message-ID: <001601c19791$e81ab100$d4eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruppavai 24 tamil
Date: Mon, 7 Jan 2002 20:57:00 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14606
திருப்பாவை - நாள் இருபத்து நான்கு - பாடல் இருபத்து நான்கு
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்.
இருபத்து மூன்றாம் பாடல் இறைவனை சீரிய சிங்காதனத்தில் இருந்து தாம் உடலெடுத்து வந்ததற்குக் காரணமான
கர்மவினையை நீக்குமாறு பாவைப் பெண்டிர் வேண்டிக் கொள்வதாக அமைந்தது. தம் சீர்மை அனத்தும் தோன்ற
சிங்காதனம் சேர்ந்த இறைவனை வாழ்த்துவதாக இருபத்து நான்காவது பாடல் அமைகிறது. மிகப்
பொருத்தமாகவே இப்பாடல் இறைவனது மேன்மை வெளிப்பட்ட அவதாரச் செயல்களைப் போற்றிக்
கொண்டாடுகிறது.
முதலடியில் வாமன அவதாரம் குறிக்கப்படுகிறது. மஹாபலி முவ்வுலகையும் தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்து
ஆண்ட காலம் தேவர்கள் அவனுடைய கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனிடம் சென்று முறையிட்டார்கள்.
என்னதான் கொடூரமானவன் என்றாலும் வள்ளல்தன்மையில் சிறந்து விளங்கியவன் மஹாபலி. குறளனாக ஒரு
பிராம்மண வடிவத்தில் இறைவன் அவனை அணுகியபோது தானமாக என்ன வேண்டுமென்று கேட்க மூன்று அடிகளால்
அளக்குமளவுக்கு மண் வேண்டும் என்று இவர் கேட்டார். சம்பிரதாயமாகத் தாரை வார்த்துத் தானமாக மூன்றடி மண்ணை
அவன் வழங்க இறைவன் விண்ணுக்கும் மண்ணுக்குமான வளர்ந்து மண்ணை ஓர் அடியாலும் விண்ணை ஓர் அடியாலும்
அளந்துவிட்டு மூன்றாவது அடிவைக்க இடமில்லாமையால் அவன் தலைமீது வைத்து அவனைச் சம்ஹாரம் செய்ததாகச்
சொல்வது வாமன அவதாரக் கதையாகும்.
இரண்டாவதாக ராவணனை அழித்த கதை பேசப்பட்டுள்ளது. இதில் சென்றங்கு என்ற வார்த்தை சிறப்பாகத்
தெரிகிறது. வடக்கே இருக்கும் அயோத்தியில் இருந்து ராமன் தெற்கே இருக்கும் இலங்கை போய் ராவணனை
அழிக்கவென்றே போல் பல நிகழ்ச்சிகளும் ராமகாதையில் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. எனவேதான்
சென்று என்ற வார்த்தையை ஆண்டாள் நாச்சியார் பயன்படுத்துகிறார் என்க. ராமாயணத்தில் ராமன் பாத்திரம்
எல்லா வகையிலும் மானுடப் பாத்திரமாக அமைந்திருந்தும் மானுடருக்கே உரித்தான குறைகள்
ஏதும் இல்லாமல் இருத்தலைக் காணவேண்டியிருக்கிறது. லட்சிய மானுட வாழ்வுக்கு ஓர் இலக்கணமாகவே
ராமாவதாரம் அமைந்திருக்கிறது என்று கொள்ள வேண்டும்.
மூன்று, நான்கு, ஐந்தாவது வரிகள் கிருஷ்ணாவதாரச் சிறப்பைக் கொண்டாடுகின்றன.
கிருஷ்ணாவதாரமே இறைவனின் அவதாரங்கள் அனைத்திலும் பல வகைதொகைகளில் சிறப்பான இறை
வெளிப்பாடாக அமைகிறது. அதனாலேயே மிகப் பிரியத்துக்குரியதாகவும் மேன்மையுடையதாகவும் வீரத்தின்
வெளிப்பாடாகவும் அமைந்துவிட்டது. மூன்றாவது நான்காவது வரிகளில் கம்சன் அனுப்பிய அசுரரைக் கண்ணன்
சிறுவனாக இருந்து அழித்தமை கொண்டாடப்படுகிறது. சகடாசுரனைக் கொல்ல வண்டியை உதைத்துத் தள்ளியதும்
எருமைக் கன்றைப் பிடித்து எறிந்து கொன்றதும் கொண்டாடப்படுகின்றன.
அடுத்தது மிகவும் சுவாரசியமான கதை பாற்பட்டது. ஆயர்கள் இந்திர விழாவெடுக்கும் வழக்கத்தைக்
கொண்டிருந்தனர். அப்படித் தனக்கு வழக்கமாக விழாவெடுத்துக் கொண்டாடாமல் போன ஆயர்களைத்
தண்டிக்க இந்திரன் வருணனைக் கொண்டு கோகுலத்தில் மிகுமழை பொய்விக்க எங்கும் வெள்ளக்காடாயிற்று.
