From ramaninaidu@... Mon Jan 07 07:44:19 2002
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 7 Jan 2002 15:44:19 -0000
Received: (qmail 58529 invoked from network); 7 Jan 2002 15:44:19 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 7 Jan 2002 15:44:19 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 7 Jan 2002 15:44:19 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.212) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 7 Jan 2002 15:44:01 -0000
Message-ID: <001801c19792$2f8131e0$d4eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruppalliyelucci 4 tamil
Date: Mon, 7 Jan 2002 21:00:14 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14608

நாள் இருபத்து நான்கு - திருப்பள்ளியெழுச்சி - பாடல் நான்கு

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆட்கொண்டு இன்னருள்புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

திருப்பள்ளியெழுச்சியின் நான்காவது பாடல் பலவகையிலும் சிறப்புடைய ஒரு பாடலாகும்.

பார்னபாஸ் என்பவன் ஒரு கழைக் கூத்தாடி. ஊர்ஊராகப் போய் வித்தை காட்டி வயிற்றைக் கழுவிக்
கொண்டிருந்தவன். மழையடித்தாலோ பனி பெய்தாலோ வயிற்றுக்கு ஈரத்துணிதான். இப்படி இருக்க வயது
ஏறாமலா இருக்கும்? வயது ஏற ஏற பார்னபாஸுக்கு விரக்தி பொங்க தன் ஈடேற்றத்துக்கு ஏதாவது செய்ய
வேண்டுமே என்ற கவலை வந்து சேர்ந்தது. ஒரு பாதிரியாராகிவிட்டான்.
அவனோடு இருந்த பாதிரியார்களில் ஒவ்வொருவரும் ஒரு வகையில் சிறப்புப் பெற்றவர்கள். ஒருவர்
பிரமாதமாக கடவுளர் காட்சிகளை ஓவியமாக வரைவார். இன்னொருவர் அம்சமாகச் சிலைகள்
வடிப்பார். இன்னொருவர் தத்துவ விசாரத்தில் தலை சிறந்தவர். இன்னொருவர் அருமையாகப் பாட்டுப்
பாடுவார். இப்படியாக தம் பக்தியை வெளிப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒருவகையில் திறன் இருக்க
பார்னபாஸுக்கோ எந்த வகையிலும் தன் பக்தியை வெளிப்படுத்த முடியவில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவனால் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை வந்து சேர்ந்தது. ஒரு நாள்
யாரும் இல்லாத போது அன்னை மேரியின் சிலை முன்பு போய் நின்றான். தன் கழைக் கூத்தை அவள்
முன்னிலையில் ஆட ஆரம்பித்தான். முன்னெப்போதையும் விட மிகப் பிரமாதமாகத் தன் ஆட்டத்தை ஆடினான்.

வயதாகிவிட்டதல்லவா? ஆடியவன் நெற்றியில் வியர்வை சொட்டியது. அதற்குள் அங்கே வந்து சேர்ந்த பிற
பாதிரியார்கள் இவனுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆடி முடித்தவன்
நெற்றியில் வியர்வை சொட்டச் சொட்ட நிற்க அன்னை மேரி இறங்கி வந்து அவன் நெற்றி வியர்வையைத்
துடைத்துவிடப் பிற பாதிரியார்கள் அவனுடைய பக்தியின் அருமையை உணர்ந்தார்கள்.
இது ஒரு கதை.
இன்னுமொரு நிகழ்ச்சி. ஜான் மில்டன் என்பவர் ஆங்கிலக் கவிஞர். இழந்த சொர்க்கம், மீண்ட சொர்க்கம்
போன்ற காவியங்ளை இயற்றியவர். அவருக்கு நாற்பது வயதானபோது கண்பார்வையை இழந்துவிட்டார். அப்போது
தன் பார்வை இழந்ததைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். On His Blindness என்பது தலைப்பு.
அதில் இறைவனைப் பாடுகிறவர் பாட, இறைவனை நினைத்து ஆடுகிறவர் ஆட, இறைவனுக்குப் பிரார்த்தனைகள்
செலுத்துகிறவர் செலுத்த, இறைவனுக்குப் பாடல் எழுதுகிறவர் எழுத, தனக்குத் தெரிந்த ஒரே வழியான கவிதை
எழுதுவதற்குத் தன்னால் இயலாமல் போய்விட்டதே என்று வருந்துகிறார். கடைசியில் ஒன்றும் செய்யாமல்
வெறுமனே இருப்பவர்கள் கூட ஒரு வகையில் இறைமையை வாழ்கிறவர்கள்தான், இறைவனைத் துதிக்கிறவர்கள்தான்
என்று முடிக்கிறார்.
ரமணி எழுதிய ஒரு கவிதை.

அச்சின் ஆதுரம்

சூன்யத்தில் சூன்யமாகி
சூன்யத்தின் இயக்கமுமாகி
நிற்பவனின் விநோதத்தில்
எண்ணம் சுழல்கிறது.
தணுகரண புவனபோகச் சுழற்சியில்
கறங்கின் கையாய்ச் சுழலும் உனக்கு
அச்சாகி நிற்பவனின் ஆதுரத்தை
மனத்தே நிறுத்து.
சும்மாயிருக்கும் முயல்வையும்
சும்மாயிருக்கச் செய்யும்
நிச்சலனம் பெறுவாய்.

