From eramurug@... Mon Jan 07 16:11:33 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 00:11:32 -0000
Received: (qmail 72415 invoked from network); 8 Jan 2002 00:11:31 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 00:11:31 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 00:11:31 -0000
Message-ID: <20020108001131.38421.qmail@...>
Received: from [210.214.128.9] by web14810.mail.yahoo.com via HTTP; Mon, 07 Jan 2002 16:11:31 PST
Date: Mon, 7 Jan 2002 16:11:31 -0800 (PST)
Subject: kapi ragaththil 'kadavuL illai'
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020108071948.00767d50@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14622


சிலிக்குயில் பொதியவெற்பனின் பொன்விழா மலரைப் புரட்டிக்
கொண்டிருந்தபோது, கோவை திரு ஆனைமுத்து, திரு பெ.சு.மணி ஆகியோரின்
கட்டுரைகள் கண்ணில் பட்டன. அவற்றிலிருந்து :

----------------------------------------------
1878'ல் சென்னையில் "தத்துவ விசாரணி" என்ற பெயரில் வார இதழாகத்
தமிழில் முதல் நாத்திக இதழ் தோன்றியது. இந்த இதழின் பெயர் 1882
சூலையில் 'தத்துவ விவேசினி' என்று பெயர் மாற்றம் அடைந்தது. ஞாயிறு
தோறும் வெளிவந்த இதன் பதிப்பாளரும் ஆசிரியரும் பு.முனுசாமி நாயக்கர்
என்பவராவார். சென்னை கெங்கிச் செட்டித் தெருவில் ஆதிகலாநிதி
அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

பத்திரிகையின் உள்ளடக்கத்துக்கு மாதிரி (1882 - டிசம்ப்ர் 30 இதழ்
கட்டுரைகள்)

1. வறுமையை வெறுமையாக்குவது எப்படி
2. மறுமை தோற்றுமா?
3. விதவா விவேக நிரூபணம் சுவஞானச் சாதனை
4. மோசேயின் சில தவறுகள்

1885 செப்டம்பர் 30-ல் வெளிவந்த கட்டுரையின் வரிகள் -

"எக்காலத்திலும் எத்தேசத்திலும் சுயஞ்ஞான அனுபோகத்தைப் பரவச்செய்யப்
பாடுபட்டாருமுண்டு. பாடுபடுபவருமுண்டு. இப்போது ஆங்கிலேய நாட்டில்
திடகாத்திர சிங்கமாகிய பிராட்லா துரையும், அமெரிக்கக் கண்டத்தில்
ஞான முனியாகிய கர்தல் இங்கர்சால் துரையும், பிரான்சு நாட்டில்
மெய்யோகியுமாகிய அட்கின்சன் துரையும், இன்னும் பற்பல தேசங்களில்
பற்பலரும் தத்தம் சுயபாஷையில் தத்தம் கருத்தை வெளிப்படுத்திச் சிறு
புத்தகங்களையும் பிரசங்க ரூபியாகவும் பிரசனோத்ர ரூபியாகவும்
வெளிப்படுத்தி அஞ்ஞான பிரஜைகளுக்கு மெய்ஞான தீபச்சுடர் விளக்கிப் பேரும்
புகழும் பெற்றனர். அம்மாதிரியை அனுசரித்தே, இச்சென்னையில் 'தத்துவ
விசாரிணி' எனும் பெயர் கொண்ட பத்திரிகை பிரசுரஞ் செய்யப்பட்டது."

நாத்திகப் பிரசாரத்திற்காக இசைப்பாடல்களையும் தத்துவ விவேசினி
வெளியிட்டது. 1884=ல் 'நாத்திகப் பெருமை கீர்த்தனம்' எனும் தலைப்பில்
வெளிவந்த பாடல் பின்வருமாறு :

பல்லவி

நயந முடையவரே நாடிக் கொள்வீரே
நாஸ்திகரா மெங்கள் நளிமதியை

அநுபல்லவி

பயமுடன் பக்தி பண்ணுவோரை யிடிப்போம்
பரமேசனையும் வென்று பறை யடிப்போம்
சுயஞான மாமெங்கள் சூரியனுக்கு முன்னே
சுருதியா முங்கள் மதிசுடர் விடுமோ?

இப்பாடலுக்குச் சரணங்கள் இல்லை. பாடலின் ராகம் இந்துஸ்தானி காபியென்றும்
தாளம் ஆதியென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்றியவர் 'கிருஷ்ணகிரி உண்மை
விளம்பி'
---------------------------------------

கட்டுரையைக் கட்டுடைத்து (deconstruct) 'ஞானமுனி இங்கர்சால்",
'மெய்யோகி அட்கின்சன்', 'மெய்ஞான தீபச்சுடர்' போன்ற மதத்
தொடர்பான படிமங்களையும் அவற்றை வைத்து எதிர்மறையான கருத்தோட்டங்களைத்
தெளிவாக முன்வைப்பதையும் பார்ப்பதற்கு முன், இதன் சுவையில் முமுக்க
அமிழலாம்.

அன்புடன்,
இரா.முருகன்

__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/