ஆயர்கள் கண்ணனிடம் சென்று சரணடைய கண்ணன் ஒரு மலையை எடுத்துக் குடையாய்ப் பிடிக்க ஆயர்கள் அனைவரும்
அதற்கடியில் நின்று தப்பித்தனராம். இதைக் குறிக்கவே குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்கிறார்.
இங்கு அவதாரங்களைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். மொத்தம் பத்து அவதாரங்கள். அதில் பத்தாவது
அவதாரமாகிய கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் நிகழப் போவதாக நம்பிக்கை. முந்தைய ஒன்பது
அவதாரங்களைப் பார்க்கும் போது பரிணாம தத்துவத்துக்கு ஒரு விளக்கம் கிடைப்பதைப் போல இருக்கிறது. முதல்
மூன்று அவதாரங்கள் மிருக வடிவில் இருக்க அடுத்த அவதாரம் பாதி மிருகமும் பாதி மனிதனுமாக இருக்க அடுத்த
ஐந்து அவதாரங்களும் மனித வடிவில் இருப்பதைப் பார்க்க வேண்டும். பத்தாவது அவதாரம் பற்றிய நம்பிக்கையோ
மனிதத்துவத்தைத் தாண்டிய கல்கி அவதாரம் பாற்பட்டதாக இருககிறது.
முதல் அவதாரம் நீரில் இருக்கும் மச்ச அவதாரம். இரண்டாவது நீரிலும் நிலத்திலும் இருக்கும் கூர்ம அவதாரம்.
மூன்றாவது அவதாரம் நிலத்தில் இருக்கும் வராக அவதாரம். நான்காவது அவதாரம் நரசிம்மாவதாரம்.
அடுத்ததாக வாமனனாக குறள் வடிவில் மனித அவதாரம். இந்த ஐந்து அவதாரங்களும் ஒரு குறிப்பிட்ட
காரியத்துக்காக அவ்வப்போது தோன்றி வருவதாக அமைந்தவை. ஆறாவதாகத் தோன்றிய பலராமர் உழவுத்
தொழிலைக் குறிக்கும் நேமியைக் கைக்கொண்டிருக்க அடுத்த பரசுராமர் சத்திரியராக அமைகிறார். உழவுத்
தொழிலிலிருந்து மானுடம் சமூகமும் அதைச் சார்ந்த அரசியலுக்குமாக வளர்ந்ததற்கு ஒரு குறியீடாக இதைக்
காணலாமோ?
பிறகு ராமனாக மானுட லட்சியம் எதுவாக அமையும் எனக் காட்டினார். லட்சிய புருடனான ராமனிலிருந்து
காரிய மேன்மை கொண்ட கிருஷ்ணாவதாரம். பல விதங்களிலும் அதர்மத்தை அழிக்க வேண்டிய காரிய
புருடராகவே கண்ணன் இருந்திருக்கிறார். கடைசியாகப் பாரதப் போரில் ஆயுதம் எதுவும் ஏந்தாமல் போரில்
பங்கு கொண்ட விந்தையையும் காண்கிறோம். பாரதப் போரில் அவருக்கு ஒரு பங்குண்டு என்றாலும் எந்தப் பக்கமும்
சாராதவர் அல்லவா?
இவ்வாறாக ராமனும் கிருஷ்ணனும் வாழ்வியலின் இருவகைக் குறியீடுகளாக அமைகின்றனர் என்று கொள்ளலாமோ?
எனவே கடைசி இரண்டு அவதாரங்களான மானுட லட்சியமும் மானுட வாழ்வியலுமாக நாராயணர் ராமனாகவும்
கண்ணனாகவும் அதிகம் கொண்டாடப்படுவது வியப்பளிக்கவில்லைதான். அறிவியலும் தொழில் நுட்பமும் போகும்
வேகத்தைப் பார்த்தால் அடுத்த அவதாரமாகிய கல்கி அவதாரம் ஒரு ஹை-டெக் அவதாரமாக வானூர்தி ஏறி
லேசர் ஆயுதங்களோடு வந்தாலும் வரலாம். மானுட சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு ஏற்ப அவதார
வடிவங்கள் உருவமும் காரியமும் வல்லமையும் பெற்று வந்திருப்பதைக் காணும்போது மேற்கண்ட கூற்று போகிற
போக்கில் சொல்லப்பட்ட கூற்றாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லையோ என்றுதான் படுகிறது.
இருபத்து நான்காவது பாடல் இறைவனைப் போற்றிப் பாடுவது மட்டுமல்லாமல் பக்திக்கான கடப்பாட்டைப் பறை
சாற்றுவதாகவும் அமைந்திருக்கிறது. என்றென்றும் என்ற வார்த்தையோடு எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
என்பதை இணைத்துப் பாருங்கள். எனவே இறைஉணர்வு தவிர வேறு எந்த உணர்வு வந்தாலும் அதை மாற்றி இறை
உணர்வாக மாற்ற வேண்டும் என்பது (மற்றை நம் காமங்கள் மாற்றேலோர்) அந்தப் பாடலின்
வேண்டுகோளாகிறது. இந்தப் பாடலில் நோன்புக்கான பரிசிலாக (பறை) இறை அருளைப் பெற
வந்திருக்கிறோம் என்கிறார்கள்.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com