From ramnrom@... Mon Jan 07 11:36:10 2002
Return-Path: X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 7 Jan 2002 19:36:10 -0000
Received: (qmail 41930 invoked from network); 7 Jan 2002 19:36:10 -0000
Received: from unknown (216.115.97.167) by m2.grp.snv.yahoo.com with QMQP; 7 Jan 2002 19:36:10 -0000
Received: from unknown (HELO web14203.mail.yahoo.com) (216.136.172.145) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 7 Jan 2002 19:36:10 -0000
Message-ID: <20020107193610.70323.qmail@...>
Received: from [4.35.187.102] by web14203.mail.yahoo.com via HTTP; Mon, 07 Jan 2002 11:36:10 PST
Date: Mon, 7 Jan 2002 11:36:10 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Annaamalai Kiri valam
To: agathiyar@yahoogroups.com, tamil-ulagam@yahoogroups.com, tamil@...
In-Reply-To: <3.0.6.32.20020107070831.0080d8c0@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Message-Num: 14619
திருவண்ணாமலையயே ஒரு முறை சுற்றி வந்த அனுபவம் கிடைக்கிறது. நன்றி.
துரதிர்ஷ்டவசமாக நம் புனிதத் தலங்கள் வியாபாரத் தலங்களாகக்
கொச்சைப்படுத்தப்படுவது வேதனைக்குரியது. ஸ்ரீரங்கத்தில் iந்த அநியாயத்தை
நான் முழுவதுமாக உணர்ந்தேன். அத்தனை கோபுர வாயில்களிலும்,
நடைபாதைகளிலும் கடைகள், ஸ்வாமி சன்னிதி வரையிலும் அனுமதிக்கப்படும்
வாகனப் போக்குவரத்து. புராதனமான சிற்பங்களின் அழகையெல்லாம்
மறைத்துக்கொண்டு விளம்பரங்கள், பேனர்கள்.அந்த மண்டபங்களிலேயே சகலமும்
செய்யும் வரைமுறையில்லாத ஜனங்கள்... கண்ணில் ரத்தம் வரவழைக்கும்
கொடுமை.
iந்த வார ஜூனியர் விகடனிலும் கிரிவலப்பாதையில் லாட்டரிச் சீட்டு
விற்பவர்கள் படுத்தும் பாடு பற்றி விபரமாக எழுதியிருக்கிறார்கள். எங்கே
கோபத்தையெல்லாம் விட்டு விட்டுக் கொஞ்சமாவது ஆத்ம தரிசனம் செய்து
அமைதி பெற ஆசைப்படுகிறோமோ அங்கே iப்படி அடுக்கடுக்கான சோதனைகள்.
'அதையும் தாண்டு பார்ப்போம்' என்று அருணாசலத்தாரே raising the bar
on devotees!?
சில அடிப்படையான சந்தேகங்களையும் கேட்டு விடுகிறேன். தடங்கலில்லாமல்
கிரிவலத்தைத் தொடர்ந்து கொண்டே முடிகின்றபோது பதில் தந்தால் போதும்-
மற்ற பஞ்ச பூதத் திருத்தலங்கள் எங்கெங்கே? திருவண்ணா 'மலை'யில்
அபூர்வமான மூலிகைக் காடுகள் iருப்பதாகவும் அந்தக் காற்று பட்டாலே பல
நோய்நொடிகள் குணமாகுமென்றும் சொல்கிறார்களே, அது பற்றி ஏதேனும்
சொல்ல முடியுமா? கிரிவலம் வரும் வழக்கம் எப்போதிலிருந்து ஆரம்பித்த
பழக்கம்? பௌர்ணமி iரவுகளில் அங்கே தங்குவது iளையராஜா போன்ற
சினிமாப் பிரபலங்கள் சமீபத்திய காலங்களிலேற்படுத்தி விட்ட வழக்கமா?