இப்படியாக தம் பக்தியைப் பலரும் பலவகைகளிலும் வெளிப்படுத்த முடியும்போது எந்த வெளிப்பாடும் இல்லாத
பக்தியை நெஞ்சில் தேக்கி வைத்திருப்பவர் பாடலாக இந்தத் திருப்பள்ளியெழுச்சியைப் பாருங்கள்.
வீணையில் இன்னிசை எழுப்புகிறவர். யாழை மீட்டுகிறவர். ரிக் வேதத்தை ஓதுகிறவர். தோத்திரங்கள்
பாடுகிறவர். மலர் தொடுத்துச் சூட்டுகிறவர். தலைமேல் கை கூப்பி வணங்குகிறவர். இறைவனை எண்ணிக் கசிந்து
கண்ணீர் விடுகிறவர். இத்தகையோர் மத்தியில் செய்வதற்கு எதுவும் தெரியாத என்னையும்
ஆட்கொள்கிறவன் இறைவன் என்கிறார் இந்தப் பாடலில். அத்தகைய பெருமானைத் துயிலெழுமாறு
வேண்டுவது இப்பாடல்.

திருப்பாவைக்கு விளக்கம் எழுதியபோது பக்தர் தம்மை நாயேன் என்றும் கடையேன் என்றும் பாவியேன் என்றும்
ஒன்றும் அறியேன் என்றும் கூறிக் கொள்வதைப் பற்றிப் பேசும் போது

நாயேன் என்று தன்னை அழைத்துக் கொள்வது எங்ஙணம்? பிறிதோர் இடத்தில் நான் எழுதியிருந்தது கவனத்துக்கு
வருகிறது. It is the most notorious on the part of the most virtuous to
consider themselves the most vicious. இறைக் கருணை வேண்டிப் பிரார்த்திக்கும் போது
நம்மாழ்வாரைப் போன்ற பாவத்தின் வாசனை கூடத் தம்மேல் படாதவர்கள் தம்மை இப்படி நிந்தித்துக்
கொள்வதேன் என்பதைப் பற்றி எழுதும்போதே அப்படி எழுதியிருந்தேன். இதை விளக்க, செய்த அல்லது செய்யத்
தவறிய காரியங்கள் பாற்பட்ட பாவங்களன்று இவர்கள் குறிப்பது. அடிப்படையில் மனிதனாகப் பிறந்ததற்கு
ஏதுவாகிப் போன பாவத்தைக் குறித்தே இப்படிப் பேசுகிறார்கள் என்றேன். அதாவது ஆங்கிலத்தில் Mans
present is the sum of the accumulated merit and sins of mankind and it is
the elemental sin of Man that these people ascribe to themselves என்று
எழுதியிருந்தேன். இப்பாடலில் பாவைக் கன்னி சொல்வதும் அப்படிப்பட்ட அடிப்படைப் பாவ பீடிப்பே அன்றி
அவள் அறிந்து செய்த அல்லது செய்யத் தவறிய காரியங்களின் பாற்பட்ட பாவம் அன்று என்பதைத் தெளிவாகக்
கருத்தில் கொள்ள வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தேன். அப்படியே கடவுளின் கருணை எத்தன்மைத்து என்பதை
விளக்க நான் முன்பு ஆங்கிலத்தில் எழுதியதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
Theologically grace is a free personal bestowal of unmerited favour upon man
by God. Phenomenologically it is a strength from beyond oneself, an
unexpected gift, a reneweal of spirit and response of deep gratitude. It is
a powerful guard against degeneration during desolation. Something from
beyond keeps one going. Also strength is provided against specific
temptations and evils. Patience and love are instilled by grace and the
sustenance of the individual against the evil and despair is looked at not
as an indication of self heroism but as a manifestation of the divine
action. Grace again teaches man to find purposes at work even in ones
suffering. One such purpose which is immediate is the acquisition of the
ability to discover God afresh or in a deeper way. Grace works through
sufferings and privations to scourge the barriers of guilt and
hardheartedness, bringing patience and other virtues, turning man away from
passing frivolities to lasting goods, hammering out the true self to become
a return presentation to God. If these are the inward impacts of the divine
purpose, the outward accomplishment is Gods will in man, such a will being
love and most worthy of being accomplished. Such a prospective of divine
purpose offers a totally altered perspective of man, of himself, his mission
in life, his vocation, so much so, any worthy vocation can be a vehicle for
the grace of divine calling...... Grace also contributes to a growth in
spiritual sanctification. A deepening awareness of Gods presence and
steadfastness in spite of trials, tribulations, discouragements and setbacks
makes life more meaningful in that God with His grace is patient in spite of
our indifference, merciful in spite of our follies. ... He becomes the
sustenance of the whole natural order. He reaches out to us in the depths of
oceanic darkness.

இப்படி உயிர்களின் இயல்பையும் இறைவனின் கருணையையும் பொருத்திப் பார்க்கும் போது
திருப்பள்ளியெழுச்சியின் நான்காவது பாடலின் ஈற்றடிக்கு முதலடியான என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள்
புரியும் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com