From kisna@... Mon Jan 07 15:48:06 2002
Return-Path:
X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 7 Jan 2002 23:48:06 -0000
Received: (qmail 17400 invoked from network); 7 Jan 2002 23:48:06 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 7 Jan 2002 23:48:06 -0000
Received: from unknown (HELO sombre.pacific.net.sg) (203.120.90.146) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 7 Jan 2002 23:48:06 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by sombre.pacific.net.sg with ESMTP id g07NlZK23499; Tue, 8 Jan 2002 07:47:35 +0800
Received: from kisna (cm75.beta45.singa.pore.net [218.186.45.75]) by smtp1.pacific.net.sg with SMTP id g07NlZf20971; Tue, 8 Jan 2002 07:47:35 +0800
Message-Id: <3.0.6.32.20020108074144.007c8810@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 08 Jan 2002 07:41:44 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Subject: Annaamalai Kiri Valam
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan/ கிருஷ்ணா
X-Yahoo-Group-Post: member; u=21549133
X-Yahoo-Message-Num: 14621

கிரிவலத்தின் மகிமைகள்
===================

நெருப்பு மலையாக, அக்னிதலமாக விளங்குவது திருவண்ணாமலை.
கிரிவலம் செல்லும் கோவில்களில் தமிழ்நாட்டில் முதலிடமாக விளங்குவது திருவண்ணாமலை.

ஈசன் முடியையும்,அடியையும் காண முடியாத பிரம்மா,விஷ்ணு ஆகியோருக்கு
ஜோதி வடிவில் மலை ரூபத்தில் காட்சி அளித்தவர் இறைவன்.

ஊழ்வினை நீக்கி மக்களை பாதுகாக்கும்தலமாக விளங்குவது திருவண்ணாமலை தளம்.

பவுணமி நாளில் இரவில் அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம்
சென்றால் ஊழ்வினை நீங்கிவிடும்.

* ஞாயிற்றுகிழமை மலை சுற்றினால் சிவபதம்.
* திங்கட்கிழமை உலகை ஆளும் வல்லமை கிடைக்கும்.
* செவ்வாய்க்கிழமை - ஏழ்மைத் தொல்லை நீங்கி கடன் விலகும்
பிறவிப் பிணியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
* புதன்கிழமை வலம் வந்தால்,கலைகளில்தேர்ச்சி.
* வியாழக்கிழமையில் வலம் வந்தால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையைப் பெறலாம்.
* வெள்ளிகிழமை வலம் வந்தால் விஷ்ணு பதம்.
* சனிக்கிழமை வலன் வந்தால், நவகிரங்ககளை வழிபட்டதற்கான பலன் கிடைக்கும்.

மலை வலம் சுற்றும்போது சிவனில் சிவந்த ஜோதிக்கதிர்கள் மலையில் இருந்துவெளிப்பட்டு
நம் மீது படிவதால் நமது கர்மவினைகள் அழிகிறது.

பவுர்ணமி நாளில் இரவில் மலை சுற்றுவது சிறப்பு. பகலிலும் வலம் வரலாம்.
எந்த நாளும் இறைவனுக்கு சிறப்புத்தான்.

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை நட்சத்திரத்தில் மலையில் ஜோதி
தரிசனத்தை வணங்கிவிட்டு, மலை ஏற வேண்டும். அனறைய தினத்தில்
அதிகாலையில் கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றியவுடன் மலையை
சுற்றி விட்டு மாலை மீது மகா தீபம் ஏற்றியவுடன் மீண்டும் கிரிவலம்
செல்வது சிறப்பாகும்.

கிருஷ்ணன்
----------------------------------------------
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போலே
நண்ணிய நின் முனிங்கு
நசித்திடல் வேண்டும் மன்னாய்...!
-- பாரதி --
---------------------------------------------
for your book mark:-
http://www.geocities.com/singaikrish/