(எம்.ஜி.ஆர் காலத்தில் மூகாம்பிகை வழிபாடு திடீரென்று பிரபலமாக ஆனது
போலவோ?)
அன்புடன்
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
--- Krishnan/ கிருஷ்ணா wrote:
>
>
> கிரிவலம் என்றால் திருவண்ணாமலை. திருவண்ணாமலை என்றால் கிரிவலம்
> என்ற அளவுக்கு இன்று புகழ் பெற்றிருப்பது திருவண்ணாமலை.
> ''ஸ்மரணாத் அருணாச்சலம்'' .... நினைத்தலே முத்தி தரும் என்று
> சொல்லபட்ட
> பஞ்ச பூதங்களில் ''தேயு''த்திருத்தலம் திருவண்ணாமலையாகும்.
>
>
> சுமார் எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் நான் முதல் திருவண்ணாமலை கிரிவலம்
> வந்தபோது
> அதிகாலை இரண்டு மணி. இப்போதோ அப்போதோ எப்போதோ அணைந்து
> விட நேரம்
> பார்க்கும் தெரு விளக்கு. அதுவும் இங்கொன்று, அங்கொன்று கண் சிமிட்டிய
> வண்ணம்...
>
> திருவண்ணாமலை கிரிவலம் பிரபலம் அடைந்தது ''அருணாச்சலம்''
> திரைப்படத்திற்குப்
> பின்தான் எனலாம். இந்த படவெற்றிக்குப் பின் ரஜனி கிரிவலம் சுற்றிப்
> பாதையில்
> நள்ளிரவிலும் நல்ல ஒளி உமிழும் மின்சார விளக்கு,செப்பனிட்ட புதிய
> தார் போட்ட சாலை.
>
> மேலும் பலர் சொல்லியும், கிரிவலம் செய்து நன்மையடைந்த பக்தர்கள்தான்.
> ஒவ்வொரு
> பவுர்ணமிக்கும் கிரிவலத்துக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது.
> குறையவில்லை.
> பல ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்து, சிறுவகை மோட்டார்
> வண்டிகள்.[டெம்போ]
> டிராக்டர், வாடகை வண்டிகள் மூலம் மக்கள் வந்து கூடுகிறார்கள்.
> [சுமார் 5, 6 இலட்சம் மக்கள் கூடுகிறார்கள்.]
>
> பக்தி வளர்ந்த அளவுக்கு மக்கள் மனம் பக்குவம் அடையவில்லை எனலாம்.
> கிரிவலம் சுமார் 14 கி.மை. சுற்றளவு. இந்த 14 மைல் சுற்றி அளவு
> சாலை
> இருபுறமும் பலவித அங்காடி கடைகள். சாப்பாடு கடைகள்.
> மக்கள் ஏதோ உல்லாச பிரயாணம் போல்... பிக்கினிக்கு செல்வது போல்
> வெட்டி பேச்சு... வெட்டிக் கதைகள் பேசி, ஆணும்-பெண்ணும் அச்சமின்றி
> சப்தமிட்டு சிரிப்பது... ஆளை இடித்துக் கொண்டு செல்வது...
> நமக்கிருக்கும் ஆன்மீக எண்ணத்தினை, உணர்வை சிதற செய்துவிடுகிறது.
> இதனையும் மீறி சென்றுவிடும் கில்லாடிகளும் உண்டு.
>
> கிரி வலம் தொடரும்....
>
> ----------------------------------------------
> எண்ணிய முடிதல் வேண்டும்
> நல்லவே எண்ணல் வேண்டும்
> திண்ணிய நெஞ்சம் வேண்டும்
> தெளிந்த நல்லறிவு வேண்டும்
> பண்ணிய பாவ மெல்லாம்
> பரிதிமுன் பனியே போலே
> நண்ணிய நின் முனிங்கு
> நசித்திடல் வேண்டும் மன்னாய்...!
> -- பாரதி --
> ---------------------------------------------
> for your book mark:-
> http://www.geocities.com/singaikrish/
>
__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/